குடியிருப்புக்களைத் தீர்மானிக்கும் காரணிகள்

மனிதன் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அமைத்துக்கொண்ட உறைவிடங்களே குடியிருப்புகளாகும். ஒரு குடும்பமோ அல்லது பல குடும்பங்களோ ஒன்ற சேர்ந்து வாழும்போது குடியிருப்புகள் உருவாகின்றன. இயற்கையான கற்குகைகள், மரப்பொந்துகள், சிறுகூடாரங்கள், குடிசைகள், நிரந்தரமான வீடுகள், மாடிவீடுகள்  என பல்வேறுபட்ட வீட்டுவகைகளை குடியிருக்கும் வசிப்பிடங்களாக மனிதன் பயன்படுத்தியுள்ளான்.  மனிதன் குடியிருப்புக்களை பின்வரும் நோக்கங்களுக்காக அமைத்துக்கொண்டான். 


சூழலில் ஏற்படும் வெய்யில், மழை, பனி, வெப்பம், குளிர் என்பவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளல்.
இயற்கையாக ஏற்படும் சில அனர்த்தங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளல்.
விலங்குகள், கள்வாகளிடமிருந்து தம்மையும், உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ளல்.
அமைதியாகவும், சந்தோசமாகவும் வாழ்க்கையை நடாத்துதல்.

 ஒரு குடியிருப்பை அவதானிக்கின்றபோது அங்கு மக்கள் கூட்டம் மாத்திரமன்றி வேறு பல அம்சஙகளும் காணப்பட்டன. வீடுகள், மக்கள் கூட்டம், நிர்வாக அலுவலகம், சேவை நிலையங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து வீதிகள், மின்சார இணைப்புகள், சுற்றுச்சூழல்(நிலம், நீர்) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  

 முன்னைய கற்கால யுகத்தில் வேட்டைக்காரர்களும், காய்கனிகள் சேகரிப்போரும் மரப்பொந்துகள், கற்குகைகள் போன்ற தற்காலிக குடியிருப்புக்களை பயன்படுத்தினர். நாடோடி மந்தைமேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் கைத்தொழில் மற்றும் பயிர்ச்செய்கை தொடங்கிய பின்னர் குறைந்த அளவில் நிலையான குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். விவசாயப்புரட்சி ஏற்பட்ட காலத்தில் பயிர்ச்செய்கையும் விலங்குவேளான்மையும் ஆரம்பமாகியதால் நிலையான வீடுகளும் கிராமங்களும் உருவாகுதல். கோதுமை, நெல், சோளம் போன்வற்றை பயிரிட்டனர். விவசாயத்திற்னு நீர் அவசியம் எனக் கருதிய மனிதன் நீர்ப்படுக்கைகளை ஆதாரமாகக் கொண்டு குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டான். அந்தவகையில் யூப்பிரட்டிஸ் ரைகிறிஸ் நதி, நைல்நதி, இந்து நதி போன்ற நதிப்படுக்கைகளை அடுத்து குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டான். பின்னர் அப்பகுதிகளில் காணப்பட்ட புல்நிலங்களில் விலங்கு வளாப்பையும் மனிதன் மேற்கொண்டான்.

 நகரப்புரட்சி ஏற்பட்ட காலத்தில் கிராமிய வாழ்க்கை முறையிலிருந்து நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு மாறியவுடன் நகரக்குடியிருப்புகள் உருவாகுதல். 17 ஆம் நூற்றாண்டின் பின்னர் 1750-1850 வரையிலான காலததில் கைத்தொழில் புரட்சியுடன் நகரசனத்தொகையும், நகரங்களும் துரிதமாக வளர்ச்சியடைதல். 20 நூற்றாண்டிலிருந்து அபிவிருத்தியடைந்த வரும் நாடுகளின் நகர சனத்தொகை அதிகரித்தலும் முழு உலகினதும் நகர வளர்சி ஏற்பட்ட இயக்க நகர்க் குடியிருப்புக் காலத்தில் பெருநகர்கள், கூட்டுநகர்கள், பெருநகரத்தொகுதிகள் என்றவாறாக நகர்கள் விருத்தியடைந்தன.

  குடியிருப்புக்கள் விருத்தியடைவதில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. இவ்வாறு குடியிருப்புக்களின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் செல்வாக்குச் செலுத்தும் அனைத்து காரணிகளையும் பிரதானமாக பௌதீகக் காரணிகள், அரசியல் காரணிகள், சமூக காரணிகள், பொருளாதார காரணிகள், கலாச்சார காரணிகள் என பிரதான பிரிவுகளுக்குள் அடக்கப்படுகின்றன. 



 பௌதீகக் காரணிகள் எனும்போது தரைத்தோற்றம், காலநிலை, நீர்வளம், மண் வளம்  போன்றவற்றைக் குறிப்பிடலாம். காலநிலை எனும்போது பயிர்ச்செய்கைகளுக்கு பொருத்தமான பருவக்காற்றுக் காலநிலையை அனுபவிக்கும் பகுதிகளிலேயே அதிகளவு குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. குறிப்பாக பருவக்காற்று காலநிலையை அனுபவிக்கும் தென்னாசியா நாடுகளில் அதிக குடியிருப்புகள் அமைந்துள்ளதனை அவதானிக்கலாம். ஒரு பருவ மழையும் ஒரு பரவ வரட்சியும் பயிhச்செய்கைக்கு மிகவும் ஏற்றன. தென்மேற் பருவப்பெயர்சிக் காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் 1000 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெற்றுக் கொள்கின்றது. ஆனால் மழைவீழ்ச்சி குறைவாகவும், வெப்பநிலை அதிகமாகவம் உள்ள பிரதேசங்களான உலகின் பாலைவனப் பிரதேசங்களில் குடியிருப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. அதே போன்று அதிக குளிர்த்தன்மையைக் கொண்ட முனைவுப் பகுhதிகளில் மிகமிகக்குறைந்த அளவிலேயே குடியிருப்புகள் காணப்படுகின்றது. 

 தரைத்தோற்றம் எனும்போது சமதரைகளைக் கொண்ட தாழ்நிலங்களிலேயே அதிகளவில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. சமதரைப் பகுதிகள் பயிhச்செய்கைக்கு பொருத்தமானதாகவும், போக்குவரத்து வசதி, மற்றும் வதிவிடங்களை இலகுவில் அமைத்துக் கொள்ளக்கூடியமை, ஏணைய தேவைகளை இலகுவாக பூர்த்தி செய்து கொள்ளக்கூடியவையாகவும் சமதரைகளும். தாழ்நிலங்களும் காணப்பட்டன. அதன் காரணமாகவே கரையோரத் தாழ்நிலங்களில் அதிகளவில் மககள் வசிக்கின்றனர்.

           குடியிருப்புகளின் வளர்ச்சியில் நீர்வளமும் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் கூட கடியிருப்பகளின் வளர்ச்சி நீர் நிலைகளை மையமாகக் கொண்டதாகவே வளாச்சி பெற்றிருந்ததனை அவதானிக்கலாம். ஆரம்ப கால குடியிருப்புகள் யூப்பிரட்டீஸ் ரைகிறீஸ், நைல்நதி, இந்து நதி போன்றவற்றின் சமவெளிகளிலே அமைந்து காணப்படடமைக்கு முக்கிய காரணம் விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும், அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நீர்வளம் காணப்பட்டமையே ஆகும். தென்னாசியாவில் காணப்படும் குடியிருப்புகள் பெரும்பாலும் நதிக்கரைகளை அண்டியதாகவே காணப்படுகின்றது. இலங்கையின் ஆரம்ப காலக் குடியிருப்புகள் கூட நதிக்கரைகளை அண்டியதாகவே தோற்றம் பெற்றதாக அறியமுடிகின்றது. 

  மண்வளம் குடியிருப்புகளின் வளாச்சியில்  பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு பொருத்தமான மண் வளமுள்ள பகுதிகள் அதிகளவில் மக்கள் குடியிருப்புக்களை அமைத்துக்கொண்ட பகுதிகளாகக் காணப்படுகின்றன. வண்டல் மண், அயனக் கருமண் (எரிமலை மணை;) போன்றவை பயிhச்செய்கைக்கு பொருத்தமானவையாகும். அந்தவகையில் நெற்செய்கைக்கு பொருத்தமானதாக வண்டல் செறிந்த தாழ்நிலங்கள் காணப்படுகின்றன. இந்து கங்கைச் சமவெளி, குவாங்கோச் சமவெளி, இலங்கையின் தென்மேல் தாழ்நிலம் போன்றன நெற் பயிhச்செய்கைக்குக் பொருத்தமான வண்டல் சமவெளிகளாகக் காணப்படுகின்றன. இதன் காரணமாக அதிகளவில் குடியிருப்புகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளதனை அவதானிக்கலாம். அதேபோன்று இந்தியாவின் மும்பாய் பகுதிகளில் அயன் கருமண் போன்றன காணப்படுவது பருத்தி போன்ற பயிhச்செய்கை நடவடிக்கைளுக்குச் சாதகமாக உள்ளது.  அதேபோன்று சீனாவில் அதிகளவு குடியிருப்புகள் அமைந்தமைக்கு பயிர்ச்செய்கைக்குப் பொருத்தமான குவாங்கோ, யாக்கிசிக்கியாங் வண்டல் சமவெளிகளும் காரணமாகும்.

 சமூக பொருளாதாரக் காரணிகள் எனும்போது அவற்றுள் கைத்தொழில், வளம், போக்குவரத்து, சேவை வசதிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். கைத்தொழில்களின் விருத்தி ஒரு பிரதேசத்தில் காணப்படுமாயின் அப்பகுதியிலே வெலைவாய்ப்பக்களும் அதிகரிக்கின்றன. இதனால் அதிகளவில் குடியிருப்புக்கள் கைத்தொழில் மையப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்படுகின்றன. குறிப்பாக யப்பான் மற்றும் வடகீழ் ஐக்கிய அமெரிக்கா, மத்திய, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் குடியிருப்புக்கள் அமைந்து காணப்படுகின்றமைக்கு அங்கு விருத்தி பெற்றிருக்கும் கைத்தொழிலாக்கமே காரணமாகும். யப்பான் இன்று கைத்தொழில் உலகில் மிகவளர்ச்சியடைந்த நாடாக காணப்படுகின்றது. இதன் காரணமாகவே உலகிலேயே அதிக சனத்தொகையைக் கொண்ட டோக்கியோ நகரத்தைக் கொண்ட நாடாகக் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் இங்கு கைத்தொழிற்சாiலைகளை மையமாகக் கொண்டு நகரக் குடியிருப்பு வளாச்சியடைந்தமையாகும். அதே போன்றே நியயோர்க், மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நகரக் குடியிருப்புக்கள் வளர்ச்சியடைந்தமைக்கு காரணமாக அமைவது அங்கு மையம் கொண்டிருக்கும் கைத்தொழில் நடவடிக்கைகளாகும்.

  குடியிருப்புகளின் வளர்ச்சியில் போக்குவரத்தும் முக்கியம் பெற்றவையாகக் காணப்படுகின்றன. போக்குவரத்துப் பாதைகளின் இருமருங்ககளிலும் அதிகளவில் குடியிருப்புகள் அமைந்து காணப்படுகின்றன. போக்குவரத்தப் பாதைகளின் அருகில் குடியிருப்புகள் அமைந்து காணப்படுமாயின் இலகுவில் தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அத்துடன் தொழிற்சாலைகளுக்கோ அல்லது தமது வேலைத்தளங்களுக்கோ இலகுவில் பயணிக்க முடியும் என்ற காரணத்தினால் நேர்கோட்டுக் குடியிருப்புக்களை அமைத்துக் கொள்கின்றனர். 

  இவ்வாறு குடியிருப்பக்களின் வளர்ச்சியில் பௌதீக மானிடக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்ற அதேவேளை தற்காலத்தில் அவற்றின் செல்வாக்கு சிற்சில இடங்களில் பொருத்தமற்றதாகவும் காணப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் விவசாய நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டன் ஆனால் இன்று அவ்வாறில்லை கைத்தொழில் சேவைகள் காரரணமாக குடியிருப்பகளுக்க சாதகமான காரணிகள் சிற்சில தேவையற்றதாகிவிட்டது. அந்தவகையில் இன்று காலநிலை பொருத்தமற்றதாக இருந்தாலும் அங்கு குடியிருப்புகள் தோற்றம் பெற்றுள்ளன.  சில கைத்தொழில் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமற்ற காலநிலை நிலவும் பகுதிகளிலும் குடியிருப்கள் அமைந்துள்ளன. 

  முனைவுப் பகுதிகளை அண்டிய கடற்கரையோரப் பகுதிகளில் மக்களின் குடியிருப்புகள் அமைந்து காணப்படுகின்றன.  இங்கு மீன்பிடி மற்றும் துறைமுக வசதிகள் காணப்படுகின்றமையால் காலநிலையின் தேவைiயினைக் குறைத்துள்ளன. நோர்வே, சுவீடன், பின்லாந்து பொன்ற நாடுகளில் இத்தகைய தன்மையினைக் காணலாம். மேலும் நியுசிலாந்து போன்ற நாடகளில் பயிhச்செய்கைக்கு பொருத்தமற்ற காலநிலை காணப்படுகின்றது ஆனால் அங்கு கால்நடை வளர்ப்புக்கு பொருத்தமான புற்கள் வளரக்கூடிய நிலைமையினால் கால்நடை வளர்ப்பிற்கு பொருத்தமானதாக உள்ளது. இதனால் இங்கு குடியிருப்பகள் அமைந்துள்ளன.
  பாலைவனப் பகுதிகள் அதிக வெப்பம் மழைவீழ்;ச்சிக் குறைவு போன்ற காரணிகளால் குடியிருப்புகள் அமைவதில் அதிகம் செல்வாக்கற்றவையாகக் காணப்பட்டன. ஆனால் இன்று சில அத்தகைய பாலைவன எல்லைக்குட்பட்ட பகதிகளிலும் வளங்களை அடிப்படையாகக் கொண்டு குடியிருப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்கலாம். குறி;ப்பாக மத்திய கிழக்கு அரேபிய நாடுகள் வரண்ட காலநிலையை அனுபவிக்கின்றன. ஆனால்  அங்கு காணப்படும் எண்ணெய் வளத்தை அடிப்படையாகக் கொண்டே குடியிருப்புக்கள் தேர்றறம் பெற்றுள்ளன. இங்கு காலநிலையின் செல்வாக்கு தேவையற்றதாகிவிட்டது. ஆதே போன்று நீர்வளமும் இங்கு இல்லை. ஆனால் அதிகளவில் வருமானம் ஈட்டுகின்ற காரணத்தினால் நீரினை வேறு நாடுகளிலிருந்து பணம் கொடுத்து வாங்கிக்கொள்கின்ற நிலைமையினைக் காணலாம்.

  சில நாடுகளில் தரைத்தோற்றம் என்பது குடியிருப்புக்களில் செல்வாக்கற்றவையாகக் காணப்படகின்றன. உயரமான பகுதிகளிலம் குடியிரப்பகள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கண்டி நகரம் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ளது. ஆனால் அங்கு தேவையான சகல சதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதன் காரணமாக தரைத்தோற்றம் அங்கு ஒரு தேவையாக அமையவில்லை.

 யப்பானைப் பொறுத்தவரையில் அடிக்கடி இயற்கையனர்த்தத்திற்கு முகம் கொடுக்கும் ஒரு நாடாகும் இருந்தபோதிலும் அந்நாடு இன்று அதன் தொழில் நுட்பத்தின் காரணமாக மனிதன் வாழக்கூடிய நிலைமையினை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று இன்று சனத்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப நிலத்தினுடைய தேவையும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலைமை குடியிருப்புகளுக்கு பொருத்தமான நிலைமையினை தேவையற்றதாக்கியுள்ளன. நிலமில்லாமலே கடற்பகுதியிலே ஒரு தீவினை உருவாக்கி அங்கு மனிதர்களை வசிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இன்றும் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக பசுபிக் தீவில் நிலம் எதுவுமின்றி, கழிவு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டு வருவதனை குறிப்பிடலாம்.

  இவ்வாறு இன்று குடியிருப்புக்களை திர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்திய முக்கிய காரணிகள் சில இடங்களில் பொருத்தமானவையாகவும், சில இடங்களில்  தேவையற்றவையாகக் காணப்படினும் ஒரு குடியிருப்பின் அமைவிடமானது பொருத்தமான அமைவிடக் காரணிகள் அமைகின்றபோதே சாதகமானதாக அமையும்.

Article by Akshayan