விவசாயத்துறையின் வளர்ச்சி

மண்ணிலிருந்து பயிர்களை வளர்க்கும் கலையே விவசாயமாகும். இது உழுதல் மாத்திரமன்றி அவனது முயற்சியின் மூலம் மண்ணிலிருந்து கூடிய பயனைப் பெறும் ஓர் முயற்சியாகும். இதில் பயிர்களின் வேளான்மை, மிருகவளர்ப்பு என்பனவும் அடங்கும். விவசாயமானது உலகம் முழுவதிலும் முனைவுப் பிரதேசங்களைத் தவிர வேறு எல்லாப் பொருத்தமான பிரதேசங்களிலிலும் மேற்கொள்ளப்படும் மிகவும் முக்கியமான மனித நடவடிக்கைகயாகும்.


  மனிதன் தோன்றிய காலத்தில் விலங்குகளுக்கு சமமாக பிற்படைந்த மாற்றமில்லாதவனாகக் காணப்பட்டான். காடுகளில் கிடைக்கப்பெற்ற காய்கனிகளை உண்டும், வேட்டை ஆடுதலின் மூலம் கிடைக்கப் பெற்ற இறைச்சியை உண்டும், மழையிலும் வெயிலிலும் மிகச்சிறிய எண்ணிக்கையில் இக்காலப்பகுதியி;ல் உலகின் ஒரு சில பகுதிகளிலே வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. அவனது வாழ்க்கைக் காலம் மிகக் குறுகியதாகவே காணப்பட்டது. நோய்களினாலும் விலங்குகளின் தாக்குதல்களிலும் அவனது வாழ்வு காலப்பகுதி பெரும்பாலும் 20- 30 வயதுகளுக்கு வரையறுக்கப்பட்டிருந்தது.

 விவசாயம் என்றால் என்ன என்பதையோ, நிரந்தரமான வாழ்விடம் என்பதையோ அறிந்திராமல் காடுகளில் விலங்குகள் போல அலைந்து திரிந்த மனித சமூகத்தில்பழைய கற்காலம் எத்தகைய புதிய பரிமானங்களையும் கொண்டு காணப்படவில்லை.  விலங்குகளைக் கொல்வதற்காக செம்மையற்ற கல் ஆயுதங்களைப் பயன்படுத்தினர். மரங்களின் கீழும், வெறும் தரைகளிலும் படுத்துறங்கி தமது வாழ்வைக் கழித்தார்கள். தமது உடலை மறைக்கும் எந்த நுட்பமும் அவர்களால் கண்டறியப்படவில்லை. எனவே பழைய கற்காலம் மனித வாழ்க்கையில் இருண்ட காலமாகவே காணப்பட்டது.
  கி.மு. 8000 இலிருந்து மனித வாழ்க்கையில் புதிய பரினாமம் வளர்ந்தது. புதிய கற்காலப் பகுதியில் கண்டுபிடிப்புகள் நாகரிகமான வாழ்க்கையில் ஓர் அடி எடுத்து வைக்கப்பட்ட நிலமை சற்று வளர்ந்த குடித்தொகை போன்ற புதிய விடஙக்ளைக் காணமுடிந்தது. மனிதன் முதன்மதலாக பயிர்ச்செய்கையில் ஈடுபட முனைந்தமை இக்காலப்பகுதியில் ஆகும். காடுகளில் மரங்களில் இருந்து விழுந்த விதைகள் மழைக்காலத்தில் தாமாகவே முழைக்க ஆரம்பித்ததை அவதானித்த தனது கூட்டத்தவரின் பசித்தேவையை தீர்க்கும் முகமாக ஒரு சில விதை இனங்களை பயிரிட்டனர். நைல் நதி;கழிமுகம், யாக்கிசிக்கியாங், சிந்துவெளிப்பிரதேசங்கள் என்பவற்றில் மனிதன் கோதுமையைப் பயிரிட்டதற்கான சான்றுகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
  புதிய கற்காலத்தில் நடந்த மற்றொரு மாற்றம் குறிப்பிட்ட சில விலங்குகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தமையாகும். தான் உண்டு பண்ணிய பயிhகளின் மத்தியில் கால்நடைகளின் புழக்கத்தை அதிகரிக்கச் செய்து நிலத்தை வளப்படுத்தினான். இக்காலப்பகுதியில் மனிதனில் ஏற்பட்ட மற்றொரு மாற்றம் நிரந்தரமான வதிவிடங்களை ஏற்படுத்த முனைந்தமையாகும். பயிர்ச்செய்கைiயைக் கண்டறிந்தமை, கால்நடைகளை வளர்க்க முனைந்தமை அவனது இடப்பெயர்வுக்கு தடையாக அமைந்தது. இதனால் அவன் மலைக்குகைகளிலும், மரப்பொந்துகளிலும் தனது வாழ்விடங்களை அமைத்துக் கொள்ள முற்பட்டான்.

  புதிய கற்காலத்தில் மனிதனது வாழ்க்கைப் பாதையில் நெருப்பைக் கண்டறிந்தமை மற்றொரு திருப்புமுனையாகக் காணப்பட்டது. மரக்கறிவகை , இறைச்சிவகை என்பனவற்றை ஓரளவு வெப்பமூட்டி சுவையான உணவாக மனிதன் உட்கொள்ள ஆரம்பித்தான். இக்காலப்பகுதியில் பயிhச்செய்கை முறை கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
  மனிதனின் பரினாம வளர்ச்சியில் புதிய கற்காலத்தை அடுத்த காலப்பகுதியில் ஓரளவு நாகரிகம் நிறைந்த ஒன்றாக மாறத் தொடங்கியது. மகாவம்சத்தில் ஆரியர்கள் இலங்கையை வந்தடைந்தபோது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பயிர்செய்கை நடவடிக்கைகளை இந்தியாவில் ஆரம்பித்த பயிர்ச்செய்கைiயை ஆரம்பித்ததாக கூறப்பட்டுள்ளது.  ஆயினும் தேவநம்பிய தீசன் ஆடசிவரையில் இலங்கையில் விவசாயம் இடம்பெற்றதற்கான அறிகுறிகள் மிகக்குறைவாகவே உள்ளது. ஆனால் உலக ரீதியில் பெரும்பாண்மையான மக்கள் மத்தியில் உணவுத் தயாரிப்பிற்கான பிரதான தொழில்நடவடிக்கையாக விவசாயம் ஆரம்பித்தது.

   ஐரோப்பிய நாடுகள், லத்தீன் அமெரிக்கா, கிழக்காசியா, தென்னாசியா ஆகிய பகுதிகளிலும் மேற்காசியாவில் பாரசீகம் தொடக்கம் இந்திய மேல் எல்லை வரையில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் விரிவடைந்து இருந்ததாக பல்வேறு வரலாற்றுக் குறிப்புக்களிலிருந்து அறியமுடிகின்றது. எனினும் வித்தியாசமான பயிhவகைகளும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 இலங்கை இந்தியா ஆகியவற்றிலிருந்து நெற்பயிர்ச்செய்கை பல இடங்களிலும் பரவத்தொடங்கியது. சிந்துநதிக் கழிமுகப் பகுதிகள், நைல்நதி யூப்பிரடிஸ் தைகிறீஸ் படுக்கைககள், வடசீன பிரதேசங்கள் ஆகியவற்றில் கோதுமைத் தானியம் பயிரிடப்பட்டது. இக்காலப் பகுதியில் விவசாயத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களும் விவசாயத்திற்கு ஆதாரமாக நீர்ப்பாசணம் விளங்கியதால் விவசாய கலாசாரம் ஒன்று தெற்கு தென்கிழக்கு ஆசியாவில் வலுவடையத் தொடங்கியது. மன்னர்கள் பல குளங்களை கட்டியதுடன் பாரிய நீர்ப்பாசணக் கால்வாய்களையும் அமைத்துக் கொடுத்து உள்நாட்டுப் பயிர்ச்செய்கையின் விருத்திக்காக முயற்சிகளை மேற்கொண்டனர். இத்தகைய காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.

  16ம் நூற்றாண்டின் ஆரம்பம் கல்வி சமய மறுமலர்ச்சிகளை வேகமாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்டுத்திய யுகமாக காணப்பட்டது. இக்காலப்பகுதியில் ஏற்பட்ட இம்மாற்றங்கள் விவசாயத்துறையில் குறிப்பிடத்தக்க பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக சீனா, தென்கிழக்காசியா என்பவற்றில் விவசாயத்தில் புதிய பயிhகள் பயிரிடப்பட்ட பகுதியாக உள்ளது. மேற்கு இந்தியாவில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட கோதுமையுடன் ஒட்ஸ், றைன் ஆகிய இரு புதிய பயிர்கள் செய்கைபண்ணப்பட ஆரம்பித்தன.

  பயிர்ச்செய்கையுடன் கால்நடை வளர்க்கும் பண்பும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டது. தமது பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தினை கால்டைகளில் இருந்து பெற்றுக் கொண்டது மட்டுமன்றி பால் உட்பட பல உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தது. வெண்ணெய் தயாரிப்பு ஆக்காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் ஆரம்பமானது. ஐரொப்பிய நாடுகளில் குதிரைகள் உழவுத் தொழிலுக்குப் பயன்பட்டன. தெற்கு ஐரோப்பிய நாடுகளில் மத்தியதரைக் காலநிலைப் பகுதிகளில் அப்பிள், திராடசை, தோடை என்பவற்றின் அறிமுகம் ஈக்காலத்திலேயே உருவானது. ஒவ்வொருவரும் தமது வீட்டுச் சுற்றுப் புறத்தில் இப்பயிர்களை வளர்க்கும் முறையை ஆரம்பித்தனர். இத்தாலி, கிறீஸ், ஸ்பெயின், தென்பிரான்ஸ், அல்ஜீரியா ஆகிய நாடுகள் மேற்குறிப்பிட்ட பயிர்வகைகளுடன் கோதுமை, றைன், பார்லி ஆகியவற்றையும்  பொருத்தமான நிலப்பகுதிகளில் மேற்கொண்டனர்.
 
தெற்கு, தென்கிழக்காசியா நாடுகள், கிழக்காசியா நாடுகள் என்பவற்றில் நெற்செய்கை கனிசமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ஆற்றுக் கழிமுகப் பகுதிகளான ஐராவதிக் கழிமுகம், மீகொங் கழிமுகம் ஆகிய பகுதிகளில் நெற்பயிர்ச் செய்கை பரம்பல் அதிகம் இடம்பௌவில்லை. நீர்பாபசன முறைகள் பொதுவாக எல்லா நாடுகளிலும் ஓரளவு விருத்தியடைந்து காணப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கையில் விவசாயத்தில் சற்று விதிவிலக்கான நிலையே காணப்பட்டது. இக்காலத்தில் நாட்டைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் வரண்ட பகுதிகளை அலட்சியப்படுத்தியதால் செற்பயிர்ச்செய்கை கனிசமான அளவு குறைந்து விட்டது. புராதன மனிதாகளால் உருவாக்கப்பட்ட குளங்கள், நீhப்பாசனக் கால்வாய்கள் என்பன பாழடையும் நிலைக்கு உட்படுத்தப்பட்டது.

    ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் விவசாயத்துறையில் பெரும்அபிவிருத்தி இடம்பெறவில்லை. அக்காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான கரையோரப் பிரதேசங்களில் தென்னைப் பயிhச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து பலாபலன்களைப் பெறும் முறை உருவாகி இருந்தது. அத்துடன் இலங்கையின் தென்மேல் கரையோரங்களை அன்னியர் தம் வியாபாரத்திற்கா கறுவாப் பயிரினை எராளமாக பயிரிட்டுள்ளார்கள். நீர்கொழும்பிலிருந்து மாத்தறை வரையான கரையோரங்களிலும் உள்நாட்டுப் பிரதேசங்களிலும் உள்நாட்டுப் பிரதேசங்களிலும் கறுவாக்காடுகள் நிநை;து காணப்பட்டதாக போர்த்துக்கேய ஒல்லாந்த வரலாற்றை எடுத்துக் காட்டுகின்ற நூல்களில் கூறப்படுகின்றது.


 மலையகப் பிரதேசங்களில் இக்காலத்தில் ஏலம், மிளகு ஆகிய இரு பயிர்களும் சிறியளவில் இடம்பெற்றன. இவற்றை அன்னியர்கள்  கொள்வனவு செய்து உணவகளைப் பாதுகாத்து வைக்கும் வாசனைத் திரவியங்களாக மாற்றியமைத்துக் கொண்;டாhகள். இதே காலப்பகுதியில் இலங்கையின் தென்மேல் பகுதிகளில் மரவளளிக் கிழங்கு உட்பட வேறுசில கிழங்கு வகைகளின் உற்பத்தியும் ஈரப்பலா, ஆகிய பயிhகளின் உற்பத்தியும் காணப்பட்டதாக றொபர்ட் நொக்ஸ் எனபவர் தன்னுடைய இலங்கை பற்றிய நூலில் குறிப்பிடுகின்றார்.

 19ம் நூற்றாண்டில் உலகில் உருவாகிய மற்யொரு பயிர்ச்செய்கை பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆகும். 1850 களில் குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தமது குடியேற்ற நாடுகளில் உள்ள காலநிலை மண் சாதகத் தன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பெருந்தோட்ட முறையினை ஆரம்பித்தாhகள். மேற்கிந்தியத் தீவுகள் , ஐக்கிய அமெரிக்க பிரதேசங்களில் கரும்புப் பயிரை அடிப்படையாகக் கொண்ட பெருந்தோட்டங்களும் தெற்கு தென்கிழக்காசியா ஆகிய  நாடுகளில் தேயிலை. இறப்பர், தெங்குப் பயிரை அடிப்படையாகக் கொண்ட பெருந்தோட்டங்களும் பிரிட்டிஸ்காரரால் அறிமுகப்படுத்தப்பட்டது.  20 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஸ்காரர்கள் ஆபிரிக்க நாடுகளிலும் இப்பெருந் தோட்டப் பயிர்ச்செய்கைகளை அறிமுகப்படுத்தினர். பிரிட்டிஸ்காரர் தமது நன்மையின் பொருட்டு குடியேற்ற நாடுகள் ஒவ்வொன்றிலும் பெருந்தோட்டப் பயிhச்செய்கை முறையினை உருவாக்கியுள்ளனர்.

   18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியினடிப்படையில் கண்டு பிடிக்கப்பட்ட இயந்திரங்களும் வளர்முக நாடுகளில் விவசாயத்துறையில் ஓரளவு இயந்திரமயமாகக்கமும் இடம்பெற வழிவகுத்தது. கைத்தொழில் புரட்சியினுடைய விளைவு மேலைநாடுகளில் மற்றொருவிதமான தாக்கத்தை உருவாக்கியது. கைத்தொழில்களுக்குத் தேவைப்பட்ட ஊழியப்படையினளவு கூடிக் காணப்பட்டமை  கவர்ச்சிகர சம்பளம், நிலையான வருமானம் என்பன காரணமாக 19 ஆம் நூற்றாண்டில் விவசாயத்துறையில் ஈடுபட்ட மக்களில் கனிசமான தொகையினர் கைத்தொழில் முயற்சிகளில் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஈர்க்கப்பட்டார்கள்.
 20; ஆம் நூற்றாண்டில் விவசாயத்துறையில் முன்னேற்றங்கள் பல கண்ட நூற்றாண்டாகக் காணப்படுகின்றது. 1950 களை அடுத்து வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப விஞ்ஞான ரீதியான முன்னேற்றங்களும் விவசாயத்துறையில் நவீன நுட்பங்களின் பயன்பாடு இடம்பெறுவதற்கு வழிவகுத்தது. 1990 களில் பிரிட்டனில் மிகக்குறைந்த விவசாய முறைகள் காணப்பட்ட போதிலும் அது முழுமையாக இயந்திரமயமாக்கப்பட்ட ஒரு தொழில் நடவடிக்கையாக காணப்பட்டது.

 ஐக்கிய அமெரிக்காவில் இன்று நடைபெறுகின்ற பரந்துபட்ட கோதுமைப் பயிர்ச்செய்கை பருத்தி, சோளம் ஆகியவற்றில் எல்லாம் முழுமையாக இயந்திரப் பாவனை இடம்பெற்று வருகின்றது. இதே போன்று நவீனமுறையிலான இரசாயண உரங்களின் பயன்பாடு பசளை உபயோகம் கிருமிநாசினிகளின் உபயோகம் போன்றன எல்லாம் முழுமை நிலையினை அடைந்திருக்கின்றன. மேலும் இந்நாடுகளில் விவசாய ஆராய்ச்சி ஒரு தனித்துறையாகக் காணப்படுகின்றது. இந்த விவசாய ஆராய்ச்சி நவீன விதைகளின் கண்டுபிடிப்பு பயிர்வகைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்தல் பயிர்களுக்கான நோய்த்தடுப்பு வேறுபட்ட பயிர்ச்செய்கை முறைகளின் அனுகூலம் பிரதிகூலம் என்பன போன்ற பல விடயங்களை உள்ளடக்கியனவாக காணப்படுகின்றது.

   ஆரம்ப காலங்களில் விவசாயத்தில் நிலப்பரப்புக்களை அதிகரித்ததன் மூலமே உற்பத்திப் பெருக்கத்தினை அதிகரிக்க முடிந்தது. இது 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சனத்தொகை வெடிப்புக் காணமாக முடியாத விடயமாகிவிட்டது. அந்த வகையில் 1960 ஆம் ஆண்டு உணவுற்பத்தியில் பசுமைப்புரட்சி வித்திட்டது. 20 ஆம் நூற்றாண்டின்  நடுப்பகுதியில் மூன்றாம் மண்டல நாடுகளின் பட்டிணியைப் போக்குவதற்கு ஏணைய நாடுகளிடம் கையேந்திய நிலையில் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய எதையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் மூன்றாம் உலக நாடுகள் காணப்பட்டது. இதைச் சாதகமாகக் கொண்ட முதலாம் மண்டல நாடுகள் தொழில்நுட்பங்களுடனானா விவசாய நடவடிக்கைகளை புகுத்தியது. தமது நாடுகளில் தாமதமடைந்த விளைச்சல் அதிகரிப்பினை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை வகுத்தது.

 நில அதிகரிப்புக் கொள்கைக்குப் பதிலாக குறைந்தளவு நிலப்பரப்பில் அதிக பயனைத்தரும் பயிர்ச்செய்கை ஒன்றை மேற்கொள்வதன் மூலம் கூடிய உற்பத்திப் பெருக்கத்தை அடையலாம் என்ற உண்மை உணரப்பட்டது. இவ்வாறு பசுமைப் புரட்சியினால் விளைச்சலை அதிகரிப்பதற்காக, இரசாயண வளமாக்கிகளின் பாவனை, இயந்திரமயமாக்கல், பழச்செய்கை உற்பத்தியும், நீர்வாழ் தாவரமும் மேம்படுத்தப்படல், தொழிற்சாலைகளும் பண்ணைகளும் நிறுவப்படல் முதலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

  இன்று விவசாயத்தில் உயிரியல் தொழில்நுட்பம் பயன்படுகின்றது. உயிரியல் தொழில்நுட்பம் என்பது உயிரியலினதும், தொழில்நுட்பத்தினதும் சேர்க்கையாகும்.தாவரங்களையும் விலங்குகளையும் பெருக்கிக் கொள்ளுதல், நொதித்தல் மூலம் உணவுப் பதார்த்தங்கள் பாணங்கள், பாணங்கள் முதலிவற்றை தயாரித்தல்ஈ தாவரங்களிலிருந்து மருந்துகள் தயாரித்தல் போன்ற தொழிற்பாடுகளின் பொருட்டு உயிரியல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.விவசாயத்தில் உயிரியல் தொழில்நுட்பமானது நைதரசன் பதித்தல், உயிர்ப்பீடை நாசினிகளை உருவாக்குதல், களைகளை அழித்தல், மேம்படுத்தப்பட்ட அங்கிகளை விருத்தி செய்தல் முதலிய பல்வேறு நடவடிக்கைகளில் பயன்படுகின்றது.

  வளிமண்டலத்தில் 78 சதவீதம் நைதரசன் வாயுநிலையில் இருந்தும் தாவரங்களால் இதனை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. சில நுண்ணங்கிகள் வளிமண்டல நைதரசனை தாவரங்கள் பயன்படுத்தக்கூடியவாறு சேதன நைதரசன் சேர்வைகளாக மாற்றுகின்றன. இவ்வாறு வளிமண்ட நைதரசனை சேதன நைதரசனாக மாற்றும் செயற்பாடே நைதரசன் பதித்தல் எனப்படுகின்றது. அவரை இனத்தாவரங்களின் வேர்ச்சிறுகணுக்களில் சுhணைழடிரைஅ என்னும் பக்றீரியா வாழுகின்றது. இது நைதரசன் பதித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளும்  ஒரு நுண்ணங்கியாகும். இந்நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டை உயிரியல் தொழில்நுட்பம் மூலம் பல வகைகளில் பயன்படுத்துகின்றனர். சுhணைழடிரைஅஇல் உள்ள பரம்பரைப் பதார்த்தத்தை பொருளாதார nமுக்கியத்துவம் வாய்ந்த தாவர்களிற்கு வழங்கி அவற்றில் வேர்ச்சிறுகணுக்களை விருத்திசெய்தல். மேலும்பிறப்புரிமையிலுக்குரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட, நைதரசன் பதித்தலை திறமையாக மேற்கொள்ளக்கூடிய சுhணைழடிரைஅ வகைகளை வித்துக்களுடன் சேர்த்தல்.

உயிர்பீடை நாசினிகளை தயாரிப்பதற்கும் உயிரியல் தொழில்நுடபம் பயன்படுத்தப்படுகின்றது.

பயிர்த்தாவரங்களில் பாதிப்பான தாக்கங்களை ஏற்படுத்தி வரும் சில பூச்சிகளும் அவ்றறின் குடம்பிகளும் பீடைகள் எனப்படுகின்றன.இத்தகைய பீடைகளை அழிப்பதற்கு இரசாயணப் பூச்சிநாசினிகள் பயன்படுத்தக்கூடியதாயினும் அவை சூழலுக்கு பல பாதகமான விளைவை ஏற்படுத்துபவையாக காணப்படுகின்றன.

  சூழலிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிறப்புரிமையியலுக்குரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட பக்றீரியாக்களைப் பயன்படுத்தி பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உயிரியல் தொழில்நுட்பம் பயன்படுகின்றது.டீயஉடைடரள வாசரசiபெநைளெளை  என்னும் பற்றீரியாவை பயன்படுத்தி டுநினைனழிவநசய வருணத்தைச் சேர்ந்த பூச்சிப் பீடைகளின் குடம்பி நலைகளை அழிக்கக் கூடியதாக இருக்கின்றது. இக்குறிப்பிட்ட பற்றீரியாவினால் உருவாக்கப்படும் ஒருவகை நஞ்சுப் பதார்த்தம் இக்குடம்பிகளின் உணவுக் கால்வாய் இழையங்களை அழிப்பதன'; மூலம் குடம்பிகளை அழிவடையச் செய்கின்றது.

  களைகளைக் கட்டுப்படு;த்த களைநாசினிகள் பயன்படுத்தப்படுவதால் தாவரங்களில் விகாரங்கள் தூண்டப்படுதல், சில களைநாசினிகள் உணவுச் சங்கிலி வளியாக கொண்டு செல்லப்பட்டு தேக்கம் அடைவதால் விலங்குகளில் பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தவதாக அறியப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களினால் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு நுண்ணங்கிககள் பயன்படுத்தப்படுகின்றன. ளுயடஎinயை என்னும் களையினை  கட்டுப்படுத்த யுடவநசயெசயை என்னும் பங்கஸ் பயன்படுத்தப்படுகின்றது.

  உயிர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரட்சியைத்தாங்கக்கூடிய தாவரங்கள், பீடைகளின் தாக்கத்திற்கு எதிர்ப்பு திறன் உடைய பயிhகள், போசனைச்சத்துக்கள் கூடியதும் சுவை கூடியதுமான பழங்களை விருத்தி செய்யும் தாவரங்களை இவ்வாறு உருவாக்குகின்றனர்.  கோதுமையைப் பாதிக்கும் ஒருவகை நீய்மூஞ்சி வண்டின் தாக்கத்திற்கு எதிர்ப்பு திறனுடைய கோதுமை வகை உயிர் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. புகுத்தப்பட்ட பரம்பரை அலகினால் உருவாக்கப்படும் ஒருவகை நச்சுத் தன்மையுள்ள பதார்த்தத்தினால் கோதுமையைப் பாதிக்கும் பீடை அழிக்கப்படுகின்றது. விற்றமின் யு யினைக் கொண்ட தங்கத் தானியங்களும் இவ்வாறு உயிரியல் தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தப்பட்ட அரிசி வர்க்கமாகும்.
உயிரியல் தொழில்நுட்பம் மூலம் விலங்குகளின் முட்டைக் கலங்கள், முளையங்கள் என்பவற்றில் புதிய அந்நிய அலகை புகுத்தி விலங்குகளை உருவாக்குகின்றார்கள். புரதத்தைச் செறிவாகப் பெறுவதற்காக புரதத்தை ஆக்குவதுடன் தொடர்புடைய பரம்பரை அலகு செம்மறி ஆடுகளின் முட்டைக்கலத்தினுள் புகுத்தப்பட்டு கருக்கட்டல் அடையவிடப்படுகின்றது.  இத்தகைய செயற்பாடுகளின் மூலம் உருவான ஆடுகளின் பாலில் மனிதனுக்குத் தேவையான புரதம் செறிவாகப் பெறப்படுகின்றது.

  இலங்கையின் வரண்ட பிரதேசங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக வரண்ட பருவங்களில் குளம், ஆறு, கிணறு ஆகிய நீர்ப்பாசணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வரண்ட வலயங்களில் நெற்பயிர்ச்செய்கைக்காக ஆறுகளை மறித்துக் கட்டி நீர்பாய்ச்சுகின்றனர். அதே போன்று குளங்களிலிருந்து நீரைப் பெற்றும் பயிரிடுகின்றனர். சில சேனைப் பயிர்ச்செய்கைநடவடிக்கைகளிலும், தோட்டச் செய்கைகளிலும் ஆறுகளில் இருந்தோ அல்லது கிணறுகளில் இருந்தோ நீர்ப்பம்பிகள் மூலம் நீரை இறைத்துப் பயிர்ச்செய்கின்றனர்.

    வரண்ட பிரதேசங்களில் தெங்குப் பயிhச்செய்கையில் சில நுட்பங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. தெங்குக் கன்றுகளுக்கு இருபுறமும் மண்குடங்கள் வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அவற்றுக்குளே நீர் நிரப்பப்படுகின்றது. அந்நீர் கன்றுக்குத் தேவையானளவு கன்றினால் உறிஞ்சப்படுகின்றது. இதனால் தென்னங்கன்று வரட்சியிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது.

 உலக ரீதியாக இன்று விவசாயத்துறையானது சேவைத்துறை , கைத்தொழில்துறை, என்பவற்றை அடுத்து மூன்றாம் நிலையிலேயே காணப்படுகின்றது. ஒரு சில குறைவிருத்தி நாடுகள், வளர்ந்த நாடுகள் என்பவற்றிடையே விவசாயத்துறை முதல் நிலையான செல்வாக்குச் செலுத்துகின்றது.  மனிதனின் முக்கிய தேவைகளில் ஒன்றாக விவசாயத்துறை காணப்படுவதால் இந்தத் துறையை முற்றுமுழுதாக கைவிட முடியாதுள்ளது. 
ஒவ்வொரு அரசாங்கங்களும் விவசாயத்தில் மேலும் மேலும் புதிய உருவாக்கங்கள் இடம்பெறும் வகையில் நவீன கண்டுபிடிப்புக்களுக்கான ஆக்கபூர்வமான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலக வங்கி உட்பட பல நிதி அமைப்பக்களும் விவசாய ஆராய்ச்சிக்கென கூடுதலான அளவு நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.

  யப்பான போன்ற நாடுகளில் நிலத்தின் அளவு குறைவாதலால் கடல்பரப்பில் விவசாய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது. அதாவது கடலில் சில எல்லைப்பகுதிவரை அலைக்கட்டுப்படுத்தும் சுவர்களை அமைத்துவிட்டு அதற்குஇடைப்பட்ட பகுததியில் மிதவைகளாலான செயற்ரக நிலம் உருவாக்கப்படுகின்றது. பின்னர் அந்நிலத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. அண்மைக்காலமாக தாவரங்கரளை மண்ணன் துணையின்றி வளர்க்கக்கூடிய முறைகளும் உருவாகியுள்ளது. அதாவது இதன்படி தாவரங்கள் குழாய்களில்எ நடப்பட்டு குழாய்களினூடாக நிர் மற்றும் போசனைகள் வழங்கப்படுகின்றன். இம்முறை Hydroponix முறை எனப்படுகின்றது. மேலும் உவர் நீரைப்பயன்படுத்தி பயிர்ச்செய்கையிலீடுபடும் திட்டமும் ஆராயப்பட்டு வருகின்றது. இவ்வாறு விவசாயத்துறையானது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தற்காலம் வரை பரினாம  வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

- அக்‌ஷயன் -