புவியியல் வினாவிடை நூல்களின் வெளியீடு

புதிய பாடத்திட்டத்தில் அமைந்த புவியியல்  தரம் 07,  புவியியல் தரம் 11 ஆகியவற்றிற்கான வினாவிடை நூகளின் வெளியீட்டு நிகழ்வு நேற்று (21.08.2016) தவசி லேணிங் சிற்றியில் நடைபெற்றது.

நூலாசிரியர் அக்‌ஷயன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் வெளியீட்டு நிகழ்வினை கல்வியகத்தின் பணிப்பாளர் மா.சபாரெத்தினம் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தியிருந்தார். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. க.சூரியகுமாரன் (வளிமண்டலவியல் திணைக்களம், மட்டக்களப்பு) அவர்களும் விசேட அதிதிகளாக திரு. பா.பரசுராமன் (மனித உரிமைகள் இல்ல இணைப்பாளர்), திரு. செ.புவீந்திரன் (தாதிய பரிபாலகர்), திரு. த.கமலநாதன் (ஆசிரியர்) , திரு. இ.நாகேந்திரன் (ஆசிரியர்), திருமதி. வ.கமலநாதன் (ஆசிரியர்), திருமதி. ஜெ.புவீந்திரன் (ஆசிரியர்), செல்வி. சா.பிரபாஜினி (ஆசிரியர்), திரு. வீ.குணசீலன் (கிராம உத்தியோகத்தர்), திரு. பூ.அருள்நாதன் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்), திரு. சி.தில்லையன் (கல்விய ஆலோசகர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கல்வியக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களும் கலந்துகொண்டனர்.