புள்ளியியலில் வரைபடங்கள் அறிமுகம்

புள்ளியியல் எனும்போது ஆய்வின்நிமித்தம்  தரவுகளைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து அவற்றைக் காட்சிப்படுத்தல் என சுருக்கமாகக் குறிப்பிடப்படுகின்றது.புவியியலில் பல்வேறு வகையான படவரைகலை நுட்பங்கள் மூலம் தரவுகள் காட்டப்படுகின்றன. அந்தவகையில் படவரைகலை நுட்பங்களில் அடங்குகின்ற குறிப்பாக உயர்தரத்தில் பாடத்தில் உள்ளடங்குகின்ற படங்களை நாம் இங்கு வகைப்படுத்துவோம்.


1)    மீடிறன் தரவு படங்கள்
•    இழைவரைபடம்
•    மீடிறன் பல்கோணி
•    மீடிறன் வளையி
•    திரள் மீடிறன் வளையி

2)    மையப்போக்கு, விலகல் அளவைப் படங்கள்
•    நகரும் சராசரி வளையி
•    விலகல் அல்லது கோட்டு வரைபடம்
•    பிரிக்கை வரைபடம்

3)    நிரல் அல்லது பார் வரைபடங்கள்
•    தனிபார் வரைபடம்
(குத்தான பார், கிடையான பார்)
•    இணைந்த அல்லது ஒப்பீட்டு பார் வரைபடம்
(இரட்டை பார், பல்பார்)
•    கூட்டு அல்லது திரண்ட பார் வரைபடம்
•    சதவீதபார் வரைபடம்
•    கூம்பக பார் வரைபடம்

4)    கோட்டு வரைபடங்கள்
•    தனிக்கோட்டு வரைபடம்
•    பல்கோட்டு வரைபடம்
•    திரண்ட கோட்டு வரைபடம்

5)    கோட்டு நிரல் அல்லது கோட்டு பார் வரைபடங்கள்
•    தனிக்கோட்டு தனிபார் வரைபடம்
•    தனிக்கோட்டு இணைந்த பல்) பார் வரைபடம்
•    தனிக்கோட்டு திரண்ட பார் வரைபடம்
•    பல்கோட்டு தனிபார் வரைபடம்
•    பல்கோட்டு இணைந்த (பல்) பார் வரைபடம்
•    பல்கோட்டு திரண்ட பார் வரைபடம்

6)    வட்ட வரைபடங்கள்
•    பிரிக்கப்பட்ட வட்ட வரைபடங்கள்
•    உள்ளமைந்த வட்ட வரைபடங்கள்
•    விகிதாசார வட்ட வரைபடங்கள்
•    விகிதாசார பிரிக்கப்பட்ட வட்ட வரைபடங்கள்
•    விகிதாசார உள்ளமைந்த வட்ட வரைபடங்கள்

7)    சதுர வரைபடங்கள்
•    உள்ளமைந்த சதுர வரைபடங்கள்
•    விகிதாசார சதுர வரைபடங்கள்
•    விகிதாசார உள்ளமைந்த சதுர வரைபடங்கள்

8)    கருப்பொருட் படங்கள்
•    நிழற்றுமுறை படம் அல்லது இடக்கணியப்படம்
•    புள்ளிப்படம்
•    பாய்ச்சல் கோட்டுப்படம்
•    குறியீட்டுப் படம்
•    இலக்கப் படங்கள்
•    சமகணியக் கோட்டுப் படங்கள்
•    தேசப்படத்தில் அமைந்த வட்டங்கள்
•    தேசப்படத்தில் அமைந்த நிரல்கள்
•    தேசப்படத்தில் அமைந்த சதுரங்கள்


9)    ஏனைய  வரைபடங்கள்
•    சிதறல் வரைபடங்கள்
•    லோறன்ஸ் வளையி
•    கிளைமோ வளையி
•    மணிக்கூட்டு வரையம்
•    சித்திர வரைபடம்


Article By :- AKSHAYAN