தகட்டசைவு - Plate Tectonics

உலகில் இன்று இடம்பெறுகின்ற புவிநடுக்கங்கள், எரிமலை வெடிப்புக்கள் முதலிய செயற்பாடுகளுக்குரிய விளக்கத்தை வழங்குவதாக தகட்டசைவு காணப்படுகின்றது. தகட்டசைவு பற்றிய ஆராய்ச்சிகளுக்கு வித்திட்டவை என்ன? தகட்டசைவு என்றால் என்ன?, தகட்டசைவின் விளைவுகள் என்ன போன்றவற்றை நாம் இங்கு கற்போம்.

1)    கண்ட நகர்வுக்  (Continental Drift) கருதுகோள்
•    தகட்டசைவுகளின் விளக்கத்திற்கு ஆதாரமாக அமைவது 1912 இல் வெகனர் அவாகளினால் வெளியிடப்பட்ட கண்ட நகர்வுக்கருதுகோள் ஆகும். வெகனரின் கருத்துப்படி இன்றைய நிலையில் காணப்படுகின்ற கண்டங்கள் யாவும், ஆரம்பத்தில் ( கார்போனிபரஸ் காலம்) பஞசியா என்ற ஒரே நிலத்pணிவாகக் காணப்பட்டதாகவும், பின்னர் அவை நகர்ந்து இன்றைய நிலையை அடைந்ததாகவும் குறிப்பிடுகின்றார். வெகனரின் கருத்துப்படி பெருக்கு விசை காரணமாகவே கண்டங்கள் நகர்ந்ததாக குறிப்பிடுகின்றார்.
•    பலியோ சோயிக் யுகத்தின் தொடக்கத்தில் எல்லாக் கண்டங்களும் ஒன்றாகச் சேர்ந்து, இணைந்து பஞ்சியா என்ற ஒரு கண்டமாக இருந்தது. இக்கண்டத்தில் நிலத்திணிவுகள் இரு குழுக்களாக இருந்தது. வடக்கில் அமைந்த நிலத்திணிவானது  லூறோசியா (அங்காரலாந்து) எனவும், தெற்கில் அமைந்த நிலத்திணிவானது கொண்டுவனாலாந்து எனவும் அழைக்கப்பட்டது. இவ்விரு நிலத்திணிவுகளையும் பிரிக்கின்ற கடல் எல்லையானது தெதீஸ் கடல் எனவும் அழைக்கப்பட்டது.
•    மாறுபட்ட புவியீர்ப்பு விசையினால் பஞ்சியாக்கண்டம் உடைந்து பல துண்டுகளாகி, வௌ;வேறு திசைகளுக்கும் இடம்பெயர்ந்து சென்றது. உடைந்த பஞ்சியாவிலிருந்து வடதென அமெரிக்காக்கள் மேற்குப் பக்கமாக நகர்ந்தன. தென்கிழக்கு ஆபிரிக்காவுடன் இணைந்திருந்த அவுஸ்ரேலியா வடகிழக்குத் திசைநோக்கியும் இந்திய நிலத்திணிவு வடதிசை நோக்கியும் நகர்ந்தது. அந்தாட்டிக்கா மட்டும் தென்முனைவிலேயே நிலைத்துவிட்டது.


2)    கண்டங்கள் நகர்ந்ததற்கு சான்றாக வெகனரால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள்.
•    புவிப்பௌதீகவியல் ஆதாரங்கள் - புவியின் உட்கட்டமைப்பின் அடிப்படையில், கண்ட ஓடு, சமுத்திர ஓடு மற்றும் கோளவகம் என்பவற்றின் இயல்புகளைக் கருத்திற்கொண்டு, இத்தகைய வேறுபட்ட இயல்புகள் கண்டங்களின் நகர்விற்கு காரணியாக இருந்ததாக குறிப்பிட்டார்.
•    புவிச்சரிதவியல் ஆதாரங்கள் - உலகில் காணப்படும் இளம் மடிப்பு மலைகள் கண்ட நகர்வினால் தோன்றியதாகக் குறிப்பிடுகின்றார். அப்பலாச்சியன் முலை, கலிடோனியன் மலை முதலியவற்றை இதற்கு சான்றாகக் குறிப்பிடுகினற்hர்.
•    இடவிளக்கவியல் ஆதாரங்கள் - இன்றைய கண்டங்களை ஒன்று சேர்த்து பழைய பஞ்சியாக் கண்டத்தை இணைத்துவிட முடியும் என்றார். உதாரணமாக தென்னமெரிக்காக் கண்டத்தினை ஆபிரிக்கா கண்டத்துடன் இணைக்கின்றபோது அது பொருந்துகின்றது.
•    உயிர்ச்சுவடியல் ஆதாரங்கள் - ஒரு கண்டத்தில் இன்று சிறப்பாகக் காணப்படுகின்ற அல்லது ஒரு காலத்தில் காணப்பட்ட விலங்குகள் தாவரங்கள் என்பவற்றின் உயிர்ச்சுவடுகள் இன்று இன்னொரு கண்டத்திலும் காணப்படுகின்றன. கண்டங்கள் யாவும் ஒன்றாக இருந்ததன் காரணமாகவே அவை ஏணைய கண்டங்களிலும் காணப்படுகின்றன.
•    காலநிலையியல் ஆதாரங்கள் - கண்டங்கள் யாவும் ஒன்றாக இருந்த காலத்தில்தான் நிலக்கரி படிவுகளுக்கு வழிவகுத்தது. அயனப் பகுதிகள் யாவும் ஒன்று சேர்ந்திருந்ததனால்தான் நிலக்கரிப் படிவுகள் ஏற்படுவதற்கு சாதகமாக இருந்தன.

3)    புவித் தகடுகள்
•    அஸ்தனோஸ்பயர் எனப்படும் மென்பாறைக் கோளத்தின்மேல் மிதக்கும் நிலையிலுள்ள,  மேற்காவுகை ஓட்டச் செயன்முறையினால் சிதைவடைந்த  கற்பாறைத் திணிவுகளே தகடு என அழைக்கப்படுகின்றது. புவியினுடைய உட்பகுதியில் இடம்பெறுகின்ற மேற்காவுகை ஓட்டச் செயன்முறையினால் புவித்தகடுகள் சிதைவடைந்து பெரியதகடுகளாகவும், சிறிய தகடுகளாகவும் பரம்பிக் காணப்படுகின்றன. புவித்தகடுகளை முதநிலைத்தகடுகள், இரண்டாம் நிலைத்தகடுகள், மூன்றாம் நிலைத்தகடுகள் எனவும் பிரிக்கப்படுகின்றன. இருந்த போதிலும் புவிமேற்பரப்பானது 8 பிரதான தகடுகளாலும், 8 இற்கும்  மேற்பட்ட சிறிய தகடுகளாலும் உருவாகியுள்ளது.


பிரதான தகடுகள்;
சிறிய தகடுகள்
வடஅமெரிக்க தகடு நஸ்கா தகடு
தென் அமெரிக்க தகடு பிலிப்பைன் தகடு
ஆபிரிக்க தகடு கோகஸ் தகடு
யூரேசியா தகடு கரிபியன் தகடு
இந்தோ அவுஸ்ரேலியா தகடு அரேபியன் தகடு
அந்தாட்டிக் தகடு அட்றியாட்டிக் தகடு
பசுபிக் தகடு யுவான்டிபியுகா தகடு

ஸ்கோடியா தகடு














4)    தகட்டசைவு (Plate Tectonics)
•    தகட்டசைவு எனும்போது இடையோட்டில் இடம்பெறுகின்ற மேற்காவுகை ஓட்டச் செயன்முறையினால் புவித்தகடுகள் நகர்ச்சிக்கு உட்படுதல் தகட்டசைவு எனப்படுகின்றது. தகட்டசைவானது பிரதானமாக மூன்று எல்லைகளைத் தோற்று விக்கின்றது.  நிலைமாறும் எல்லை, விலகும் எல்லை, ஒருங்கும் எல்லை ஆகியனவே அத்தகைய பிரதான மூன்று தகட்டு எல்லைகளாகும்.


5)    தகட்டு எல்லைகளும் விளைவுகளும்
•    தகட்டு அசைவுகளின் போது தோற்றம் பெறுகின்ற தகட்டெல்லைகளில் புவிநடுக்கங்கள், சுனாமி நிகழ்வுகள், எரிமலை வெடிப்புகள், அகழிகள், எரிமலைத்தீவுகள், மடிப்பு மலைகள் முதலியன தோற்றம்பெறுகின்றன. மூன்று தகட்டு எல்லைகளிலும் புவிநடுக்கங்கள் உருவாவதுடன், புவிநடுக்கங்கள் சமுத்திரப் பகுதிகளில் இடம்பெறுகின்றபோது அவை சுனாமி நிலையினையும் தோற்றம் பெற வைக்கின்றது.  அந்தவகையில் பிரதான தகட்டு எல்லைகளையும் அவற்றில் இடம்பெறுகின்ற புவிவெளியுருவவியல் தோற்றப்பாடுகளையும் அடுத்து ஆராய்வோம்.



•    நிலைமாறும் எல்கைள் (Transform Boundaries) - இரண்டு தகடுகள் ஒன்றோடு ஒன்று குறுக்காக சறுக்கி செல்லும்போது அவை நிலைமாறும் எல்லை அல்லது உராயும் எல்லை அல்லது பக்கப்பெயர்வு என அழைக்கப்படுகின்றது. அதிகளவிலான நிலைமாறும் எல்லைகள்  சமுத்திரத்தளத்திலேயே அமைந்துவிடுகின்றன. நிலைமாறும் எல்லைகள் மூலம் சிறியளவிலான புவிநடுக்கங்கள் ஏற்படுவதுடன், குறைகளும் ஏற்படுகின்றன.  கலிபோர்னியாவில் காணப்படுகின்ற சாண்அண்ட்றூஸ் பிளவுப் பள்ளத்தாக்கு இத்தகைய குறைகளுக்கு சிறந்த உதாரணமாகும். வடமெரிக்க தகடு தெற்காகவும், பசுபிக் தகடு வடக்காகவும் நகர்கின்றபோது இரண்டு தகடுகளுக்கிடையிலும் உள்ள நிலைமாறு எல்லையில் சான்அண்ட்றூஸ் பிளவு தோற்றம்பெறுகின்றது.



•    விலகும் எல்லைகள் (Divergent Boundaries) - இரண்டு தகடுகள் அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தகடுகள் ஒன்றிலிருந்து ஒன்றை இழுக்கின்றபோது அவை விலகும் எல்லை என அழைக்கப்படுகின்றது.  விலகும் எல்லைகள் பெரும்பாலும் சமுத்திரப் பகுதிகளில் நிகழ்கின்றபோது அங்கு கடலில் புதிய கடல்தளத்தை உருவாக்கிக் கொள்கின்றது. பிளவுகளுக்கிடையே வெளியேறுகின்ற மக்மா கடலுக்கடியில் படிந்து இறுகி கடல்தரைபரவுதலுக்கு வித்திடுகின்றது.  கடலில் விலகும் எல்லை மூலம் தோற்றம் பெற்றதாகவே மத்திய அத்திலாந்திக் முகடு(சமுத்திர  மலைத்தொடர்) காணப்படுகின்றது. இது தவிர கண்டப் பகுதிகளில் இடம்பெறும் விலகுதல்கள் மூலம் ஆபிரிக்கப் பிளவுப் பள்ளத்தாக்குகள் தோற்றம்பெறுகின்றன.


•    ஒருங்கும் எல்லைகள் (Convergent Boundaries)    - இரண்டு தகடுகள் ஒன்றையொன்று நோக்கி நகர்கின்றபோது அவை ஒருங்கும் எல்லைகள் எனப்படுகின்றன. தகடுகள் ஒருங்குகின்றபோது ஒரு தகட்டின் மீது மற்றய தகடு ஏறுவதுடன் கீழே அமிழ்ந்த தகடு அழிந்து அது மீண்டும் மறுசுழற்சி செய்யப்படுகின்றது. புவித்தகடுகளின் உருங்குதல் எல்லையில் இடம்பெறுகின்ற அமிழுதல் செயற்பாட்டினால் இவை அமிழும் வலயங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஒருங்கும் எல்லைகள் மேலும் மூன்று உபபிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது.  கண்டத்தகடும் கண்டத்தகடும் ஒருங்குதல், சமுத்திரத்தகடும் சமுத்திரத்தகடும் ஒருங்குதல், சமுத்திரத்தகடும் கண்டத்தகடும் ஒருங்குதல் என மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.



     இரு கண்டத்தகடுகள் ஒருங்குதல் (Continental-Continental Convergence) - இரண்டு கண்டத்தகடுகள் ஒன்றொயொன்று நோக்கி ஒருங்கும் எல்லையில் அவற்றின் விளிம்புகள் மடிப்புற்று மேலுயத்தப்படுவதனால் மடிப்புமலைகள் தோற்றம்பெறுகின்றன.  இந்நதித்தகடும், ஐரோஆசியத்தகடும் நீண்டகால ரீதியில் ஒருங்கியதன் விளைவாகவே இமயமலை தோற்றம்பெற்றது.

    இரு சமுத்திரத் தகடுகள் ஒருங்குதல் (Oceanic-Oceanic Convergence)    -  இரண்டு சமுத்திரத்தகடுகள் ஒன்றையொன்று நோக்கி ஒருங்கும் எல்லையில் அகழிகள் தோற்றம் பெறுவதுடன் அமிழ்தலுக்குள்ளாகின்ற ஒரு பகுதி சமுத்திரத்ததகட்டினால் உருவாகும் எரிமலைவெடிப்பு நிகழ்வானது எரிமலைத்தீவுகளையும் உருவாக்கி விடுகின்றது. பசுபிக் தகட்டுடன் பிலிப்பைன் தகடானது  ஒருங்குகின்றபோது பிலிப்பைன் தகடு பசுபிக் தகட்டின் கீழ் அமிழ்ந்ததனால்; மரியான ஆழி உருவாகியது.

   சமுத்திரத்தகடும் கண்டத்தகடும் ஒருங்குதல் (Continental-Oceanic Convergence)      - சமுத்திரத்தகடு ஒன்றும், கண்டத்தகடு ஒன்றும் ஒருங்கும் எல்லையில் ஏற்படும் சமுத்திரத்தகட்டின் அமிழ்தலினால் ஆழிகள், எரிமலைகள் மற்றும் பெரியளவிலான புவிநடுக்கங்கள் முதலியனவும் தோற்றம்பெறுகின்றன. சமுத்திரத்தகட்டினுடைய அடர்த்தி 3.0g/cc ஆகவும் கண்டத்தகட்டினுடைய அடர்த்தி 2.7 g/cc ஆகவும் உள்ளது. இத்தகைய அடர்த்தி வேறுபாடு மிகவிரைவாக சமுத்திரத்தகட்டின் அமிழ்தலை ஏற்படுத்தவதுடன் பாரியளவிலான புவிநடுக்கத்தினையும் ஏற்படுத்துகின்றது. அதேவேளை அமிழும் சமுத்திரத்தகடானது மக்மாகவாக மாற்றப்பட்டு மீண்டும் கண்ட விளிம்பினூடாக எரிமலையாக வெளியேறுகின்றது.



[Article By :- Akshayan BA (Hons) special in Geography  - Email:- akshayansm@gmail.com]