20 ஆம் நூற்றாண்டில் உலகின் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுக்கொண்ட
துறையாக மோட்டர் வாகன கைத்தொழிலை அடையாளப்படுத்த முடியும். மில்லியன் டொலர் அளவில்
ஆதாயம் பெற முடிவதுடன் மில்லியன் கணக்கான தொழில் வாய்ப்பு சந்தர்ப்பத்தையும் அநேக
கைத்தொழிலுக்கு உபகாரச் சேவை வழங்கும் துறை என்ற வகையில் மோட்டர் வாகனம்
நடைமுறையில் முன்னேற்றத்துக்கு உட்பட்டுள்ளது.
1) மோட்டார்
வாகனக் கைத்தொழிலில் ஈடுபடும் நாடுகள்:-
• யப்பான் - டோக்கியோ, யொக்ககாமா, நகோயா, ஒசாகா, கவாசாகி, கிரோசிமா
• ஐக்கிய அமெரிக்கா - டெட்றோயிட், கிளீவ்லாந்து, சிக்காக்கோ, பால்டிமோர், ஒக்லகாமா, கன்சாஸ்
• இந்தியா -மும்பாய், டெல்லி, சென்னை, கல்கத்தா, பெங்களுர், கோயமுத்தூர், அகமதாபாத், மைசூர், கைதரபாத், லக்னோ
• ஜேர்மனி - கொலோன், பெர்லின், பிராங்போட், ஸ்ருட்காட்
• இத்தாலி - மிலான், மியூறின், ரொராண்டோ
• ரஸ்யா - மொஸ்கோ
• பிரித்தானியா
• N.ஐ.ஊ. நாடுகள் - தென்கொரியா,மலேசியா, மெக்சிக்கோ, பிறேசில், ஆஜெந்தீனா, சிங்கப்பூர், தாய்வான், தென்ஆபிரிக்கா, இந்தோனேசியா,
• அவுஸ்ரேலியா, கனடா, பிரான்ஸ்
2) மோட்டார்
வாகனக் கைத்தொழிலுக்குச் சாதகமான காரணிகள்:-
• இரும்புருக்கு மையங்கள் - மோட்டர்
வாகனக் கைத்தொழில் இட அமைவிற்கு பிரதானமான இரும்பு உருக்கு கைத்தொழிலுக்கு அருகில்
இருத்தல் மிகப் பொருத்தமானது. யப்பான், பிரித்தானியா, ஐக்கிய
அமெரிக்கா, இந்தியா
ஆகிய நாடுகள் இந்த முக்கியமானவைகளாகும். இந்த நாடுகளினால் இரும்பு உருக்கு
உற்பத்தி செய்வதனால் அதற்கு அருகிலேயே கைத்தொழிற்சாலையும் அமையப் பெற்றுள்ளது.
யப்பானின் டோக்யோ, யொக்ககாமா
பகுதிகளில் மோட்டார் உற்பத்தி மையங்கள் இரும்புருக்குத் தொழிற்சாலைகளை ஆதாரமாகக்
கொண்டு அமைந்துள்ளன. அதே போன்று ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளில்
காணப்படுகின்ற மோட்டார் வாகன உற்பத்தி மையங்கள் இரும்பருக்கு தொழிற்சாலைகளை
ஆதாரமாகக் கொண்டு அமைந்துள்ளன.
• வலுப்பொருள் - வலு சக்தி அநேகமான
கைத்தொழிலுக்கு குறிப்பாக மோட்டர் வாகன உற்பத்திக்கு இன்றியமையாத வளமாகும்.
பெற்றோலியம், நிலக்கரி,
இயற்கை வாயு என்பன
இக்கைத்தொழில் தொடர்பான அத்தியாவசிய காரணியாகும். ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, யப்பான் பொன்ற நாடுகளில் வலுப்பொருட்களை
நேரடியாகவோ அல்லது வெறு நாடுகளிலிருந்தோ இறக்குமதி செய்துகொள்ள முடிகின்றது.
• கைத்தொழில் துறை விருத்தி – மோட்டார் வாகனக் கைத்தொழிலின்
விருத்திக்கு செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் கைத்தொழில் துறை வளாச்சியும்
தொழில்நுட்ப விருத்தியும் முக்கியமானதாகும். மோட்டார் வாகனங்களில்
பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் துணைப்பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய
அளவில் கைத்தொழில்துறையானது வளர்ச்சியடைந்திருத்தல் வேண்டும். அத்துடன் வாகனங்கள் நீடித்த
பாவனையும் இலகவாக இயக்கக்கூடியதாகவும், நவீன வசதிகளை கொண்டதாகவும் காணப்படவேண்டும். யப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் கைத்தொழிலிலும்,
தொழிநுட்பத்திலும் முன்னெறிய
நாடுகளாகவும் காணப்படுகின்றமை சாதகமாக அமைந்துள்ளது.
• சந்தை வசதி – உலகின் போக்குவரத்து வர்த்தகம் என்பன
விருத்தியடைந்து காணப்படுவதனால் மோட்டார் வாகனங்களின் பாவனையும் அதிகரித்துள்ளது.
மோட்டர் வாகனக் கைத்தொழில் மனிதனின் போக்குவரத்தையும் பல்வேறு செயல்களையும் மிக
விரைவில் செய்துமுடித்துக் கொள்வதற்கும் முடியும். 20 ஆம் நூற்றாண்டில் உலகின் மிக உயர்ந்த
இடத்தைப் பெற்றுக்கொண்ட துறையாக மோட்டர் வாகன கைத்தொழிலை அடையாளப்படுத்த முடியும்.
தேவைக்கு ஏற்பவே பொருள் உற்பத்தி நடைபெறுகின்றது. தேசிய, சர்வதேச சந்தைகளை அடிப்படையாகக் கொண்டு
மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்யப்படுகின்றது. விசேடமாக ஜப்பான், சீனா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் இதில்
உள்ளடங்கும். பார ஊர்திகள், மற்றும்
சிறிய கெண்டர்கள் என்பன இன்று பெருமளவில் வர்த்தக நடவடிக்கைகளில்
ஈடுபடுத்தப்படுவதுடன் தனிநபர் பாவனைக்கான போக்குவரத்துச் சாதனங்களையும் இதன்மூலம்
பெறப்படுகின்றது. எனவே உள்நாட்டு, சர்வதேச
சந்தைவசதிகளை இக்கைத்தொழில் பெற்றுள்ளது.
• தொழிநுட்ப அறிலுடைய தொழிலாளர்கள் -
விஞ்ஞான தொழினுட்ப தேர்ச்சி, முகாமைத்துவ
தேர்ச்சி வாய்ந்த தொழிலாளர்கள் காணப்படுவது மோட்டர் வாகன கைத்தொழில் இட அமைவிற்கு
சாதகமான காரணியாகும். என்ஜின்களை பொருத்துதல், இலத்திரணியல் சாதனங்களை இணைத்தல
போன்றவற்றிற்கு தொழிநுட்ப அறிவும் பயிற்சியும் அவசியமாகும். யப்பானில் மனித வளம்
உயர்;ந்தளவில்
இக்கைத்தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
• இடவசதி – மோட்டார் வாகனக் கைத்தொழிலுக்கு தேவையான
உதிரிப்பாகங்களை இரும்புருக்கு ஆலைகளிலிருந்தும், துணைச் சாதனங்கள் வேறு தொழிற்சாலைகளில்
இருந்தும் பெறப்பட்டு ஒரு மையத்தில் ஒன்றிணைக்கப்படுகின்றன. ஒரே ஆலையில் பல
வாகனங்களை ஒருங்கிணைப்பதற்கும் அதற்குரிய மூலப்பொருட்களை குவித்து வைப்பதற்கும்
பரந்த சமவெளிப் பிரதேசங்கள் பொருத்தமானவையாக அமைந்துள்ளன. உதாரணம் டோக்கியோ
• போக்குவரத்து வசதி – மூலப்பொருட்களை சேகரிப்பதற்கும், மோட்டார்
வாகனங்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்
உள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கும்
போக்குவரத்து வசதி அவசியமாகின்றது. உள்நாட்டுச் சந்தைகளுக்கு மோட்டார்
வாகனங்களை கனரக வாகனங்களின் மூலமோ அல்லது புகையிரதங்களிலோ எடுத்துச் செல்கின்றனர்.
சர்வதேச சந்தைகளுக்கு வாகனங்கள் கப்பல்களின் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.
குறிப்பிட்ட நாடுகளின் போக்குவரத்து வலைப்பின்னல் விருத்தி பெற்றுள்ளது.
3) மோட்டார்
வாகனக் கைத்தொழிலின் அண்மைக்காலப் போக்குகள்:-
• சூழலுக்கு இசைவான வாகனங்களை உற்பத்தி
செய்தல். புதிய சூழல் பாதிப்பற்ற எரிபொருள்களை பயன்படுத்தக் கூடிய வாகன
உற்பத்தி(மின்சக்தி, சூரியசக்தி)
• பெற்றோலிய பாவனையைக் கட்டுப்படுத்தி
தற்கால சிறிய ரக பரிமானமுள்ள வண்டிகளை உற்பத்தி செய்தல்.
• சகல சொகுசு வசதி கொண்ட மோட்டார்
வண்டிகளை உற்பத்தி செய்யும் முறை அதிகரித்தல். (A.C,
T.V, Radio)
• வாகனங்களின் வடிவமைப்பை அடிக்கடி
மர்றம் செய்தல். சிறிய வேகம் கூடிய விமான வடிவிலான கார் உற்பத்தி - யப்பான்
• மூலப்பொருட்களுடன் இலேசான அலுமினியம்,
பிளாஸ்டிக், கண்ணாடி இழைப் பொருட்கள் பயன்படுத்தி
பாரம் குறைவான வாகனங்களை உற்பத்தி செய்தல்.
• உயர் தொழில் நுட்பங்கள்
பயன்படுத்தப்படுதல். (G.P.S. கருவி இணைக்கப்பட வாகனங்கள்.)
• கடினமான வேலைகளுக்கு இயந்திர
மனிதர்கள் (சுழடிழ) பயன்படுத்தப்படுதல்.
• N.I.C நாடுகளின் போட்டி அதிகரிப்பு. (ஆசிய
நாடுகளின் சந்தை)
• புதிய மோட்டார் வண்டி உற்பத்தி
மையங்கள் உருவாக்கம்.
• யப்பானின் வாகனங்களுக்கு மக்கள்
விருப்பு அதிகரித்துள்ளமை.