இலங்கையின் புல் நிலங்கள்

தாவரங்கள் மற்றும் விலங்குகளால் ஒரு குறிப்பிட்ட காலநிலையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பெரியதொரு குழுமம் உயிர்ப்பெருந்திணிவு எனப்படும். பொதுவாக புவிக்குரிய உயிர்ப்பெருந்திணிவுகள் பொதுவாக அங்குள்ள காலநிலை மற்றும் ஆதிக்கம் செலுத்தும் காடு, புல்வெளி, புதர் முதலிய தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுகின்றன.


இலங்கையின் காலநிலை தரைத்தோற்றம் என்பவற்றுக்கமைய தாவரங்களின் பரம்பல் அமைந்து காணப்டுகின்றது. அந்தவகையில் காடுகள், புதர்கள், புல் நிலங்கள், கண்டல்கள் எனப் பல்வகையான தாவரங்களை கொண்டு இலங்கை காணப்படுகின்றது. அந்தவகையில் ஒவ்வொரு காலநிலையிலும் காணப்படும் ஒரு தாவரவகையான புற்கள் காணப்படுகின்றன. இவை இயல்பில் வேறுபட்டுள்ள போதிலும், ஒவ்வொரு காலநிலைப் பிரதேசத்திலும் புல்நிலங்கள் பரம்பியுள்ளரதைக் காணலாம். சூழல் தொகுதியின் முக்கிய அம்சமாக புல்நிலங்கள் காணப்படுவதுடன், விலங்குகளின் வாழ்விடமாகவும் காணப்படுகின்றன.

இலங்கையின் புல்நிலங்களை ஈரப்பத்தனா, வரண்ட பத்தனா, தமன்னா மற்றும் தலாவா, விள்ளுக்கள் என நான்கு பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம்.

ஈரப்பத்தனா(Wet Patanas):
இலங்கையின் 2000 மீற்றர் உயரத்திற்கு மேற்பட்ட பிரதேசங்களிலும், அதிக மற்றும் பரவலான மழைவீழ்ச்சி கிடைக்கும் ஈரவலயப் பிரதேசங்களில் காணப்படும் புல்நிலங்கள் ஈரப்ப்தனா எனப்படுகின்றன. ஈரப்பதத்னா புல்நிலங்களுக்கு உதாரணங்களாக கோட்டன் சமவெளி, எல்க் சமவெளி, மூண் சமவெளி, சீதாஎலிய, பொகவந்தலாவ, போபாத்தலாவ, அம்பேவல போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஈரப்பத்தனா புல்நிலமானது மலைநாட்டு காடுகளுக்கு அருகாமையிலுள்ள பிரதேசங்களில் காணப்படுவதுடன், சுமார் 5 அடிவரையில் உயரமுடையதாகவும் காணப்படுகின்றது. ஈரப்பத்தனாவில் காணப்படும் புற்கள் சிபரஸ் இனம் மற்றும் பேன்பெரிடியம் (Cyperus species and the fern Pteridum) எனும் வகையைச் சேர்ந்தனவாகக் காணப்படுகின்றன.

வரண்டபத்தனா(Dry Patanas):
இலங்கையின் உயர்நிலப்பகுதிகளின் வரண்ட பகுதிகளில் காணப்படும் புhல்நிலங்கள் வரண்ட பத்தனா எனப்படுகின்றது. இலங்கையின் வெலிமடை மேட்டுநிலம், நக்கிள்ஸ், தெனியாய, றக்குவாணை போன்ற பகுதிகளில் இத்தகைய வரண்ட பத்தனா காணப்படுகின்றது. வரண்ட பத்தனாவானது ஈரப்பத்தனாவின் பரப்பிலும் அதிகமாகக் காணப்படுவதுடன், இங்குள்ள புல்லினங்கள் மானா (Mana - Cymbopogan nardus )  எனும் புல்வகையைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன.

தமனா மற்றும் தலாவா(Damana and Talawa):
இலங்கையின் தாழ்நிலங்களில் பரவலாக இத்தகைய தமனா மற்றும் தலாவா எனும் பல்வகைககளைக் காணலாம். குறிப்பாக பொலநறுறுவை, வெலிகந்தை, மட்டக்களப்பு, திருகோணமலை, கழுத்துறை(தலாவா புல்நிலம்) ஆகிய பிரசேங்களில் இவை பரந்துள்ளன. தாழ்நில உலர் வலயத்தில் காணப்படம் புற்கள் தமனா எனவும், தாழ்நில ஈரவலயத்தில் காணப்படும் புல்நிலங்கள் தலாவா எனவும் அழைக்கப்படுகின்றன. இத்தகைய புல்நிலப்பகுதிகளில் மானா, இலுக், படா(பிரம்பு), பலு, மைலா மற்றும் மடம் முதலிய புல்லினங்கள் காணப்படுகின்றன. கரடி, காட்டெருமை, யானை போன்றவற்றின் முக்கிய வசிப்பிடங்களாக இத்தகைய தமன்னா புல்லினங்கள் விளங்குகின்றன.

விள்ளுக்கள்(Villus):
வரண்ட வலயங்களில் உள்ள வெள்ளச்சமவெளிகளில் காணப்படும் ஈரமான புல்நிலங்களாக விள்ளுக்கள் காணப்படுகின்றன. விள்ளுக்கள் உயர்போசனை மிக்க சூழல்தொகுதியாகும். இலங்கையின் ஆற்றுச் சமவெளிகள் எங்கெல்லாம் பரந்துள்ளனவோ அங்கெல்லாம் விளு;ளு வகை புல்நிலங்களைக் காணலாம். விளு;ளு வகை புல்லினங்கள் வென்னப்பெருக்கு நிகழ்கின்ற பிரதேசங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள், பெரும்நீர்ப்பிரதேசங்களில் தோற்றம் பெறுகின்றன.

விள்ளுக்கள் யானை, கரடி, மான், காட்டெருமை, சிறுத்தைப்புலி, நரி முதலிய மிருகங்களையும், நாரை, காட்டுக்கோழி, மீன்கொத்தி முதலிய பறவையினங்களையும் மற்றும் மீன் இனங்களையும் கொண்ட மிகவும் பெரிய உயிர்பல்வகைமை அடர்;த்திகொண்ட பிரதேசங்களாக விளங்குகின்றன.

மழை காலங்களின் பின்னர் நீர்த்தாவரங்களால் விள்ளு பகுதிகள் நிரப்பப்பட்டிரப்பதனால் இயற்கை அழகைக் கொடுப்பதுடன், சுற்றுலாப் பயணிகளைக் கவர்னவாகவும் உள்ளன. விள்ளு பிரதேசங்கள் கிராமத்தவர்களின் மீன்பிடி பிரதேசமாக விளங்குவதுடன், கால்நடை மேயத்தலுக்கு சிறந்த புல்வகைகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. குறிப்பாக தமன்கடுவவில் அமைக்கப்பட்டுள்ள மாட்டுப் பண்ணையானது விள்ளுவகை புல்லினகத்தைக் கொண்டதாகும். 

 AKSHAYAN