தரைமேற்பரப்பு அம்சங்களை ஒரு தட்டையான மேற்பரப்பில் நிறங்கள், குறியீடுகள் மற்றும் அளவுத்திட்டம் ஆகியவற்றுடன் இருபரிமான அடிப்படையில் வரைவது தேசப்படங்கள் எனப்படுகின்றன. தேசப்படங்களில் புலப்படும் அம்சங்களை பௌதிக அம்சங்கள் பண்பாட்டு அம்சங்கள் என இரண்டு பிரதான பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
புவிமேற்பரப்பில் இயற்றையாகவே தோற்றம் பெற்ற அம்சங்கள் யாவும் பௌதிக அம்சங்கள் எனப்படுகின்றன. உதாணரமாக காடுகள், மலைகள், நதிகள் முதலியன இதனுள் அடங்குகின்றது.
மனித முயற்சியினால் தோற்றம் பெற்ற அம்சங்கள் யாவும் பண்பாட்டு அம்சங்கள் எனப்படுகின்றன. பணப்பாட்டு அம்சங்களுக்கு உதாரணங்களாக கட்டடங்கள், வீதிகள், குளங்கள் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கை முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
பௌதிக அம்சங்களை மேலும் தரைத்தோற்ற அம்சங்கள், வடிகால் அம்சங்கள், கரையோர அம்சங்கள், இயற்கைத் தாவரங்கள் என உபபிரிவாக வகைப்படுத்த முடியும். அத்துடன் ஒவ்வொரு உபபிரிவுகளும் பல்வேறு பௌதிக அம்சங்களைக் கொண்டுள்ளன.
பண்பாட்டு அம்சங்களை கட்டங்கள், வீதிகள், நீர்ப்பாசன அம்சங்கள் என்ற அடிப்படையில் பாகுபடுத்தியும் நோக்கலாம்.
(ஆக்கம் தொடரும்.........)

