புவியியல் - தொலைதூர வழிகாட்டல் வகுப்பு

க.பொ.த. உயர்தரத்தில் புவியியலை ஒரு பாடமாகக் கற்றுக்கொண்டு இவ்வருடம் 2020 ஆகஸ்ட் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக எமது கல்வி நிலையத்தினால் இலவச வழிகாட்டல் தொலைதூர வழிகாட்டல் இடம்பெற இருக்கிறது.

GIT நூல் வெளியீடு

நூலாசிரியர் அக்‌ஷயன் அவர்களால் எழுதப்பட்ட பொதுத் தகவல் தொழினுட்பம், பௌதிகப் புவியியல் அறிமுகம் ஆகிய இருநூல்களதும் வெளியீட்டு நிகழ்வு இன்று (29.12.2019) மாவடிவேம்பில் அமைந்துள்ள தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தில் நிலையத்தின் ஆலோசகர் சி.தில்லையன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த ஆசிரியர் தினம் - 2019

தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த ஆசிரியர் தினமானது கல்வி நிலைய ஆலோசகர் தில்லையன்  அவர்களின் தலைமையில் இன்று (29.12.2019) நடைபெற்றது, இந்நிகழ்விலே கல்குடா கல்வி வலயத்தின் முன்னாள் ஆசிரியர் வள மத்திய நிலையத்தின் முன்னாள் முகாமையாளர் திரு. வி.பஞ்சலிங்கம் அவர்கள் கெரவிக்கப்பட்டார்.

தவசி லேணிங் சிற்றியின் ஆசிரியர் தினம் - 2019 கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள் விபரம்


தவசி லேணிங் சிற்றியின் ஆசிரியர் தினம் - 2019 கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள் விபரம்.

புவியியல் வெளிவாரி மாணவர்களுக்கான தொலைதூர வகுப்பு

பேராதனைப் பல்கலைக் கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முதலியவற்றில் வெளிவாரியாக பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களின் நன்மை கருதி  எமது கல்வி நிலையத்தில் புவியியல் பாடத்திற்கான வழிகாட்டல் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

கல்வியக மீள்கட்டுமானப் பணிகள்

எமது கல்வி நிலையத்தின் தகரங்கள் மற்றும் சலாகைகள் வாங்குகள் என்பன கடந்த வைகாசி மாதம் தொடக்கம்  சேதமடைந்த நிலையில் முறையான பராமரிப்பின்றி காணப்பட்டது. இதனை அறிந்து கல்வி நிலைய முகாமையாளரால் மீளக் கொட்டகைகளை திருத்தியமைப்பதற்கு முகப்புத்தகம், வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி மூலமும் பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. 

தரம்10, 11 தமிழ் நூல் வெளியீடு

தரம் - 10, 11 மாணவர்களுக்கான தமிழ், ஆசிரியர்கள் பாடத்திட்ட முகாமைத்துவத்திற்கு தரவு பதிவு பேணும் நூல்கள் ஆகியவற்றின் வெளியீடு இன்று (22.08.2019) தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தில் நடைபெற்றது. 

புவியியல் ஓர் அறிமுகம் - நூல் வெளியீடு

நூலாசிரியர் அக்‌ஷயன் அவர்களால் எழுதப்பட்ட தரம் - 12 மானிடப் புவியியல், வெளிவாரிப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான புவியியல் ஓர் அறிமுகம் ஆகிய இரண்டு நூல்களதும் வெளியீடு இன்று (11.08.2019) வெளியிட்டு வைக்கப்பட்டது.  தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது மாவடிவேம்பு சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் திரு.சி.தில்லையன் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

வருடாந்த கல்விச் சுற்றுலா - 2019

தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த கல்விச் சுற்றுலாவானது கடந்த 16.04.2019 அன்று இடம்பெற்றது. இக்கல்விச் சுற்றுலாவில் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிலைய ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

தவசி லேணிங் சிற்றியின் ஆசிரியர் தினம் - 2018 கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள் விபரம்

தவசி லேணிங் சிற்றியின் ஆசிரியர் தினம் - 2018 கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள் விபரம்.

தவசி‬ லேணிங் சிற்றியின் வருடாந்த ஆசிரியர் தினம் - 2018

தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு இன்று (22.12.2018) கல்வி நிலைய முகாமையாளர் க.சிவாங்கன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

நிலவுருவங்கள் (பெளதிகப் புவியியல் ) நூல் வெளியீடு

உயர் தர மற்றும் பல்கலைக்கழக புவியியல் மாணவர்களுக்கான புறவிசை நிலவுருவங்கள் (பௌதிகப் புவியியல்) எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று (28.08.2018)மாவடிவேம்பு தவசி லேணிங் சிற்றி கல்விநிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

வருடாந்த கல்விச் சுற்றுலா - 2018

தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த கல்விச் சுற்றுலாவானது இம்முறை வராலாறு சார்ந்த இடங்களான சீகிரியா புராதன நகரம், பொலனறுவை புராதன நகரம் ஆகிய இரு பெரும் பிரதேசங்களை மையப்படுத்தி அமைந்திருந்தது.

புவியியல் தரம் 8 - நூல் வெளியீடு

நூலாசிரியர் அக்‌ஷயன் அவர்கள் எழுதிய புவியியல் தரம் -8, அமைவிடங்கள், வலையமைப்பும் இணையத்தளமும் ஆகிய மூன்று நூல்களின் வெளியீடு இன்று (30.12.2017) மாவடிவேம்பில் அமைந்துள்ள தவசி லேணிங் சிற்றி கல்வியத்தில் நடைபெற்றது.  

ஆசிரியர் தினம் -2017 கௌரவிக்கப்பட்டவர்கள் விபரம்

ஆசிரியர் தினம் -2017 கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்களுடைய விபரம்
தவசி லேணிங் சிற்றியின் ஆசிரியர் அக்சயன் அவர்களால்  நடாத்தப்பட்ட ஆசிரியர் தின நிகழ்விலே ஆசிரியர்கள், ஊக்கமளித்து வரும் பெரியோர்கள் கௌரவிக்கப்ட்டார்கள்.

தவசி‬ லேணிங் சிற்றியின் வருடாந்த ஆசிரியர் தினம் - 2017

தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு இன்று (05.09.2017) கல்வி நிலைய ஆலோசகர் சி.தில்லையன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. க.சூரியகுமாரன் (மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வின்போது செல்வி மூ.சந்திரலேகா (ஆசிரியர், வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயம்), திரு. சா.கதிர்காமத்தம்பி (ஆசிரியர், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்), திரு. க.சக்தியானந்தன் (மேற்பார்வை பொதுச் சுகாததாரப் பரிசோதகர், முன்னாள் கராத்தே ஆசிரியர்) அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் பிரதம அதிதியின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.

மேலும் இந்த நிகழ்வில் கல்வி நிலைய பிரதிப் பணிப்பாளர் க.சிவாங்கன், கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

திருகோணமலைக்கான சுற்றுலா - 2017

மாவடிவேம்பில் அமைந்துள்ள தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தின் வருடாந்த கல்விச் சுற்றுலாவானது 16.04.2017 (ஞாயிற்றுக் கிழமை) அன்று இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டத்தின் அம்சங்களைப் பார்வையிடுவதற்கான இச்சுற்றுலாவில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் நிருவாகத்தினரும் கலந்துகொண்டனர்.

தகவல் தொழினுட்ப நூல் வெளியீடு

தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் (ஓர் அறிமுகம்), தரம் 6 புவியியல், உயிரினப் புவியியல், உயர்தரப் புவியியல் பயிற்சி ஆகிய நூல்களின் வெளியீடு இன்று மாவடிவேம்பிலுள்ள தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தில் நடைபெற்றது. 

ஆசிரியர் தினம் -2016 கௌரவிக்கப்பட்டவர்கள் விபரம்


தவசி லேணிங் சிற்றியின் ஆசிரியர் தினம் - 2016 கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள் விபரம்


1. திருமதி மங்கம்மா - சோதிநாதன் (சங்கீத ஆசிரியர்)
2. திருமதி வாணிசிறி - தவராசா (அபிவிருத்தி உத்தியோகத்தர், முன்னாள் ஆசிரியர்)
3. திருமதி வசந்தி - காந்தி  (நூலக உதவியாளர், முன்னாள் ஆசிரியர்)

தவசி‬ லேணிங் சிற்றியின் வருடாந்த ஆசிரியர் தினம் - 2016

தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு கடந்த (31.12.2016) கல்வி நிலையத்தின் திட்டமிடல் இணைப்பாளர் அக்‌ஷயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
 
Our Websites : GEOGRAPHY IN TAMIL | TLC-Downloads | TLC-Files
Copyright © 2006-2019. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger