உலக சூழல் தினம் - 2020

வருடாவருடம்  ஜுன் மாதம் 6 ஆம் திகதி உலக சூழல் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.  முதன்முதலில் 1974 ஆம் ஆண்டு அனுஸ்டிக்கப்பட்ட சூழல் தினம் இன்று மக்கள் தினம் (Peoples Day) என சிறப்பித்து அனுஸ்டிக்கப்படுமளவிற்கு புவியிலுள்ள அனைவராலும் சூழலின் குழந்தைகள் தாங்கள் என்பதை உணர்ந்து செயற்பட வைக்கும் ஒரு தினமாக மாற்றம்பெற்றுள்ளது.


சூழல் தினமானது வருடா வருடம் ஒரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அனுஸ்டிக்கப்படுவது வழக்கமாகும்.. அந்தவகையில் இவ்வருடத்தில் கருப்பொருளாக “உயிர்பல்வகைமை(Biodiversity)” என்பது காணப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடுகளில் சூழல்தினத்திற்குரிய விருந்தோம்பல் நாடாக ஐக்கிய நாடுகள் சூழல் நிகழ்ச்சித் திட்டத்தினால் அறிவிக்க்பபடுகின்றது அந்தவகையில் இவ்வருடத்திற்குரிய பிரதான விருந்தோம்பல் நாடாக தென் அமரிக்கக் கண்ட நாடான கொலம்பியா அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக உயிர்ப்ல்வகைமையும் (Theme: Biodiversity), வாசகமாக “இயற்கைக்கான நேரம்”(Slogan : Time for Nature) என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.  உண்மையில் 2019 ஆம் ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட “கொரோனா நுண்ணங்கித் தாக்கம்” , கடந்த  வருடங்களில் பிறேசில், ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்ரேலிய முதலிய நாடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ மற்றும் கிழக்கு ஆபிக்காவினுடாக ஆரம்பித்து தற்போது விவசாய நடவடிக்கைகளல் தாக்கத்தை உண்டு பண்ணும் “வெட்டுக்கிளியின் தாக்கம்” முதலிய அண்மைக்கால நிகழ்வுகள் சூழலின் உயிர்ப்பல்வகைமை தொடர்பாக கவனம் எடுக்கவேண்டிய தேவையையும், சூழலின் மிகப்பெரும் சக்தியையும் மணிதன் உணர்ந்து கொள்ளவேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.

நிலத்திலும், நீரிலும் வாழ்கின்ற எல்லா உயிரினங்களினும் வாழ்க்கைக்கு துணைபுரிகின்ற அத்திவாரமாக உயிர்ப்பல்வகைமையானது விளங்குகின்றது.

உயிர்ப்பல்வகைமையானது மனிதனுடைய உடல்நலம், சுத்தமான காற்று மற்றும் நீர் ஆகியவற்றை வழங்கல், போசாக்கான உணவுகள், விஞ்ஞானரீதியான புரிதல்கள் மற்றும் மருத்துவ மூலங்கள், இயற்கை தொற்றுநோய் எதிர்ப்பு, காலநிலை மாற்றத் தணிப்பு முதலிய ஒவ்வொரு அம்சங்களிலும் தாக்கம் செலுத்துகின்றது.  இத்தகைய வலையமைப்பினுள் உள்ள ஒரு கூறினை மாற்றுதல் அல்லது அகற்றுதலானது அதனோடு தொடர்புடைய உரியின முறைமை பாதிக்கப்படுவதுடன் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

காடழிப்பு, வனவிலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்தல், விவசாயத்தை தீவிரப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்தை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட மனித நடவடிக்கைகள் இயற்கையை அதன் வரையறைக்கு அப்பால் கொண்டுசென்றுள்ளன.  இத்தகைய மனித நடவடிக்ககைகள் காரணமாக உயிர்பல்வகைமை இழப்பானது  உணவு மற்றும் சுகாதார அமைப்புகளின் சரிவு உட்பட மனிதகுலத்திற்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

COVID-19 எனப்படும் கொரோனா தொற்றுநோயினுடைய தோற்றமானது, உயிர்ப்ல்வகைமையை நாம் அழிக்கும்போது, மனித வாழ்க்கையை ஆதரிக்கும் முறைமையை அழிக்கிறோம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இன்று, உலகளவில், கொரோனா வகை வைரஸால் ஏற்படும் நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு பில்லியன் நோயாளர்கள் மற்றும் மில்லியன் கணக்கான இறப்புகள் ஏற்படுகின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்களில் வளர்ந்து வரும் தொற்று நோய்களில் 75 சதவிகிதம் ஜூனோடிக் எனப்படும் ஒரு விலங்கீருந்து இன்னொரு விலங்கிற்கு பரவும் வகை நோய் ஆகும்,

இன்று ஆபிரிக்கப் பிரதேசங்களில் இருந்து கட்டம் கட்டமாக ஒவ்வொரு பிரதேசத்தையும் பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்கி வரத் தொடங்கியுள்ளன. உண்மையில் உயிர்பவ்லகைமையின் மாற்றத்தில் அல்லது அத்தொகுதியின் ஒரு சில உயரினங்களின் அழிவிற்கு அல்லது நிலைப்பின்மைக்கு வழிவகுத்த செயல்களே இன்று வெட்டுக்கிளியின்  பரவலுக்கும், பாரிய தாக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது. குறிப்பாக வெட்டுக்கிளிகளை உணவாக உட்கொண்டு சூழல்சமநிலையைப் பேணியவையாக சிறிய வகைப் பறவையினங்கள் காணப்பட்டிருந்தன. ஆனால் அப்பறவையினங்களை நாம் பல்வேறுபட்ட செயற்பாடுகளினால் குறைத்துவிட்டோம். அதாவது தொலைபேசி கதிர்வீசல் கோபுரங்களின் தாக்கம், காடழிப்பு, பயிர்ச்செய்கைகளுக்கு வீசப்பட்ட நச்சு இரசாயன கிருமிசாநினிகள், நீர் நிலைகளில் நச்சுத்தன்மை கலந்தமை, மரபணு மாற்றப்பட்ட பயிரினங்கள் அவற்றை உண்ணும் பறவைகளின் இனப்பெருக்கம் குறைவடைதல், பறவைகின் இயற்கையின் சுதந்திரத்தில் மனிதத் தலையீடுகள் உட்பட்ட விடயங்கள் இன்று பறவைகளின் அதிகளவிலான அழிவிற்கு வித்திட்டுள்ளது.  பறவைகள் குறைந்தமையால் வெட்டுக்கிளிகளின் இயற்கையான மட்டுப்படுத்தல் செயன்முறை நிலை குலைகின்றது. இதனால் வரையறையற்றளவில் பாலைவன வெட்டுக்கிளிகள்  வளர்ச்சியடைந்துள்ளன.

உயிர்ப்பல்வகைமை அழிவடையுமாயின் அது மனிதனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இவையெல்லாம் எமக்கு பாடங்களாக தெளிவுபடுத்திச் செல்கின்றன. இருந்தும் இன்னும் நாம் இந்த நிலை தொடர்பில் கவனம் எடுக்காமலே இருப்பது தொடர்ந்தும் எம்மை அழிவிற்குட்படுத்துவது மட்டுமல்ல . மனிதர்கள் வசிக்க முடியாத கிரகமாக ஒரு நாளில் புவியை மாற்றும் என்பதை தெளிவுபடுத்துகின்றன.






கடந்த வருடங்களில் இடம்பெற்ற சூழல் தினம் பற்றிய சில தகவல்கள்
Year
Theme
Host city
1974
Only one Earth during Expo '74
Spokane, United States
1975
Human Settlements
Dhaka, Bangladesh
1976
Water: Vital Resource for Life
Ontario, Canada
1977
Ozone Layer Environmental Concern; Lands Loss and Soil Degradation
Sylhet, Bangladesh
1978
Development Without Destruction
Sylhet, Bangladesh
1979
Only One Future for Our Children – Development Without Destruction
Sylhet, Bangladesh
1980
A New Challenge for the New Decade: Development Without Destruction
Sylhet, Bangladesh
1981
Ground Water; Toxic Chemicals in Human Food Chains
Sylhet, Bangladesh
1982
Ten Years After Stockholm (Renewal of Environmental Concerns)
Dhaka, Bangladesh
1983
Managing and Disposing Hazardous Waste: Acid Rain and Energy
Sylhet, Bangladesh
1984
Desertification
Rajshahi, Bangladesh
1985
Youth: Population and the Environment
Islamabad, Pakistan
1986
A Tree for Peace
Ontario, Canada
1987
Environment and Shelter: More Than A Roof
Nairobi, Kenya
1988
When People Put the Environment First, Development Will Last
Bangkok, Thailand
1989
Global Warming; Global Warning
Brussels, Belgium
1990
Children and the Environment
Mexico City, Mexico
1991
Climate Change. Need for Global Partnership
Stockholm, Sweden
1992
Only One Earth, Care and Share
1993
Poverty and the Environment – Breaking the Vicious Circle
Beijing, People's Republic of China
1994
One Earth One Family
London, United Kingdom
1995
We the Peoples: United for the Global Environment
Pretoria, South Africa
1996
Our Earth, Our Habitat, Our Home
Istanbul, Turkey
1997
For Life on Earth
1998
For Life on Earth – Save Our Seas
1999
Our Earth – Our Future – Just Save It!
Tokyo, Japan
2000
The Environment Millennium – Time to Act
Adelaide, Australia
2001
Connect with the World Wide Web of Life
Torino, Italy and Havana, Cuba
2002
Give Earth a Chance
Shenzhen, People's Republic of China
2003
Water – Two Billion People are Dying for It!
Beirut, Lebanon
2004
Wanted! Seas and Oceans – Dead or Alive?
Barcelona, Spain
2005
Green Cities – Plan for the Planet!
San Francisco, United States
2006
Deserts and Desertification – Don't Desert Drylands!
Algiers, Algeria
2007
Melting Ice – a Hot Topic?
London, England
2008
Kick The Habit – Towards A Low Carbon Economy
Wellington, New Zealand
2009
Your Planet Needs You – Unite to Combat Climate Change
Mexico City, Mexico
2010
Many Species. One Planet. One Future
2011
Forests: Nature at your Service
New Delhi, India
2012
Green Economy: Does it include you?
Brasilia, Brazil
2013
Think.Eat.Save. Reduce Your Foodprint
Ulaanbaatar, Mongolia
2014
Raise your voice, not the sea level
Bridgetown, Barbados
2015
Seven Billion Dreams. One Planet. Consume with Care.
Rome, Italy
2016
Zero Tolerance for the Illegal Wildlife trade
Luanda, Angola
2017
Connecting People to Nature – in the city and on the land, from the poles to the equator
Ottawa, Canada
2018
Beat Plastic Pollution
New Delhi, India
2019
Beat Air Pollution
China



தொகுப்பு: அக்‌ஷயன்

PDF Link : Download