ஆய்வுகளில் தரவு சேகரித்தல்

ஆய்வொன்றை மேற்கொள்கின்றபோது தரவு சேகரித்தல் என்பது முக்கியமான ஒரு விடயமாகும்'. எனவே தரவு என்றால் என்ன? தரவுகளின் வகைப்படுத்தல், தரவுசேகரிப்பு முறைகள் ஆகிய விடயங்களை இக்கட்டுரை விளக்குகின்றது.

தரவு(DATA)

தரவு என்பது தருதல் என பொருள்படுகின்றது. அந்தவகையில் ஓரு முடிவை எடுப்பதற்கு அடிப்படையாக பயன்படுத்தப்படுகின்ற எண்கள் அல்லது உண்மைகள் தரவு என அழைக்கப்படும். இதிலிருந்து தரவுகள் எண்களாகவோ அல்லது பண்புகளாகவோ காணப்படும்.

AKSHAYAN - THAVASI LEARNING CITY  

தரவு வகைகள்(Type of Data)

தரவுகளை பொதுவாக எண் சார்ந்த தரவுகள், பண்பு சார்ந்த தரவுகள் என பிரிக்கலாம். புள்ளியியலில் பயன்படுத்தப்படும் தரவுகளை அவற்றின் எண் பெறுமானம் சேகரிக்கப்படும் முறை ஒழுங்குபடுத்தல் நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

தரவுகளை எண் பெறுமான அடிப்படையில் வகைப்படுத்தல்

எண் பெறுமான அடிப்படையில் தரவுகளை தொடர்ச்சியான தரவு என 02 ஆக வகைப்படுத்தலாம்.

தொடர்ச்சியான தரவு: தரவுகளின் பெறுமானங்கள் முழுமையான எண்களாகவும்அத்துடன் தசமம் அல்லது பின்னமாகவும் கிடைக்கின்ற போது அவை தொடர்ச்சியான தரவு எனப்படும். அதாவது இங்கு வீச்சுக்கள் மூலம்காட்டப்படக்கூடியதாக இருக்கும். தொடர்ச்சியான தரவுகள் பெரும்பாலும் நிறை, நீளம் முதலிய அளவைகளுடன் தொடர்புடையதாக காணப்படும்.


உதாரணம்: 2011ம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத;தில் இடம்பெற்ற வெள்ளத்தில் உயிரிழந்த நாய்களின் நிறைகள்


பின்னகமான தரவு: தரவுகளின் பெறுமானங்கள் முழுமையாக எண்ணில் மாத்திரம் கிடைக்கின்ற போது அவை பின்னகமான தரவு எனப்படும். பின்னகமான தரவுகள் பெரும்பாலும் எண்ணிக்கையுடன் தொடர்புடையதாக காணப்படும்.


உதாரணம்:-ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒவ்வொரு கிராமங்களில் உள்ள கைத் தொலைபேசிகளின் எண்ணிக்கை.

AKSHAYAN - THAVASI LEARNING CITY  

தரவு சேகரிப்பு முறையின் அடிப்படையில் தரவினை வகைப்படுத்தல்

முதன்மைத் தரவு (Primary Data): ஆய்வொன்றுக்காக ஒரு ஆய்வாளன் தாமே நேரடியாக சேகரிக்கும் தரவுகள் முதன்மைத் தரவுகள் எனப்படும்.முதன்னிலைத்தரவுகளை நேரடியாகவோ அல்லது களப்பணியாளர்களாகவோ அல்லது ஆய்வு நிறுவனங்கள் முலமாகவோ சேகரிக்கமுடியும்.

இரண்டாம் நிலைத் தரவு (Secondary Data): பலவித நோக்கங்களுக்காக முன்பே சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருந்து தற்போதைய ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தரவுகள் இரண்டாம் நிலைத்தரவு என அழைக்கப்படுகின்றது.

உதாரணம்:-வருடாந்த அறிக்கைகள், ஆய்வு நிறுவனங்களின் வெளியீடுகள் போன்றலற்றை குறிப்பிடலாம்.


ஒழுங்குபடுத்தல் அடிப்படையில் தரவு வகைகள்

ஒழுங்குபடுத்தப்பட்ட தரவு(Arranged Data): ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட தரவுகள் களக்குறிப்பேட்டில் (Field Book)  இருந்து ஒரு அட்டவனை அல்லது ஏதாவது ஒரு முறையில் அனைத்து தரவுகளும் தொகுக்கப்படுதல் ஒழுங்குபடுத்தப்பட்ட தரவு எனப்படும்.

உதாரணம்:-மீடிறன் பரம்பல் அட்டவனைஇபுPளு ஆள்கூறுகளை நிலவரைபடத்தில் காட்டல்.

ஒழுங்குபடுத்தப்படாத தரவு அல்லது பச்சைத் தரவு (Raw Data): ஆய்வின் போது சேகரிக்கப்பட்ட தரவுகள் ஒழுங்குபடுத்தப்படாத நிலையில் களப்புத்தகத்தில் பதியப்படும் போது அவை பச்சைத் தரவு அல்லது ஒழுங்குபடுத்தப்படாத தரவு எனப்படும்.

AKSHAYAN - THAVASI LEARNING CITY  

தரவு சேகரிப்பு முறைகள் அல்லது உத்திகள்

ஆய்வினுடைய முதவாவதும் முக்கியமானதுமான படிமுறையாக காணப்படுவது தரவு சேகரித்தல் ஆகும். தரவு சேகரிப்பு வழிமுறைகள்  பல உள்ளன. அவற்றை பிரதானமாக முதன்மைத் தரவு சேகரிப்பு முறைகள் இரண்டாம் நிலைத் தரவு சேகரிப்பு முறைகள் என இரண்டாகப் பாகுபடுத்தலாம்.

முதன்மைத் தரவு சேகரிப்பு முறைகளாக வினாக்கொத்து, அவதானிப்பு, அளவை, கலந்துரையாடல், பேட்டிகாணல் முதலியவற்றைக் குறிப்பிடலாம். 

இரண்டாம்நிலைத் தரவு சேகரிப்பு முறைகளாக ஆண்டறிக்கைகள், ஆய்வுகள், இணையத்தளங்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள், விம்பங்கள், ஒலி மற்றும் காணொளி ஆவணங்கள் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.


அவதானிப்பு

ஒரு  குறித்த ஆய்விற்;காக ஒரு நிலைமையை ஆய்வாளர்கள் நேரடியாக அவதானித்து உற்று நோக்கல் முறை அவதானிப்பு எனப்படும். ஒரு குறித்த நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அவதானிப்பு இடம்பெறலாம். ஆவதானப்பு என்பது பொதுவாக 02 வகையில் இடம்பெறும். ஆவதானிக்கும் செயலானது ஒருவருக்கு தெரிந்தும் இடம்பெறலாம். அவருக்கு தெரியாமலும் இடம்பெறலாம்.

உதாரணம்:-இடம்பெயர்வு ஒன்றின் போது மக்களின் மாதிரிப்பெயர்பு கோலத்தைக் கண்டறிதல்.

அவதானித்தல் மூலம் 04 வகையான அமைவுகள் பற்றிய தரவுகளை பெறமுடியும்.

பௌதிக அமைவு – பௌதிக சூழலும் அதன் ஒழுங்கமைப்பும்

மனித அமைவு – உற்று நேக்கப்படும் ஆட்கள் பற்றியது

இட அமைவு – குறித்த நிலைமைகளில் காணப்படும் சகல இடவினை செயல்களும்

திட்ட அமைவு – குறித்த நிலைமையின்வளங்களிளும் அவற்றின் ஒழுங்கமைப்பும்


நேர்காணல் அல்லது பேட்டிகாணல் 

நேர்காணல் என்பது நேரடியாகவே தகவலாளியிடம் வாய்மொழி மூலமாக பெற்று கொள்ளும் ஓர் உபாயமாகும். நேர்காணல் முறையினை இரு பெரும் வகையாக நோக்கலாம்.

அமைப்பு நேர்காணல் அல்லது முறைசார் நேர் காணல் :- ஆய்வுக்கு பெற வேண்டிய முன்னோக்கில் அமைக்கப்பெற்ற வினாப்பட்டியலுடன் நேர்காணல் பட்டியலுடன் அனுகி அதன் ஒழுங்கின் படி தகவல்களை சேகரித்து பதிவு செய்தல் அமைப்பு நேர்காணல் எனப்படும்.

முறைமையற்ற நேர் காணல் :- வினாப்பட்டியல் அல்லது ஒழுங்கு முறையின்றி கலந்துரையாடல் மூலம் தகவல்களை சேகரித்தல் முறைமை அற்ற நேர்காணல் எனப்படும்.


வினாக்கொத்து முறை

ஆய்வாளரின் நேரடி பங்குபற்றல் இன்றி ஏற்கனவே தயார் செய்யப்பட்ட வினாக்களின் தொகுப்பை ஏககாலத்தில் பல்வேறு இடங்களில் ஏராளமானோருக்கு வழங்கப்பட்டு தரவுகளை ஏற்றுக்கொள்ளும் முறை வினாக்கொத்து முறை ஆகும்.வினாக்கெத்தானது தரவு சேகரித்தலின் பொருட்டு பெரும்பாலான ஆய்வாளர்களால் பயன்படுத்தும் கருவியாகும். வினாக்கொத்துமுறைiயான இரண்டு வகைப்படும்.

ஆய்வுக்காக தயார் செய்யப்பட்ட வினாக்கொத்தை ஆய்வாளனோ அல்லது ஆய்வாளனின் உதவியானரோ நேரில் வழங்கப்பட்டு தரவு சேகரித்தல்.

ஆய்வாளர் நேரடியாகவோ ஆய்வாளரின் உதவியாளர் வினாக்கொத்தினை வழங்கமுடியாத நிலைகளில் தபால் இணையம் மூலம் அனுப்பி சேகரிக்கும் முறை அஞசல் வழி வினாக்கெத்து முறைமையாகும்

அளவை

ஆய்விற்கு தேவையான தரவுகளை களத்தில் நேரடியாக சென்று அளவிடுதலின் மூலமே  nhற்றுக்கொள்ளுதல் அளவை முறை தரவு சேகரித்தல் எனப்படும். குறிப்பாக நீளம், உயரம், நிறை, கொள்ளளவு போன்ற அளவீடுகள் இத்தகைய விதத்தில் சேகரிக்கப்படுகின்றன குறிப்பாக வானிலைத் தரவு பௌதீக ரீதியான அம்சங்களின் தரவு போன்ற புவியியல் சார்ந்த தரவுகள் இத்தகைய விதத்தில் அளவீடுகள் முலம் பெறப்படுகின்றது. ஓர் இடத்தின் அமைவிடத்தினை பெற்றுக்கொள்ளும் நோக்கிலாக புPளு ஆள்கூறுகள் முறைகளும் இதற்குள் அடங்கும்.

சோதனைகள் 

கல்வி சார் ஆய்வுகளில் குறிப்பாக மாணவர்கள, ஆசிரியர்கள் மற்றும் ஏனைய வகை கல்விப்புல ஆளனிகளுக்கிடையே காணப்படும் தொகை அளவுசார் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் தரவு சேகரிக்கும் கருவிகளாக சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. முhணவரின் பாட அளவை அளவிடும் பொருட்டு பாடசாலை மடடத்தில் நடத்தப்படும் சோதனைகளும் பொது சோதனைகளும் ஆய்வின் பொருட்டு பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன .

அறிக்கைகள் 

இரண்டாம் நிலைத் தரவு சேகரிப்பு மூலங்களாக காணப்படுவற்றுள் அறிக்கைகளும் ஒன்றாகும்.பல்வேறு அரச சார்பான அமைப்புகளால் அல்லது அரச சார்பற்ற அமைப்புகளால் வருடந்தோறும் வெளியிடப்படுகின்றன ஆண்டறிக்கைகள் மற்றும் ஆய்வு சம்மந்தமான வெளியிடப்படுகின்ற அறிக்கைகள் இஙகு இரண்டாம் நிலைத் தரவு மூலங்களாக அமைகின்றது.

                                                                         குறிப்பாக மத்திய வங்கியினால் வெளியிடப்படுகின்ற ஆண்டறிக்கைகள் புள்ளியியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற ஆண்டறிக்கைகள்  அமைப்பினால் வெளியிடப்படுகின்ற ஆண்டறிக்கைகள் முதலானவற்றை குறிப்பிடவாம். ஆத்துடன் அறிக்கைகள் மாத்திரமினறி வெளியிடப்படாத சில ஆவணங்களும் மற்றும் சஞ்சிகைகனும் இதனுள் அடங்கும்.

ஊடகங்கள்  

இரண்டாம் நிலைத்தரவு சேகரிப்பு மூலங்களாக ஊடகங்கள் விளங்குகிறது. புத்pரிகைகள், தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றின் மூலம் இரண்டாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட முடியும். வானொலி தொலைக்காட்சிகளில் தெரிவிக்கின்ற அன்றாட செய்திகள் மற்றும் தினசரி அல்லது மாதத்திற்குரிய பத்திரிகைகள் தாங்கி வரும் செய்திகள் என்பன  தரவுகளை உடனுக்குடன் உத்தியோக பூர்வமாக பெற்று கொள்ள வழியமைக்கின்றன.

உதாரணம்:-தேர்தல் காலங்களிலான விசேட ஒலிபரப்புகள், நாளாந்த வானிலைத் தரவு, அனர்த்த நிகழ்வுகளின் போதான தரவுகள் என்பவற்றை குறிப்பிடலாம்.   

விம்பங்கள் அல்லது படங்கள்

புவியியல் இடம் சார்ந்த தரவுகளை பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்தப்படுகின்ற இரண்டாம் நிலைத்தரவு மூலங்களாக விம்பங்கள் அல்லது படங்கள் விளங்குகின்றன. நிலப்பயன்பாட்டு, சனத்தொகை தகவல்கள், வானிலைத்தகவல்கள், தரைத்தோற்றம், இயற்கை தாவரவகை போன்ற பல்வேறு பட்ட தகவல்களை இடத்தோடு சம்மந்தப்பட்ட படங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக இடவிளக்கவியல் படங்கள், விமான ஒளிப்படங்கள், செய்மதி விம்பம் முதலியன அடங்கும்.  


உதாரணம்:-1:50000 மெற்றிக் இடவிளக்கவியல் படம், ஆண்டு ரீதியான செய்மதிப்படம்.

இணையத்தளம் (Internet)

நவீன உலகில் இரண்டாம் நிலை தரவு சேகரிப்பு முறைகளின் தனித்துவமும் பிரபல்யமானதுமான தரவு சேகரிப்பு மூலமாக இணையத்தளம் விளங்குகிறது. பொதுவாக வருடாந்த அறிக்கைகளோ அல்லதுசெய்தித்தாள்களோ இ வானொலிஇதொலைக்காட்சிநிகழ்ச்சிகளோ அனைத்தையும்  இன்று இனையத்தளத்திற்கு ஊடாக அடையமுடிகின்றது. டிஜிட்டல்(எண்ணிலக்க முறைமை) அமைந்த தரவுத்தளங்கள் இன்று மிகவும் சிறப்பாக இயங்குவதற்கு இந்த இணையத்தளங்கள் வழிவகுத்து கொடுத்துள்ளது. குறுகிய நேரத்தில் தகவல்களைப் பெறல் எவ்விடத்தில் இருந்தும் தகவல்களைப் பெறல் போன்ற சில தனித்துவமான  பயன்களை இந்த இணையத்தளம் கொண்டுள்ளது.

உதாரணம்:-சர்வதேச அனர்த்தத் தரவுத்தளம் 

இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் இணையத்தளம் அத்துடன் இணையத்தளத்தில் தரவுகளை மிக இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு தேடுபொறிகள் துணைபுரிகின்றன.

உதாரணம்:-Google, Bing, ask


முதலாம் நிலைத்தரவுகளின் குறை நிறைகள்

ஆய்வாளரால் ஆய்வு மேற்கொள்ளப்படும் அடப்பரப்பு சிறிதாக இருக்கும் போது மட்டுமே இம் முறையில் தரவுகளை சேகரிக்க முடியும்

பிரதிநிதிகளை அனுப்பி தரவுகளை சேகரிப்பதற்கு செலவு அதிகரிப்பதுடன் தகவல் தருவோர் சரியான விபரங்களை அளித்துள்ளார்களா?என்பதை ஒருமுறைக்கு இருமுறை கவனம் செலுத்த வேண்டும்.

கேள்விகள் தர்ம சங்கடமாகவோ மிகச் சிக்கலாகவோ ஒருவரின் ரகசியத்தை வெளிப்படுத்துவதாக அமையுமானால் வினாக்கொத்தில் உள்ள விபரங்கள் துலலியமானதாகவும்  சரியாகவும் நிரப்பப்பட்டு இருக்காது.

வினாக்கொத்தின் மூலம் முதல்நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டாலும் தபால் மூலம் வினாப்பட்டியலை அனுப்பி விபரங்களை சேகரித்தலோ குறைவான செலவிலும் குறைவான நேரத்திலும் முடிக்க முடியும்.

இரண்டாம் நிலை விபரங்களை விட முதல்நிலைத்தரவு சேகரிப்பு முறைகள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள ;மிகுந்த நம்பகத்தன்மை உடையன.


இரண்டாம் நிலைத்தரவுகளின் குறைநிறைகள்

மிகக் குறைந்த செலவில்  இரண்டாம் நிலைத்தரவுகளை சேகரிக்க முடியும்.

ஆரச வெளியீடுகளும் மிகக் குறைந்த செலவில் கிடைக்கின்றன.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் சேகரிக்கப்பட்;ட தரவுகள் நூலகங்களில் கிடைக்கின்றன.

தேடு பொறிகள் மற்றும் தரலுத்தளங்களின் உதவியுடன ;இனையத்தளங்களில் இருந்து தரவுகளைப் பெறலாம்.

பல வருடங்களாக சேகரிக்கப்பட்ட தரவுகளை 2ம் நிலைத்தரவுகளாக பெற முடியும்.

S.Akshayan  [B.A (Hons) Special in Geography, MA in Geography(R) , PGDE]


Download Notes in PDF Format (click to download)