உலகின் நதிகள் தொடர்பாக பார்க்கின்றபோது, உலகிலே மிக நீளமான நதி மற்றும் பெரிய நதி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் இவை தொடாபான சில சிறு விளக்கத்தை இப்பதிவு தெளிவுபடுத்தும்.
உலகின் நீளமான நதி என்பதை நதியின் தொடக்கத்திலிருந்து அது கடலுடன் கலக்கும் இடம்வரையான பிரதான நதியின் நீளத்தை வைத்தே கணிக்கின்றனர். அவ்வாறு கணிக்கின்றபோது ஆபிரிக்கா கண்டத்தில் காணப்படும் நைல்நதியே உலகின் மிகநீளமான நதியாகக் காணப்படுகின்றது. நைல்நதியின் நீளமாக 6695 கிலோமீற்றர் ஆகவும், அதற்கு அடுத்த நிலையில் நீளம் கூடிய நதியாக 6575 கிலோமீற்றர் நீளமான அமேசன் நதியும் காணப்படுகின்றது. நீளங்கள் தொடாபான சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றபோதிலும் நைல்நதியே நீளமான நதியாகக் காணப்படுகின்றது.
நைல் நதியினை சர்வேதேச நதி என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நதியின் வடிகால் படிகையானது ருவாண்டா, புருண்டி, எரித்திரியா, தெற்கு சூடான், எகிப்து, சூடான் குடியரசு, உகாண்டா, கென்யா, காங்கோ ஜனநாயக குடியரசு, தான்சானியா மற்றும் எத்தியோப்பியா போன்ற 11 நாடுகளின் வடிகால் படிகையினை உள்ளடக்கியதாகும்.
நைல் நதி 11 நாடுகளின் வடிகால் படிகையினை கொண்டிருந்தாலும் கூட சூடான் மற்றும் எகிப்து தான் முதன்மை நீர் ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். நைல் நதிக்கு இரண்டு துணை நதிகளும் உள்ளது. முதல் துணை நதி நீள நைல் நதி மற்றும் இரண்டாவது துணை நதி வெள்ளை நைல் நதியாகும்.
உலகிலே மிகப்பெரிய நதி எனும்போது தென்னமெரிக்காக் கண்டத்தில் உள்ள அமேசன் நதியே காணப்படுகின்றது. பெரிய நதி என்பது நதிகளின் வடிநிலப்பரப்பினை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகின்றது. அந்தவகையில் அமேசன் நதியானது 6,112,000 சதுரகிலோமீற்றர் (2,270,000 சதுர மைல்) வடிநிலப் பரப்பைக் கொண்டு முதலாவது பெரிய நதியாகக் காணப்படுகின்றது. இரண்டாவது பெரிய நதியாக கொங்கோ நதியானது 4,014,500 சதுரகிலோமீற்றர் (1,440,000 சதுர மைல்) வடிநிலப்பரப்பைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. நைல்நதியானது உலகின் பெரிய நதிகளில் மூன்றாவது இடத்தில் காணப்படுகின்றது.
The longest Rivers of the World |
|||||
River Name |
Location |
Length (miles approx) |
Length (km approx) |
Drainage Area |
Flow at mouth |
Africa |
4,160 |
6,695 |
1,170,000 |
1,584 |
|
South America |
4,000 |
6,400 |
2,270,000 |
180,000 |
|
Asia (China) |
3,900 |
6,240 |
698,000 |
35,000 |
|
USA |
3,870 |
6,192 |
1,247,000 |
17,545 |
|
Ob |
Asia (Russia) |
3,459 |
5,534 |
1,154,000 |
12,600 |
Yenisei/ |
Asia (Russia) |
3,440 |
5,504 |
996,000 |
19,600 |
Yellow River |
Asia (China) |
3,440 |
5,504 |
290,000 |
1,365 |
Congo |
Africa (Zaire) |
2,900 |
4,640 |
1,440,000 |
42,000 |
Amur |
Asia |
2,800 |
4,480 |
730,000 |
12,500 |
Parana |
Uruguay |
2,795 |
4,472 |
1,197,000 |
19,500 |
Lena |
Asia (Russia) |
2,700 |
4,320 |
961,000 |
16,400 |
Mackenzie |
North America |
2,640 |
4,224 |
697,000 |
7,500 |
Niger |
Africa |
2,600 |
4,160 |
850,000 |
5,700 |
Asia |
2,500 |
4,000 |
750,000 |
15,900 |
|
Volga |
Europe |
2,300 |
3,680 |
533,000 |
8,000 |
Australia |
2,300 |
3,680 |
410,000 |
391 |
|
Rio-Grande |
USA |
1,885 |
3,016 |
310,000 |
82 |
Source: http://www.primaryhomeworkhelp.co.uk/rivers/longest.htm & Wikipedia
https://en.wikipedia.org/wiki/List_of_river_systems_by_length