போகன்வில் (Bougainville) எனும் புதிய நாடு


உலகிலே 196 ஆவது நாடாக ஓசியானியா கண்டத்திலிருந்து போகன்வில் (Bougainville)எனும் நாடு உதயமாகியுள்ளது.  கடந்த 2019 இன் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலம்  98 சதவீதமான மக்கள் பப்புவா நியுகினியா என்ற நாட்டிலிருந்து சுதந்திர தேசமாக பிரிந்து செல்வதற்கான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.


உலகில் உள்ள கண்டங்களில் ஓசியானியா அல்லது அவுஸ்ரேலியா என அழைக்கப்படும் கண்டத்தின் ஒரு நாடாக பப்புவா நியுகினியா இருக்கின்றது. இந்நாடானது  நியுகினித்தீவின் கிழக்கு அரைவாசியையும், போகன்வில் தீவு, புக்கா தீவு மற்றும் வேறு பல தீவுகளையும் கொண்ட ஒரு நாடாக இருந்தது.

போகன்வில் தீவு பகுதியில் மனிதர்கள் 29000 ஆண்டுகளாக வசித்து வந்திருந்தனர்.  குடியேற்ற காலத்தில் ஜேர்மனி, அவுஸ்ரேலியா , ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளால் கைப்பற்றப்பட்டு  ஆட்சிக்குட்பட்டிருந்தது.
போகன்வில் என்ற பெயர் 1768 ஆம் ஆண்டில் இப்பகுதிக்கு வந்த பிரெஞ்சு கடற்படைத் தளபதி லூயி ஆன்டன் டி போகன்வில் என்பவரின் பெயரால் இப்பகுதி போகன்வில் என அழைக்கப்படுகிறது.
போகன்வில்லுக்கான பிரிவினைக் கோரிக்கை 1960களில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. 1975 இல் பப்புவா நியூ கினி அவுஸ்ரேலியாவிடம் இருந்து விடுதலை அடைவதற்கு சிறிது காலத்திற்கு முன்னர் வடக்கு சொலமன்கள் குடியரசு என்ற பெயரில் இப்பகுதிக்கு விடுதலை அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அடுத்த ஆண்டில் இது பப்புவா நியூ கினியுடன் இணைக்கப்பட்டது. போகன்வில் உள்நாட்டுப் போரில் (1988–1998) 20,000 பேர் வரையில் இறந்துள்ளனர். அதன் பின்னர், போகன்வில் தன்னாட்சிப் பகுதி அமைக்கப்பட்டது.