இலங்கையில் முதனிலைப் பொருளாதார நடவடிக்கைகளின் ஊடாக இலங்கையின்
ஆரம்ப குடியிருப்புக்கள் உருவாகின. மனிதன் தனது நிலையான வதிவிடத்தை எளிய வாழ்க்கை முறைப் பண்புகளைக் கொண்டனவாக
பண்டைய கிராமங்கள் காணப்பட்டன. இலங்கையின் குடியிருப்புக்களை பின்வருமாறு
நான்காகப் பிரிக்கலாம்
• நகரக் குடியிருப்பு
• கிராமியக் குடியிருப்பு
• திட்டமிடப்பட்ட குடியிருப்பு
• பெருந்தோட்டக் குடியிருப்பு
1) இலங்கையின்
நகரக் குடியிருப்புகள்
வரையறுக்கப்பட்ட நிலத்தில் பெருமளவு சனத்தொகை குவிந்திருப்பதுடன்
அதிக சனச் செறிவும் காணப்படும். வர்த்தகம்,
கைத்தொழில், கல்வி போன்ற செயற்பாடுகளும்
ஒருங்கிணைந்திருக்கும். விவசாயம் சாராத நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர்
சேர்ந்து வாழும் பகுதி நகரக் குடியிருப்பாகும்.
இலங்கை நகர மயமாதல் மேலைத் தேயத்தவர்களின் வருகையின் பின்னரே
துரிதமாக ஏற்பட்டது. சிறப்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது கரையோரப்
பிரதேசங்களில் நகரமயமாதலின் அடிப்படை ஏற்படலாயிற்று.
கொழும்பை வேறு இடங்களுடன் தொடர்புபடுத்தல், புகை
வண்டிப் பாதை பெருந் தெருக்கள் என்பன அமைக்கப்படுவதாலும் பொருட்கள்
ஏற்றியிறக்கப்படுவதாலும் சனத் தொகை அதிகரித்து கொழும்பு பிரதேசம் நகரமாக
உருமாற்றம் பெறத் தொடங்கியது.
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர் ஒன்றிணைந்ததினால்
கட்டன், நுவரெலியா
போன்ற புதிய நகரங்கள் தோன்றின. இலங்கையின் நகரக் குடியிருப்புகளை சனத்தொகைக்கு
ஏற்ப பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
• பெருநகரம் - 50000 பேருக்கு மேல் வசிக்கும் பகுதி
(கொழும்பு)
• நடுத்தர நகரம் - 10000 –
50000 வரையிலானோர் வசிக்கும்
பகுதி (கழுத்துறை)
• சிறுநகரம் - 10000 பேருக்கு குறைவானோர் வசிக்கும்
பகுதி (கேகாலை)
1.1) இலங்கையின்
நகரக் குடியிருப்புகளின் இயல்புகள்
• விவசாய நடவடிக்கைகள் நாராதவையாகவும்,
பெருமளவில் சேவை மற்றும்
கைத்தொழில் நடவடிக்கைகள் கொண்ட பிரதேசமாகக் காணப்படுதல்.
• பல்வேறு கட்டடங்கள், பரந்த கட்ட நிலப்பகுதிகள் மற்றும்
குத்தான கட்டடங்களின் வளர்ச்சி காணப்படுதல்.
• பல்வேறு சமூகக் குழுக்கள் (சமயம்,
இனம், சாதி)
பரந்து வாழுதல்.
• சனத்தொகை அதிகமாகவும், அடர்த்தி கூடியதாகவும் காணப்படுதல்.
• பெருமளவிலான போக்குவரத்து விருத்தி
பெற்ற வலையமைப்பு காணப்படுதல்.
1.2) சேரிப்புறங்கள்
நகர ஒதுக்குப் புறங்களில் அரசிற்கு சொந்தமான நிலங்கள் அல்லது
வீதியின் ஓரங்கள் போன்றவற்றில் , குறைந்த
வருமானம் பெறும் நகரில் தொழில்புரிகின்றவர்களால், பலகைகள் அல்லது, தகரத்துண்டுகள் முதலிவற்றைக் கொண்டு
அமைக்கப்பட்ட வசதியற்ற நெருக்கமான குடியிருப்புகள் சேரிப்புறங்கள் எனப்படுகின்றன.
சேரிப்புறங்களை வரிசைவீடுகள் (லயன்வீடுகள்), சேரித்தோட்டங்கள் என இருபிரிவாக இனம்காணலாம்.
இலங்கை அரசாங்கம் கொட்டில்கள், சேரிப்புறங்களின் பிரச்சினைகளுக்கு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
• சேரிப்புறங்கள் அமைந்துள்ள
பகுதிகளின் நிலைமைகளை மேம்படுத்தல்
• பிரதேசத்தினுள் மீளக் குடியிருத்தல்
• நகருக்கு வெளியே குடியிருத்தல்
• வீடுகளைக் கட்ட நிதி வசதிகள்
வழங்குதல்
• சுகாதார வசதிகளை வழங்குதல்
2) கிராமியக்
குடியிருப்புகள்
முதனிலை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பெருமளவில்
வசிக்கும் இடங்கள் கிராமியக் குடியிருப்புகள் எனப்படுகின்றன. இலங்கையின்
குடியிருப்புகளில் பெரும்பாலானவை கிராமக் குடியிருப்புக்களாகும். இங்கு முதனிலை
பொருளாதார நடவடிக்கைகளான தானியச் செய்கை, காய்கறிச்செய்கை, விலங்குவேளான்மை,
வேட்டையாடுதல், மீன்பிடி போன்றன காணப்படும். கிராமியக்
குடியிருப்புகளில் பருவம் சார்ந்தவை, ஓரளவு நிலையானவை, நிலையானவை
என குடியிருப்புக்களை அமைத்து மக்கள் வாழ்ந்துள்ளனர்.
• இலங்கையின் கிராமியக்
குடியிருப்புக்களை புராதன கிராமங்கள், மகாவலி கிராமங்கள் என இரண்டாக வகைப்படுத்துவர். இலங்கையில்
மன்னர் காலம் முதல் உருவாக்கப்பட்ட பாராம்பரிய கிராமங்கள் புராதன கிராமங்கள்
எனப்படுகின்றன. சிங்கள, தமிழ் கலாசார பரம்பரை அம்சங்கள் மீது
உருவாக்கப்பட்ட ஆரம்ப கிராமங்கள் இதனுள் அடங்குகின்றன.
• புராதன கிராமங்களின் முக்கிய
கூறுகளான குளம், வயல்,
சேனை, ஆற்றங்கரை, வழிபாட்டிடம் என்பவற்றின் மூலம் பொளதீக,
கலாசார வாழ்க்கை
தோற்றம்பெற்றிருந்தது. இப்புராதன கிராமங்களின் பௌதிக அமைவிடம் நீரை அடிப்படையாகக்
கொண்டு அமைந்தது. புராதன கிராமங்களில் கிராமத்தை அறிமுகம் செய்வதற்கு குளங்களின்
பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.
• புராதன கிராமங்களில் குடியிருப்பு,
குளம், புராதன வயல், புதிய வயல், சேனைச்செய்கை நிலம், காடு அல்லது மேட்டுநிலம் ஆகிய ஆறு பகுதிகளைக்
கொண்டிருந்தது.
• புராதன கிராமங்களை குளங்களை
அண்மித்துள்ள உலர்வலய கிராமங்கள், ஈரவலய
கிராமங்கள் என இரண்டு வகையினை அவதானிக்கலாம்.
2.1) இலங்கையின்
கிராமியக் குடியிருப்புக் கோலங்கள்;
இலங்கையின் கிராமியக் குடியிருப்புக் கோலங்கள்
தொழிற்பாட்டினடிப்படயில் குளக் குடியிருப்பு, மீனவக் குடியிருப்பு பிரிக்கப்படுகின்றன.
• குளக் குடியிருப்பு - உலாவலயங்களில்
விவசாய நடவடிக்கையின் நிமித்தம் குளங்களையும் கால்வாய்களையும் சூழ்ந்து
வசிப்பிடங்களை அமைத்துக் கொள்ளப்பட்ட குடியிருப்பு குளக்குடியிருப்பு எனப்பட்டது.
இக்குடியிருப்புக்களில் நெற்பயிர்ச்செய்கை அடிப்படை பொருளாதார நடவடிக்கையாக
அமைவதுடன் பயறு, குரக்கன்
போன்ற சேனைப் பயிhச்செய்கையும்,
வீட்டுத்தோட்டத்தில் மர்கறிப்
பயிர்ச்செய்கையும் பழச்செய்கையும் காணப்பட்டன. குளங்களில் மீன்பிடித்தலும் ,
காடுகளில் வேட்டையாடுதலும்
இடம்பெற்றன.
• மீனவக் குடியிருப்பு - கடற்கரையை
அண்டியதாக மின்பிடித் தொழிலை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட குடியிருப்புகள்
மீன்பிடிக் குடியிருப்புகள் ஆகும். இலங்கை தீவாகையால் இலங்கையைச் சூழவுள்ள
கடற்கரைப் பிரதேசங்களை அடுத்துள்ள மக்கள் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டதால்
மீனவக் கிராமங்கள் தோற்றம் பெற்றன. பருவகாலங்களுக்கேற்ப மீனவர்கள் இடம்பெயர்வதால்
அவர்களது வீடுகள் பெருமளவில் குடிசைகளாகவே காணப்படுகின்றது. மயிலிட்டி, கற்பிட்டி, மிரிஸ்ஸ, பேருவளை, தங்காலை, நீர்கொழும்பு, பேசாலை, கல்முனை, மன்னார், திருகோணமலை, சிலாபம், காலி போன்றன மினவக் குடியிருப்புக்களை
காணலாம்.
• திட்டமிட்ட குடியிருப்பு:-
குடியிருப்புக்களை திட்டமிட்ட முறையில் அமைத்து அதன் மூலம்
விவசயா நிலங்களை குடியிருப்புகளுக்கு அண்மையிலும், பல்வேறு சேவை வசதிகளையும் இலகுவில் அணுகக்
கூடியவாறு குடியிருப்புக்களை அமைத்தல் திட்டமிட்ட குடியிருப்பு எனப்படுகின்றது.
உலர் வலய விவசாயக் குடியிருப்புக்கள், மகாவலிக் குடியிருப்புக்கள் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
திட்டமிட்ட குடியிருப்புக்களில்
மகாவலி குடியிருப்பு முக்கியமானதாகும்.
இவை மகாவலி கங்கையுடன் தொடர்பு பட்டவையாகக் காணப்படுகின்றன. நேர்கோட்டு
முறையில் குடியிருப்புகள் அமைந்து காணப்படுவதனால் வளங்களைப் பங்கிடுவதில்
பிரச்சினைகள் காணப்பட்டன. இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமுகமாகவே
திட்டமிடப்பட்ட மகாவலி குடியிருப்பு அமைக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட
குடியிருப்பில் எல்லாக் குடும்பத்துக்கும் நீர்ப்பாசனத்துடனான காணி
வழங்கப்பட்டிருப்பதைக் காணலாம். கூட்டுறவுச் சங்கம், பாடசாலை, விளையாட்டு மைதானம், முன் பாடசாலை, அஞ்சல் அலுவலகம், மயான பூமி ஆகிய பகுதிகள்
அமைக்கப்பட்டிருத்தல்.
• பெருந்தோட்டக் குடியிருப்பு:-
பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக பிரித்தானியர்களால்
தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் வாழ்வதற்காக மலையகப்
பகுதியில் அமைக்கப்பட்ட குடியிருப்புகள் தோட்டக் குடியிருப்புகள் ஆகும். இத்
தோட்டக் குடியிருப்புகள் நிரற்படுத்தப்பட்ட சிறிய அறைகள் கொண்ட லயன்
குடியிருப்புகளாக காணப்பட்டன. இவை மிகவும் வசதி குறைந்தவையாகவும் அருகில் பாடசாலை,
இந்துகோவில் என்பவற்றைக்
கொண்டபவையாகவும் காணப்படுகின்றன. தரிசு நிலச்சட்டத்தின் கீழ் மலையக
மக்களிடமிருந்து பெறப்பட்ட காணிகளிலேயே இவ்வாறான லயன் குடியிருப்புக்கள்
அமைக்கபட்டன.
நுவரெலியா, பதுளை,
மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இத்தகைய
பெருந்தோட்டக் குடியிருப்புகள் பெருமளவில் பரவிக் காணப்படுகின்றன.
சுதந்திரத்தின் பின்னர் அரசினால் பெருந்தோட்ட
குடியிருப்புக்களிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
• சுகாதார வசதிகளை மேம்படுத்துதல்
• தனிவீடுகளை அமைக்கும் உத்தேசத்
திட்டம்.
• உடல் ஆரோக்கிய நிலையை மேம் படுத்துவதற்கு
தோட்ட மருத்துவ
• மனைகளை அமைத்தலும் அலுவலர்களை
நியமித்தலும்.
• தொழிலாளர்களின் சம்பள மட்டத்தை
உயர்த்துதல்
• உணவு நிவாரணம் வழங்குதல்
.jpg)

