இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின் அபிவிருத்திக்கு உட்பட்ட கைத்தொழிலாகும். ஆட்களை ஏற்றும் ஹெலிக்கொப்டர் முதல் பெரியளவிலான ஆட்களை ஏற்றும் ஆகாய விமானம் வரை உற்பத்தி செய்யப்படுவதுடன் யுத்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் விமானம், இயக்கிகளுடனான விமானம், குண்டு வீசும் விமானம் என பலவகைப்படும். சத்தம், வேகம் மிக விரைவாக பயணம் செய்யும் விமானம் என நடைமுறையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
1) விமானம் கட்டும் தொழிலில் ஈடுபடும் நாடுகள்:-
• யப்பான் - டோக்கியோ, நகோயா, ஒசாக்கா
• ஐ.அமெரிக்கா – நியுயோர்க், பால்டிமோர், கலிபோர்னியா, மிச்சிகன், ஒகையோ, லாஸ்ஏஞ்சல்ஸ், கொன்றிக்
• ஐ.ராட்சியம் - போட்ஸ்மவுத், லண்டன், நியுசவுத்வேல்ஸ்
• பிரான்ஸ் - பாரிஸ், டவுசில்ங்
• இந்தியா - இலக்னோ, கைதரபாத். கான்பூர், புதுடில்லி, பெங்களுர்
• ஜேர்மனி – பிராங்பொட், பெர்லின்
• சீனா – பீஜிங், சாய்காய்
• இத்தாலி – வெனிஸ்
• இஸ்ரேல் - மிலான்
• ரஸ்யா - ஏறொமினா
2) விமானக் கைத்தொழிலுக்கு சாதகமான காரணிகள்:-
• மூலப்பொருள் - விமானங்கள் கட்டவதற்குரிய மூலப்பொருட்கள் டைட்டேனியம், அலுமியனியம் என்பன முக்கியமானவையாகும். இவை துருப்பிடிக்காதவையாகவும், பாரம் குறைந்தவையாகவும் காணப்படுகின்றது. எனவே தேவையான உலோகங்கள் நாட்டினுள்ளே கிடைக்கக் கூடியதாகவோ அல்லது வேறு நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்டோ பயன்படுத்தப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்கா, ரஸ்யா, பிரானஸ் பொன்ற நாடுகளில் இம்மூலப்பொருட்களை இலகுவில் பெற்றுக் கொள்ளமுடிகின்றது.
• மூலதனம் - அதிகளவு மூலதனத்தை முதலிட வேண்டிய கைத்தொழிலாக விமானம் கட்டும் கைத்தொழில் காணப்படுகின்றது. விமானக் கைத்தொழிலில் ஈடுபடு;ம் நாடுகள் பெருமளவில் அபிவிருத்தியடைந்த செல்வந்த நாடுகளாக காணப்படுகின்றது. யப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் பொருளாதாரத்துறையில் விருத்தியடைந்த நாடுகளாகும். அத்துடன் சில நாடுகளில் விமானத்தை கொள்வனவு செய்யும் நாடுகளே உற்பத்திக்குரிய உதவிப்பணத்தை வழங்குகின்றது.
• தொழிநுட்பத்திறன் விருத்தி - விஞ்ஞான தொழினுட்ப வசதிகள் காணப்படுகின்றமையும் இக்கைத்தொழில் இட அமைவுக்கு பிரதான காரணியாகும். யப்பான், பிரித்தானியா. அமெரிக்கா முதலிய விமான உற்பத்தி நாடுகளில் விஞ்ஞான தொழினுட்ப பின்னணி வாய்ந்த தொழிநுட்பவியலாளர்களையும், தொழிலாளர்களையும் பெறக்கூடியதாகவுள்ளது. இதனால் இக்கைத்தொழில் இந்நாடுகளில் இடஅமைவினைப் பெற்றுள்ளன.
• வரண்ட காலநிலை - காலநிலை இன்னுமொரு முக்கிய காரணியாகும். விமானம் கட்டும் கைத்தொழிலுக்கு ஆய்விற்கும் விமானம் கட்டுவதற்கும் நல்ல,சூரிய ஒளியும், குறைவான மழைவீழ்ச்சியும் காணப்படல் அத்தியவசியமாகும விமான உற்பத்தி நாடுகளில் சிறப்பான வலய நாடுகளும் வரண்ட வலய நாடுகளும் காணப்படுவதால் இவ்வாறான பண்புகளைக் காணமுடியும். இந்த பொருத்தமான காலநிலை தன்மை விமானக் கைத்தொழிலின் விருத்திக்கு வழிவகுத்துள்ளது.
• இடவசதி – விமானம் கட்டும் தொழிலானது விமானத்தின் வெளிப்பகுதியை உற்பத்தி செய்யும் ஆலை, உந்து கருவிகளை உற்பத்தி செய்யும் ஆலை, என்ஜின்களை உற்பததி செய்யும் ஆலை என பல்வேநு பகுதியவிலான தொழிற்சாலைகளை கொண்டமைந்ததுடன் அவை யாவும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு விமானமாக ஒன்றிணைக்கப்படுகின்றன. இதனால் விமானம் கட்டும் கைத்தொழிலுக்கு விசாலமான இடம் அவசியமாகும். மலைகள் அற்ற பரந்த சமவெளி நிலம் காணப்படல் விமான ஆய்வு நடவடிக்கைகளுக்கு ஏற்றதாகும். மேற்காட்டப்பட்ட நாடுகளுள் இவ்வாறான வசதிகள் தெளிவாகக் காணப்படுகின்றமையால் இக்கைத்தொழிலில் இடஅமைவு சாதகமாகக் காணப்படுகின்றது.
• அரச உதவி - பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் விமானம் கட்டும் கைத்தொழில் இடம்பெற அரச கொள்கையும் காரணமாக அமைகின்றது. விசேடமாக நாட்டின் பாதுகாப்பிற்கு செல்வாக்கு செலுத்தும் கைத்தொழில் என்ற அடிப்படையில் அரச ஆதரவு இது தொடர்பாக பிரதான செல்வாக்கு செலுத்துகின்றது
3) வானூர்திக் கைத்தொழிலின் அண்மைக்காலப் போக்குகள்:-
• விமானத்தை உற்பத்தி செய்வதற்குரிய செலவு அதிகரித்து செல்கின்றமை. (அலுமினியம், டைட்டேனியம் விலை உயர்வு)
• நவீன தொழில்நுட்பத்தின் மூலம் வேகமும் வசதியும் கொண்ட விமானங்களின் உற்பத்தி.
• போக்குவரத்துத் துறைக்காக பெரிய விமானங்கள் (வான் பேருந்து) உற்பத்தி செய்யப்படுகின்றமை.
• தரிப்பு இன்றி அதிக தூரம் பிரயாணஞ் செய்யக்கூடிய விமானங்களை உற்பத்தி செய்தல்.
• இராணுவத்துறை சார்ந்த விமானங்களின் உற்பத்தி அதிகரிப்பு. (கிபீர், மிக்)
• விமானங்களில் நவீன இலத்திரணியல் கருவிகள் மற்றும் புPளு பாவணை அதிகரிப்பு.
• விண்வெளிக் கலங்களை உற்பத்தி செய்தல் பிரசித்தி பெற்றுள்ளமை.