இலத்திரனியல் கைத்தொழில்

மக்கள் வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் நடைபெறும் செயற்பாடுகளினை இலகுவாக்குவதில் தகவல் தொடர்பாடல் தொடர்பாக பல்வேறு உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுதல் இலத்திரணியல் கைத்தொழில் (Electronic Industry) ஆகும்.

•             உயர் தொழினுட்ப கைத்தொழிலுக்கும் (High Tech Industries) இலத்திரனியல் கைத்தொழிலுக்கும் (Electronic Industry) இடையில் பாரிய வேறுபாடு இல்லை. இருப்பினும் சிறிய வேறுபாடு காணப்படுகின்றது. உயர் தொழினுட்ப கைத்தொழிலின் ஒரு பிரிவே இலத்திரனியல் கைத்தொழிலாகும்.
•             நவீன தொழினுட்ப ஆராய்ச்சியின் உதவியுடன் மனித இனத்தின் விருத்திக்கோ அல்லது அழிவிற்கோ ஏதுவான தொழினுட்ப உபகரணங்களை நிர்மானித்தல் அதிஉயர் தொழினுட்பக் கைத்தொழில் (High Tech Industries)    என ஐக்கிய அமெரிக்காவின் தொழிலாளர் காரியாலயம் வரைவிலக்கணப்படுத்துகின்றது.
•             இவ்வரைவிலக்கணப்படி தெளிவாவது இலத்திரனியல் கைத்தொழில் சற்று அப்பால் சென்று மனிதனுடைய ஒவ்வொருநாளும் வேலைகளை இலகுவாக்குவதற்காகவும் தொடர்பாடல்களுக்காகவும் உபகரண உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடலாகும்.
•             ஆரம்ப காலங்களில் பயன்படுத்திய சிறிய அறைக்கும் இயந்திரம், தொலைக்காட்சி, வானொலிப்பெட்டி, மின் உபகரணங்கள், மின் விசிறி ஆகியவையும்  தொடர்பாடலுக்காகப் பயன்படும்  தொலைபேசி, செல்லிட தொலைபேசி, கணினி அது தொடர்பான உபகரணங்களும் இலத்திரனியல் பயன்படும் உபகரணங்களாகும்.
•             ஜப்பான், பெரிய பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகள் இலத்திரனியலில் ஈடுபடும் பிரதான நாடுகளாகும். இதில் தென்கிழக்கு ஆசியாவில் NIC நாடுகள் முன்னணி நாடுகளாகும்.
•             இக்கைத்தொழில் பரந்துள்ள விதத்திற்கேற்ப இரண்டாகப் பிரிக்ககப்படுகின்றது. உபகரணங்களை உற்பத்தி செய்யும் கைத்தொழில், உயர் தொழிநுட்பக் கைத்தொழில்.

1)            இலத்திரணியல் கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள்:-
•             இலத்திரணியல் உபகரணங்கள் - கணனியும் கனனிக்கான உபகரணங்களும்.
•             தொடர்பாடல் கருவிகள் - வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி,  GPS, Sattalite
•             யுத்த உபகரணங்கள் - ஏவுகணை, றாடர்
•             வைத்திய உபகரணங்கள் - சந்திர சிகிச்சை இயந்திரம், ஸ்கேன் இயந்திரம், எக்ஸ்ரே இயந்திரங்கள், Laser tools
•             நுகர்வுப் பொருட்கள் - மின்னழுத்தி, மின்அடுப்புகள்



2)            இலத்திரணியல் கைத்தொழிலில் ஈடுபடும் நாடுகள் :-
•             G 8 நாடுகள் - ஐ.அமெரிக்கா, ஐ. ராட்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, யப்பான், ரஸ்யா
•             NIC நாடுகள் - இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனசியாபிலிப்பைன்ஸ், கொங்கொங், தாய்வான், தென்கொரியா, பிறேசில், ஆஜென்தீனாகங்கேரி
•             வேறு நாடுகள் - சுவிற்சலாந்து, இஸ்ரேல்

3)            இலத்திரணியல் கைத்தொழிலுக்கு சாதகமான காரணிகள்:-
•             மூலதனம் - இக்கைத்தொழிலின் ஆரம்பகாலங்களில் மூலதனத்தை இடுகின்ற சக்தியுடைய நாடுகள் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய நாடுகள் உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கின்றது. விசேடமாக இங்கு மேற்கத்திய நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் முன்னணியில் நிற்கின்றன. அண்மைக்காலத்தில் தொழினுட்பம் மேற்கு நாடுகளில் இருந்து ஆசியா, லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்குச் சென்று விருத்தியடைந்த பின்னர் இலத்திரனியல் கைத்தொழில் அந்நாடுகளில் பல்வேறு அளவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதில் மலேசியாவில், தென்கொரியா, ஜப்பான், பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் நிற்கின்றன. பெரும்பாலும் இந்நாடுகளுக்கு இடையில் சில நாடுகள் இக்கைத்தொழிலை அமைப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் ஆரம்ப காலங்கள் விருத்தியடைந்த நாடுகளினால் முதலிட்ட மூலதனம் ஏதுவாக அமைந்தது.
•             ஆராய்ச்சி நடவடிக்கைகள் - இலத்திரணியல் கைத்தொழில் தொழிநுட்ப மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு வளருகின்ற தொழிலாகும். இதனால் புதிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற நாடுகளே உற்பத்தியில் முன்னணி வகிக்கமுடியும். இதனால் அதிகளவில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் இத் தொழிலின் விருத்திக்கு சாதகமாக அமைகின்றது. இத்துறை தொடர்பாக தொடர்ச்சியாக ஆய்வு செய்வதற்கு பாரியளவு மூலதனத்தைசெலவிடக்கூடிய தன்மை குறிப்பிட்ட கைத்தொழில் நாடுகளில் காணப்படுவதுடன் தொழிநுட்ப தேர்ச்சியும் வளர்ச்சியடைந்துள்ளது. அதிகமான தொழிற்சாலைகள் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அண்மையில் அமையப் பெற்றுள்ளமை.
•             மூலப்பொருள் வசதி - இலத்திரணியல் தொழிலில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களாக செப்பு, இரும்பு போன்றனவும் பிளாஸ்திக, கண்ணாடி  போன்றனவுமாகும். அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இவற்றை உள்நாட்டிலேயோ அல்லது வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த கொள்ளவொ முடிகின்றது.
•             தொழிநுட்பத் தேர்சசியுடைய தொழிலாளர்கள் - இலத்திரணியல் தொழிலைப் பொறுத்தவரையில் அது உயர்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதனால் தொழிலாளர்களும் தொழிநுட்ப அறிவுடையவாகளாக இருக்க Nஆவண்டும். இக்கைத்தொழிலிலல் ஈடுபடுகின்ற நாடுகளில் தொழிநுடப் அறிவுடைய தொழிலாளர்களை அதிகளவில் பெற்றுக்கொள்ள முடிகின்றரமையானது சாதகமாகவுள்ளது. இங்கு பாடசாலைகளில் மக்கியமான ஒரு கற்கையாக தொழிநுட்ப பாடங்கள் போதிக்கப்படுகின்றன. நிக் நாடுகளில் ஆரம்ப காலங்களில் கைத்தொழில்துறையில் முன்னேறிய நாடுகள் தமது கைத்தொழிற்சாலைகளை அமைத்திருந்தமையினால் இங்கள்ள தொழிலாளாகள் தொழிற்பயிற்சி பெற்றிருந்தனர்.
•             சந்தை வாய்ப்பு இலத்திரணியல் பொருட்களின் பாவனையானது இன்று அத்தியாவசியமான ஒரு தேiவாயாக உள்ளது. போக்குவரத்து துறை, வாத்தகத்துறை, தொடாபாடல் துறை முதலியவற்றில் இலத்திரணியல் பொருட்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. தொடர்பாடல் துறையின் விரத்திக்கு முக்கிய பங்காற்றுவது இலத்திரணியல் பொருட்களாகும். செய்மதிகள், தொலைபேசிகள், தொலைகாட்சிகள், கணனிகள், வானொலிகள், மொடம், பெக்ஸ்மெசின், ஜிபிஎஸ்  என பல்வேறு பொருட்கள் இங்கு பயன்படுகின்றன.  அத்தியாவசிய சாதனங்களில் ஒன்றாக இலத்திரணியல் பொருட்கள் இவ்வாறு விளங்குவதனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைவசதியினைக் கொண்ட ஒரு நாடாகக் காணப்படுகின்றது.
•             பாதுகாப்பான போக்குவரத்து வசதி - இலத்திரணியல் பொருட்களின் கொண்டு செல்லலில் பாதுகாப்பான போக்குவரத்து மக்கியமானது. பெருமளவிலான இலததிரணியல் பொருட்கள் உடையக்கூடிய தன்மையையும், அதிhவுகளினால் அல்லது கீழே விழுந்தால் செயற்பட முடியாதவாறும் பாதிக்கப்படுகின்றன. இதனால் பாதுகாப்பான முறையில் றெஜிபொம் போன்ற பொருட்களால் சுற்றப்பட்டு கப்பல்களில்  அல்லது உள்நாட்டில் வான்களில் எடுத்தச் செல்லப்படுகின்றன.


4)            இலத்திரனியல் தொழிலின் அண்மைக்காலப் போக்குகள்:-
•             ஒரே பொருளில் பல்பயன்பாடு கொண்ட பொருட்களின் உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகின்றமை. உதாரணமாக கைத்தொலைபேசியில் ஒலி, ஒளிப்பதிவு மற்றும் வானொலி, தொலைக்காட்சி போன்ற வசதிகள் காணப்படுகின்றமை.
•             சீனா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் வறிய நாடுகளை மையமாகக் கொண்டும், சந்தைவாய்ப்பை கைப்பற்றும் நோக்குடனும் மலிவான விலையில் விற்கப்படுகின்றமை.
•             புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றமை. உதாரணமாக சில தொலைபேசி, கணனி என்பவற்றிலிருந்து தகவல்களை இலகுவாக பரிமாற்றம் செய்வதற்கு ஐகெயசயசநனஇ டீடரநவழழவா  போன்ற வசதிகள் காணப்படுகின்றமை.
•             சில நுணுக்கமான வேலைகளுக்கு ரோபோக்களின் உதவி பெறப்படுகின்றமை.
•             கவர்ச்சிகரமானதும் அளவில் சிறியதுமான பொருட்கள் உற்பத்தி அதிகரித்து வருகின்றது. உதாரணமாக  Pocket PC,  Palmtop Computer, Plat Model Monitor & TV, Thouch Screen Equipment.

•             புதிய நாடுகள் போட்டி:- சந்தையில் ஆரம்ப காலங்களில் அமெரிக்கா முதலிய கைத்தொழில் நாடுகள் கொண்டிருந்த பங்கிற்கு போட்டியாக சீனா, இந்தியா, தென்கொரியா முதலிய நாடுகளின் பிரவேசம் அதிகரித்துள்ளது.