இரும்புருக்கு கைத்தொழில்

பிரதான கைத்தொழில்களான கப்பல், மோட்டார்வாகனம், விமானம் போன்றவற்றிற்குரிய முக்கிய மூலப்பொருளாககக் காணப்படுகின்றமை,  நிலைத்திருப்பதுடன் பலம் வாய்ந்ததாக இருப்பதும் வேறு உலோகங்களுடன் உயர்நத இடத்தில் நிலவுகின்றதமை,  அதிர்விற்கும், வெப்பத்திற்கும் ஈடுகொடுத்தல்,   வேறு உலோகங்களுடன் வளைந்து கொடுக்கக்கூடியதுஒப்பீட்டு ரீதியில் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளக்கூடியது முதலிய காரணங்களினால் இரும்புருக்குக் கைத்தொழிலாளனது முக்கியம் பெறுகின்றது.


1)            இரும்புருக்கு கைத்தொழிலுக்கு அவசியமான மூலப்பொருட்கள், வலுப்பொருட்கள்:-
•             இரும்புத்தாது
•             சுண்ணாம்புக்கல்
•             டொலமைட்
•             மகனீசியம்
•             நீர்
•             நிலக்கரி

2)            இரும்புருக்கின் வகைகள்:-
•             காபண் உருக்கு வீட்டு உபகரணங்கள், யந்திரசாதனங்கள், ஸ்பிறிங்.
•             கலப்புலோக உருக்கு வாகனச் சட்டங்கள், அச்சுக்கள், விசேட கத்திகள்.
•             உயர்வலிமையுடைய உருக்கு புகையிரதப் பெட்டிகள்
•             கருவிகளுக்கான உருக்கு -  துறப்பான்கள், தோல் தைக்கும் இயந்திரங்கள், உலோகம் வெட்டும் வாள்கள்.
•             கறைபிடிக்காத உருக்குகள் - பெற்றோலியத் தொட்டிகள், எண்ணெய் சுத்திகரிப்பு குழாய்கள், விண்வெளி உபகரணங்கள், இரசாயண ஆலைகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள், சமையல் உபகரணங்கள்.

3)            இரும்புருக்கு கைத்தொழிலில் ஈடுபடும் நாடுகள்:-
•             ஐக்கிய அமெரிக்கா   (பிற்ஸ்பேக், பேமிங்காம், மில்வாக்கி, சிக்காக்கோ, பியுப்லோ, மில்வாக்கி, டுலுத், வாஷிங்டன், டென்வர் )
•             யப்பான் (டோக்கியோ, யொக்ககாமா, கிரோசிமா, காவசாகி, சீபா, காமாய்சி, ஒசாகா, கோபே, கிமேசி, யாவற்றா-வடகியுசு)
•             இந்தியா (யாம்செட்பூர், குல்டி பேர்ன்பூர், பெக்காரோ, பத்திராவதி, ரூர்கேலா, பிலாய், விசாகப்பட்டினம், சேலம், மதுரை) 
•             பிரித்தானியா (லண்டன், பேமிங்காம், லிவர்பூல், கிளாஸ்கோ, லீட்ஸ், ரைன்சைட், நெற்றிங்காம், செபீல்ட், நியுகாசில், மிடிஸ்பேர்க், டேகாம்)
•             ரஸ்யா (உக்கிரேன், தென்யூரல், குஸ்பாஸ்)
•             சீனா (மஞ்சூரியா, அன்சன், சங்சுவான்)
•             மேற்கு ஐரோப்பா (ஜேர்மனி, பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம்)
•             N.I.C. நாடுகள் (பிறேசில், தென்கொரியா, மலேசியா, இந்தோனேசியா)

4)            அமெரிக்காவின் இரும்புருக்கு கைத்தொழிலுக்கு சாதகமான காரணிகள்:-
•             மூலப்பொருள் - இரும்புருக்கு உற்பத்திக் கைத்தொழிலின் பிரதான மூலப்பொருளான இரும்புத்தாது மற்றும் ஏணைய பொருட்களையும் இலகுவில்  பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கைத்தொழில் மையங்கள் அமைந்திருக்கின்றன. இதன் மூலம் உற்பத்திச் செலவினைக் குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். பேமிங்காம் இரும்புருக்கு மையம் அருகாமையிலே இரும்புருக்கை கொண்டுள்ளதுடன் பிற்ஸ்பேக் மையம் பேரேரிக் கரைகளிலிருந்து இரும்புருக்கை பெற்றுக்கொள்கின்றன.
•             வலுப்பொருள் - இரும்புத் தாதினை உலைக்களத்தில் அண்ணளவாக 1500 பா.செ. வெப்பநிலையில் உருக்குகின்றபோதே இரும்பு உருக்கினை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு உருக்கவதற்குரிய வலுப்பொருளாக பெருமளவில் நிலக்கரியும் சிறிதளவில் நீர்மின்சாரமும் பயன்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவில் காணப்படும் இரும்புருக்கு மையங்கள் இலகுவில் நிலக்கரியை பெறக்கூடிய பகுதிகளில் காணப்படுகின்றது. அப்பலாச்சியன் நிலக்கரி வயலிலிருந்து பிற்ஸ்பேக், பேமிங்காம் போன்ற இரும்புருக்கு மையங்கள் நிலக்கரியை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றன.
•             போக்குவரத்து வசதி - இரும்புருக்குத் தொழிலில் போக்குவரத்து வசதியானது மூலப்பொருட்களை, வலுப்பொருட்களை தொழிற்சாலைகளுக்கு ஏற்றிச் செல்வதற்கோ அல்லது உற்பத்p செய்யப்பட்ட இரும்பு உருக்கினை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கோ போக்குவரத்து அவசியமாகின்றது. பிற்ஸ்பேக் இரும்ருக்கு மையத்திற்குத் தேவையான இரும்புத் தாதினைப் பெற்றுக் கொள்வதற்காக கப்பல் போக்குவரத்து பயன்படு;த்தப்படுகின்றது. சிக்காக்கோ மையத்திற்கு தேவையான நிலக்கரியை ஏற்றிச் செல்வதற்கு புகையிரதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
•             சந்தை வசதி - இரும்புருக்கு தொழிலின் விருத்தியில் இரும்புத்தாது, வலுப்பொருள் என்பவற்றிற்கு அடுத்ததாக சந்தைவாய்ப்பு முக்கியம் பெறுகின்றது. பெரும்பாலும் இரும்புருக்கு மையங்களுக்கு அருகாமையில் சந்;தைகள் காணப்படுகின்றபோது போக்குவரத்து செலவீனத்தைக் குறைந்தக் கொள்ளமுடியும். அமெரிக்காவில் இரும்புருக்கினை பயன்படுத்தி கப்பல் கட்டும் தொழில், மோட்டார் வாகனக் கைத்தொழில் என்பன இடம்பெறுவதனால் உள்நாட்டிலேயே பெருமளவில் இரும்புருக்கு நுகரப்படுகின்றது.
•             துணைமூலப் பொருட்கள்- இரும்புத்தாதிலிருந்து உரக்கினை பிரித்தெடுப்பதற்கு சுண்ணக்கல், டொலமைட், மங்கனீஸ் போன்ற துணைமூலப்பொருட்களும் தேவைப்படுகின்றன. ஐ.அமெரிக்காவில் காணப்படுகின்ற பெரும்பாலான இரம்பரக்கு மையங்களுக்கு அருகாமையில் சுண்hம்புக்கல்லைப் பெறக்கூடிய வசதி காணப்படுகின்றது. பிற்ஸ்பேர்க் இரும்புருக்கு மையத்திற்கு கண்டிங்டன் என்ற இடத்திலிருந்து சுண்ணக்கல் கிடைக்கின்றது. அதே போன்று பேமிங்காம் என்ற மையத்திற்கு தேவையான சுண்ணாம்புக்கல் அதன் அருகிலேயே கிடைக்கின்றது.
•             தொழிலாளர் வசதி - இரும்புருக்கு தொழிற்சாலைகளில் தொழில்புhவதற்கரிய தொழிலாளாகள் தொழிநுட்ப அறிவுடையவர்களாக இருத்தல் வேண்டும்.இயந்திரங்கள் மற்றும் கருவிகள் என்பவற்றை பொறியில் துறை மற்றும் இலத்திரணியல் துறை சார்ந்த தொழிநுட்ப அறிவு அவசியமாகும். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாகவும், கல்வியறிவில் கூடிய நாடாகவும். கைத்தொழிலில் முன்னேறிய நாடுகளுள் ஒன்றாகவும் காணப்படுகின்றமையால் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழிலாளாகளை இலகுவாகப் பெறமுடிகின்றது.

5)            யப்பானின் இரும்புருக்குத் தொழிலுக்குச் சாதகமான காரணிகள்:-
•             ஜப்பானின் இரும்பு, உருக்கு கைத்தொழிலின் இட அமைவு, பாரம்பரிய காரணிகளில் இருந்து மாறுபடுகின்றது. ஜப்பானின் இக்கைத்தொழில் இடஅமைவிற்கு வெளிநாடுகளில் இருந்து இரும்புத்தாது, கழிவிரும்புகள் இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்த கைத்தொழில் அமைவிடத்தை பாரம்பரிய காரணிகள் தீர்மானிக்கவில்லை. இங்கு கைத்தொழிலை தீர்மானிப்பது சந்தை காரணியும், வளர்ச்சியடைந்த போக்குவரத்துமாகும்.
•             மூலப்பொருள்- யப்பானில் இரும்புத் தாதுப் படிமங்கள் பெருமளவில் காணப்படாவிட்டாலும் வேறுநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற இரும்புத் தாதையும், கழிவு இரும்பையும் பயன்படுத்தப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் மலேசியா போனற நாடுகளில் இரந்த இரும்புத் தாதை இறக்குமதி செய்வதுடன் கழிவு இரும்பு உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றது. இதற்கு வாய்பாக அந்நாட்டின் போக்குவரத்து வசதி காணப்படுகின்றது.
•             வலுப்பொருள்- யப்பானின் இரும்புருக்கு மையங்களுக்கு தேவையான வலுப்பொருளாக பெருமளவில் நிலக்கரி பயன்படுத்தப்படுகின்றது. யப்பானில் உள்ள யபாறி, சிக்காக்கோ போன்ற பகுதிகளில் ஓரளவு நிலக்கரி கிடைக்கின்றது. மேலதிகமாகத் தேவைப்படும் நிலக்கரியினை அவுஸ்ரேலியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றது.
•             போக்குவரத்து வசதி- யப்பானின் இரும்புருக்கு தொழிலில் முக்கியமான பங்கினை போக்குவரத்து வகிக்கின்றது. நிலக்கரி மற்றும் இரும்புத் தாதினை வேறுநாடகளில் இருந்து ஏற்றுமதி செய்து கொள்வதற்கு பெருமளவில் கப்பல் போக்குவரத்து உதவி புரிகின்றது. யப்பானின் இரம்புருக்குத் தொழிற்சாலைகள் கரையோரப் பகுதிகளில் அமைந்து காணப்படுகின்றமையும் பல்லுருவத்தன்மை கொண்டு காணப்படுகின்றமையும் துறைமகங்களுக்கு சாதகமான காரணிகளை வழங்கியுள்ளது. அத்துடன் யப்பான் கப்பல் கட்டும் தொழிலில் முதனிலை வகிக்கின்றமையும் இலகுவான கப்பல் போக்குவரத்திற்கு வித்திட்டுள்ளது.
•             தொழிநுடப் அறிவுடைய தொழிலாளர்கள்- யப்பானின் இரும்புருக்குத் தொழில் விருத்தியில் சிறிந்த தொழிநுடப் அறிவுடையதொழிலாளர்களையும் பொறியியலாளர்களையும் பெறக்கூடிய நிலைமை சாதகமானதாகக் காணப்படுகின்றது. உலகின் சனத்தொகை கூடிய , கல்வி வளர்ச்சியடைந்த டோக்கியொ முதலிய நகரங்களைக் கொண்டு காணப்படுகின்றமையும் தொழிநுட்ப அறிவுடனான தொழிலாளர்களை அதிகளவில் பெறமுடிகின்றது.
•             சந்தை வாய்ப்பு யப்பானில் உற்பத்தி செயயப்படுகின்ற இரும்புருக்கு வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. அது உள்நாட்டில் காணப்படுகின்ற ஏணைய கைத்தொழில்களிலேயே பயன்படுத்தப்படுகின்றது. யப்பானின் இரும்புருக்கானது தரமானதாகவும் விலைகூடியதாகவும் காணப்படுகின்றது. இதனால் இத்தரமான இரும்புருக்கினைக் கொண்டு கப்பல் கட்டும் தொழில், மோட்டார் வாகனக் கைத்தொழில் போன்ற வற்றில் பயன்படுத்தி உச்சப் பயனைப் பெறுகின்றது. இதனால் உள்நாட்டிNயே பெருமளவில் யப்பானின் இரும்புருக்கிற்கு கேள்வி காணப்படுகின்றது.


6)            ஐக்கிய இராட்சியத்தின் இரும்புருக்கு கைத்தொழிலுக்கு சாதகமான காரணிகள்;;:-
•             வரலாற்றில் உலகின் இரும்புருக்கு உற்பத்தி கைத்தொழிலில் முதலிடத்தைப் பெற்றிருந்தது பிரித்தானியாவாகும். மூலப்பொருள் கிடைக்கும் இடங்களாகையால் அது நன்மையாகியது. இருப்பினும் அந்நாடு  பெற்றுக்கொண்ட இடம் இன்று கிழக்காசியாவில் முக்கிய நாடுகளான ஜப்பான், சீனா,இந்தியா, மலேசியா ஆகிய நாடுகள் பெற்றுக்கொண்டுள்ளன.
•             ஐக்கிய அமெரிக்காவில் இரும்புரக்கத் தொழிலானது ஸ்கொடலாந்து, வடகீழ் இங்கிலாந்து, மிட்லாந்து, தென்வேல்ஸ், லங்காசயர், யோக்சயர், நெற்றிங்காம், டேபிக் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.
•             மூலப்பொருள் - தேவையான இரும்புத் தாதில் 10 சதவீதத்தை தனது நாடடிலிரு;தும் மீதியை சுவீடன், கனடா, வடஆபிரிக்க நாடுகளில் இருந்தும் பெற்றுக் கொள்கின்றது.
•             வலுப்பொருள் - இரும்புருக்கு மையங்கள் யாவும் நிலக்கரி வயல்களை அண்டிய பகுதிகளிலேயே அமைந்து காணப்படுகின்றது.
•             போக்குவரத்து வசதி துறைமுகங்களுக்கருகாமையில் மையங்கள் காணப்படுகின்றமையால் மூலப்பொருட்களை கப்பல்கள் மூலம்  இறக்குமதி செய்வதற்கு வசதியாகவுள்ளது.
•             மூலதன வசதி அபிவிருத்தியடைந்த நாடு, ஆரம்ப காலங்களில் பலவேறு நாடுகளை ஆக்கிரமித்துப் பெறப்பட்ட வருமானமும் போதிய மூலதனத்தை வழங்கியுள்ளது.

7)            இரும்புருக்குத் தொழிலின் அண்மைக்காலப் போக்குகள்:-
•             புதிய திட்டமிடல், மற்றும் தொழில்நுட்பமுறைகளைக் கையாள்வதன் மூலம் உற்பத்தியின் அளவையும் வேகத்தையும் அதிகரித்தல். இரும்புத்தாதை சூடாக்க ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட திறந்த அடுப்பு, சூளை அடுப்பு என்பவற்றிற்குப் பதிலாக மின்சக்தி பயன்படுத்தப்படுகன்றமை. திற்நத அடுப்பினால் 350 தொன் இரும்பை உருக்காக மாற்ற 10 மணித்தியாலங்கள் எடுக்க மின்சக்தி அடுப்பிற்கு 10 நிமிடங்கள் மாத்திரமே எடுக்கின்றன.
•             புதிதாக கைத்தொழில் மயமாகிய நாடுகளும் இரும்புருக்குத் தொழில் அண்மைக்காலமாக ஈடுபடுகின்றமை. (தென்கொரியா, மலேசியா, இந்தோனேசியா)
•             ஆரம்ப காலத்தில் இரும்புத்தாதும் நிலக்கரி வயல்களும் காணப்பட்ட இடங்களில் கைத்தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்ட கரையோரப் பிரதேசங்களில் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்ட கரையோரப் பிரதேசங்களில் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றமை. ஐக்கிய அமெரிக்காவில் பெரோஸ்பொயிண்ட், பால்ரிமோர், பிரித்தானியா நியுகாசில், மிடில்ஸ்பேர்க், யப்பான் - கோபே , காலிஸ் போன்ற இடங்களை குறிப்பிடலாம்.
•             இரும்புருக்குத் தொழிலில் ஆசிய நாடுகளின் போட்;டி அதிகரித்துள்ளமை. (இந்தியா, யப்பான்)
•             புதிய தொழில்நுட்ப முறைகளுக்கமைய இயந்திரங்களின் பாவனை அதிகரிப்பினால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றமை.
•             கழிவிரும்பிலிருந்து உருக்கு தயாரித்தல். ( யப்பான்)
•             இரும்புருக்குடன் புதிய மூலப்பொருட்கள் கலந்து தரமான உலோகத்தை பெறுதல்.

•             புதிய வளங்களை கண்டறிய ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.