ஆய்வொன்றில் மாதிரியெடுத்தல்

 

ஆய்வுகளை மேற்கொள்ளும்போது ஆய்வுப் பிரதேசத்தில் முழுமையாக தரவுகளை சேகரிப்பதென்பது கடினமானதாகும், காலவிரயம், பணவிரயம் என்பவற்றை ஏற்படுத்தக்கூடியதும் ஒன்றாகும். இதனால் ஆய்வுப்பிரதேசத்தில் உள்ளடங்கும் ஒரு குறிப்பிட்ட சில கூறுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தரவு சேகரிக்கப்படுகின்றது. 


ஆய்வுக்குட்படும் முழுமைத்தொகுதி ஒன்றிலிருந்து ஆய்வாளானால் தெரிந்தெடுக்கப்படுவதற்காக அடையாளப்படுத்தப்படும் அலகுகளைக் கொண்ட தொகுதி மாதிரி (Sample) எனப்படும்.
  
புள்ளியியலில், ஒரு முழுத் தொகுதியில் (population) இருந்து சில கூறுகளை (subset of individuals) மட்டும், அந்த தொகுதி தொடர்பாக தகவல் தரக்கூடியவாறு தெரிவு செய்தல் மாதிரியெடுத்தல்(Sampling) எனப்படும். பல்வேறு மாதிரி எடுப்பு முறைகள் காணப்படுகின்றபோதும் இங்கு சில முக்கியமான மாதிரி எடுப்பு முறைகள் விளக்கப்படுகின்றன.

எழுமாற்று மாதிரி எடுப்பு(Random sampling)

ஒரு முடிவுறு முழுமைத் தொகுதியில் உள்ள உறுப்புக்களை தெரிவு செய்யும் போது ஒவ்வொரு உறுப்பும் தெரிந்தெடுக்கப்பட்ட சமவாய்ப்பு அமையுமானால் அவ்வகையில் பெறப்பட்ட சில உறுப்புக்களை கொண்ட மாதிரி சாதாரண எழுமாற்று மாதிரி அல்லது  சமவாய்ப்பு மாதிரி எனப்படும்.

எழுமாற்று மாதிரியை பொறுத்த வரையில் குலுக்கல் முறை, சமவாய்ப்பில் எண்களை தரும் பட்டியல் முறை என இரண்டு வகையான கணிப்புக்கள் காணப்படுகின்றன.பொதுவாக அதிகளவில் பயன்படுத்தபடுவது குலுக்கல் முறையாகும்.

உதாரணம்-அதிஷ்டலாப சீட்டிழுப்பு

முறைமையான மாதிரி (Systematic sampling)

நாம் வரையறுத்த வடிவத்திற்கு உட்பட்டு முதலுறுப்பை சார்ந்து முறையாகவும் தொடர்ச்சியாகவும் மற்றைய உறுப்புகளை தேர்ந்து எடுக்கும் முறை முறைசார்ந்த மாதிரி எடுப்பு எனப்படும். இங்கு முதலாவது உறுப்பு மாத்திரம் எழுமாற்று முறையில் தேர்ந்து எடுக்கப்படுவதுடன் ஏனைய உறுப்புகள் ஓர் வடிவத்தில் தேர்ந்தெடுக்கப்படும்.

உதாரணம்- ஒரு வழங்கல் நிலையத்திற்கு சராசரியாக 100 மக்கள் வந்து சேர்கின்றனர் எனின் அந்த 100 பேரில் 10 பேர் எண் இடைவெளி அடிப்படையில் தெரிவு செய்யப்படும்.

கொத்து மாதிரி எடுப்பு (Cluster sampling)
முழுக் குடியில் உள்ள அனைத்து அலகுகளையும் பல தொகுதிகளாக  பிரித்து அவற்றில் இருந்து எமக்கு தேவையான தொகுதியினை தெரிவு செய்தல் கொத்து மாதிரி என அழைக்கப்படுகிறது. குடிச் சேர்வைகள் வேறுபடுத்தபபட்டும் அத்தோடு அணைத்தையும்ம் அடைவதும் கடினமாக இருக்கின்ற பட்சத்தில் செலவை குறைப்பதற்காக இத்தகைய முறை மேற்கொள்ளப்படுகிறது   உதாரணம்;-நகரங்கள் அதி தொலைவில் இருத்தல்
படையாக்க மாதிரி(Stratified sampling )
முழுமைத் தொகுதி பல பிரிவுகளாக  பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் சமவாய்ப்பு முறையில் மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்படும் முறை படையாக்க மாதிரி அல்லது பகுதி முறை மாதிரி எனப்படுகின்றது இங்கு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒழுங்கு முறை மாதிரி எடுப்பு முறை  அல்லது எழுமாற்று மாதிரி எடுப்பு முறையில் மாதிரிகள் தெரிவு செய்யப்படும்
தீர்மானிக்கப்பட்ட மாதிரி (Judgment sampling)

ஆய்வாளர் மிகவும் தேர்ச்சி உள்ளவராகவும் அதே வேளை ஆய்வு பிரதேசத்தில் தாம் தெரிவு செய்ய இருப்பதை தவிர வேறு தெரிவுகள் இல்லாத சந்தர்ப்பத்தில் ஆய்வாளரால் எடுக்கப்படுகின்ற மாதிரி தீர்மானிக்கப்பட்ட மாதிரி எனப்படுகின்றது.  இதற்கு உதாரணமாக தேர்தல் காலங்களில் மக்களின் கருத்துக்களை அறிவதற்காக வியாபார மையங்கள் அல்லது வீதிகள் ஆகியவற்றில்  காணப்படுகின்ற மக்களை தெரிவு செய்தல் .

பங்குவீத மாதிரி முறை (Quota sampling)
சில தனித்துவமான ஆய்வுகள் மற்றும பெறுமதியான சிறந்த முடிவுகள் தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த முறை பயன்படுத்தபடுகிறது. ஆய்வாளரார் நிச்சயிக்கப்பட்ட குடி அலகுகளின் எண்ணிக்கை மாதிரிக்காக தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில் வகுக்கப்பட்ட குழுக்களிலிருந்து தமது விருப்பத்தின் படி தெரிவு செய்தல் பங்கு வீத மாதிரி முறை எனப்படும். உபகுழுக்களை கொண்ட பரந்த முழுமைத் தொகுதிக்கு ஆய்வாளனால் அடையமுடிகின்ற  போது   இம்முறை பயன்படுத்தப்படுகிறது.

Article By :- AKSHAYAN