RS இன் விரிவாக்கம் Remote Sensing
என்பதாகும். அதாவது Remote – தொலைவு, Sensing – உணர்வு என்றவாறு அதனுடைய மொழிபெயர்ப்பு
அமைகின்றது. இதற்கமைய இத்தொழிநுட்பமானது தொலையுணர்வு தொழினுட்பம் என தமிழில் அழைக்கப்படுகின்றது.
புவியின் பொருட்களை நேரடியாக
தொடர்புகொள்ளாமல் தொலைவில் இருந்து உணரிகளையும் (Sensor),
நிழற்படக்
கருவி (Camera) போன்ற கருவிகளையும் பயன்படுத்தி புவியின்
விவரங்களை சேகரித்து, அதனை
விவரணம் செய்வது தொலையுணர்வு தொழினுட்பம் எனப்படுகின்றது.
1) தொலையுணர்வில்
உணரிகளும் தளமேடைகளும்:-
·
உணரிகள் (Sensor) - multispectral
electro-optical, radar, laser, camera, etc.
·
உயரத்திலுள்ள
மேடை (Platform) - satellite,
aircraft, balloon, etc.
.
2 Remote Sensing இனுடைய கூறுகள் (Components of GPS):
v
சூரியன் - Energy Source (sun - active, microwave - passive)
v
இலக்கு - Target (vegetation , soil , water)
செய்மதி
- Satellite (receive
electromagnetic wave from target)
v
புவிமேற்பரப்பு
நிலையம் - Ground
Station (receive and process electromagnetic wave data from satellite)
v
செய்மதி தரவு -
Satellite Data
(digital or hard copy)
பகுப்பாய்வும்
விளக்கமளித்தலும் - Analysis and
Interpretation (image processing)
தரவுப்
பகுப்பாய்வும் வடிவமைப்பும் - Spatial Data
Analysis and Modeling (GIS, decision
supports)
v
பயனாளர்கள் - Users (policy
makers, planners, implementers)
3) மின்காந்த
அலை நீளங்களின் அடிப்படையில் தொலையுணர்வின் வகைகள் (Types of Remote Sensing – Based on Range of
Electromagnetic Spectrum):-
ஒளியியல் தொலையுணர்வு (Optical Remote Sensing)
வெப்ப தொலையுணர்வு (Thermal Remote Sensing)
நுண்ணலை தொலையுணர்வு (Microwave Remote Sensing)
4) தளமேடையின்
அடிப்படையில் தொலையுணர்வின் வகைகள் (Types of Remote Sensing – based on platform):-
வான் தொலையுணர்வு (Aerial RS)
செய்மதி தொலையுணர்வு (Satellite RS)
5) வான்
தொலையுணர்வு (Aerial RS):-
தொலையுணர்வுத் தகவல்கள் பல்வேறு
உயரத்திலுள்ள மேடைகளைப் பயன்படுத்தி சேகரிக்கப்படுகின்றன. உணரிகள் பொருத்தப்பட்ட
செயற்கைக் கோள்களும், கேமரா
பொருத்தப்பட்ட விமானங்களும், பலூன்
மற்றும் உயரமான கட்டங்களும் இத்தகவல்களைச் சேகிரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
செய்மதியைப் பயன்படுத்தவது
செயற்கைக்கோள் தொலைநுன்னுணர்வ எனவும், ஏணைய முறைகள் யாவும் வான் தொலையுணர்வு எனவும் அழைக்கப்படுகின்றன.
வான்வழிப் புகைப்படம் எடுக்கும் முறை
முதன் முதலில் 1858 ஆம்
ஆண்டு பலூன் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.
1902 இல் விமானம் கண்டுபிடித்ததன்
பின்னர், 1909 இல்
இருந்து வான்வழி புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில்
இப்புகைப்படங்கள் பெரிதும் உதவியாக இருந்தன. மேலும் காடுகளை ஆய்வு செய்யவும்
சூழல்முகாமைத்துவம் போன்ற ஆக்கபூர்வமான பணிகளுக்கும் அவை பயன்பட்டன.
வான்வழிப் புகைப்படங்கள் பொதவாக ஒரு
மாவட்டம், ஆற்றுப்படுக்கை,
பெருநகரம் போன்ற பகுதிகளில்
காணப்படும்வளங்களையும் பிரச்சினைகளையம் அறிவதற்கு எடுக்கப்படுகின்றன.
விரிவான விபரங்கள் தேவைப்படும்போது,
விமானங்கள் மிகத் தாழ்வாக
பறந்து பெரிய அளவில் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
6) செய்மதி
தொலையுணர்வின் வகைகள் (Types of
Satellite Remote Sensing):-
புவிநிலைச் செய்மதி தொலையுணர்வு (Geo – Stationary Satellite Remote Sensing)
சூரியனோடு சார்ந்திருக்கும் செய்மதி
தொலையுணர்வு (Sun
Synchronous Satellite Remote Sensing)
உளவு செயற்கைக் கோள் தொலையுணர்வு (SPY Satellite Remote Sensing)
7) புவிநிலைச்
செய்மதி தொலையுணர்வு:-
புவிதன்னைத் தானே சுற்றும்
வேகத்திலும் திசையிலும் சுற்றிவரும் செய்மதிகள்; புவிநிலைச்
செய்மதி தொலையுணர்வு எனப்படுகின்றன. இவை புவியின் குறிப்பிட்ட ஒரு
பிரதேசத்தை மாத்திரம் அவதானிப்பதற்கு பயன்படுத்ப்படுகின்றன. குறிப்பாக ஒரு
நாட்டின் வானிலை அவதானிப்பு செய்மதிகள் இதனுள் அடங்கும்.
புவிநிலைச் செய்மதிகள் புவியினுடைய
சுற்றுகையினைப்போல் மேற்கு – கிழக்காக
தமது சுற்றுகையை தம்முடைய சுற்றுவட்டப்பாதையில் சுற்றுகின்றன. இவை பெரும்பாலும்
புவியின் ஒரு பகுதியினை நோக்கியவாறு 36000 கி.மீ. உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும்.
8) சூரியனோடு
சார்ந்திருக்கும் தொலையுணர்வு:-
சூரியனின் ஒளியைக் கொண்டு தகவல்களைத்
திரட்டித் தருவதனால் இவை சூரியனோடு சார்ந்திருக்கும் தொலை செய்மதி தொலையுணர்வு என
அழைக்கப்படுகின்றது.
இவ்வகைச் செய்மதிகள்
புவிப்பரப்பிலிருந்து 600
முதல் 900 கி.மீ.
உயரத்தில் இருந்து வடக்கு தெற்காக நகர்ந்து புவியின் செய்திகளைச் சேகரிக்கின்றன.
வடதுருவத்திற்கும் தென்துருவத்திற்கும்
இடைப்பட்ட தூரத்தை இத்தகைய செய்மதிகள் சுமார் 50 நிமிடத்தில் கடக்கின்றன.
முதன்முதலில் 1972 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா Landsat I (லாண்டசாட் 1) எனும்
செய்மதியை விண்ணில் செலுத்தியது. இன்று பல
செய்மதிகள் குறிப்பிட்ட சில நாடுகளினால் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
9) உளவு
செய்மதி தொலையுணர்வு:-
எதிரி நாட்டின் படைகளின் நடமாட்டம்,
அணு நிலையங்கள் மற்றும்
படைநடவடிக்கைகளுக்கு திட்டமிடல் போன்ற நோக்கம் கருதி தகவல்களைத் திரட்டுவதற்கு
உருவாக்கப்பட்டவை உளவு செய்மதி தொலையணர்வு எனப்படும்.
உளவுச் செய்மதிகளை தயாரிப்து மிகச்
செலவு கூடியதும், சிக்கலானதும்
மற்றும் அவற்றினுடைய வாழும் காலம் குறைவும் ஆகும்.
அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா முதலிய நாடுகள் இத்தகைய உளவு
செய்மதிகளைக் கொண்டுள்ன. அமெரிக்கா பல்வேறு நாடுகளையும் கவனிப்பதற்கு உளவு
செய்மதிகளை பயன்படுத்துகின்றது.
10) தொலையுணர்வின்
பிரயோகங்கள் (Remote Sensing Applications):-
நிலஅளவை மற்றும் தேசப்படம் ( Surveying & Mapping)
விவசாயம் மற்றும் மண் (Agriculture and Soil)
பொறியியலும் புவிச்சரிதவியலும் (Engineering and Geology)
கடல் மற்றும் சமுத்திரவியல் (Marine and Oceanography)
வளிமண்டலவியல் (Meteorology)
சூழல் சுகாதாரம் (Environmental Health)
உயிர்பல்வகைமை (டீழைனiஎநசளவைல)
பிரதேச அபிவிருத்தி (Biodiversity)
அனர்த்த முகாமைத்துவம் (Disaster management)
நிலப்பயன்பாடு முகாமைத்துவம் (Land use Monitoring)
நீர் முகாமைத்துவம் (Water management)
தேசிய பாதுகாப்பு (National Security)
11) தொலையுணர்வு
தொழிநுட்பத்திற்கான செய்மதிகள் ((Remote
Sensing Satellites):-
v
TRIOS Series
(1960-1965) , NOAA, GMS, Landsat,
SPOT, RADARSAT, IKONOS, Geo-Eye 1,
IRS, MOS, JERS, ERS,
Orbview -2, EnviSat, Cryosat

