புவியில் உயிரிணங்கள் தோன்றிய நாள் முதல் அணர்த்தங்கள் நிகழ்ந்துள்ளன. புவியில் இடம்பெறும் துரித மாற்றங்களினாலும் வளிக்கோளங்களிலும், நீர்கோளங்களிலும் நிகழும் அசாதாரண நடத்தைக்கோலங்களினாலும் பல அணர்த்தங்கள் நிகழ்வதாகத் தெரிகின்றது. இன்று உலக ரீதியாக புவிநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுணாமி, சூறாவளி, வரட்சி, மண்சரிவு, வெள்ளம், மின்னல்தாக்கம், காட்டுத்தீ, பனிமலைச்சரிதல் போன்றவை நிகழ்கின்றன.
சனத்தொகை அதிகரிப்பின் விளைவாக அதிகரிக்கும் மனித தேவைகளின் காரணமாக நிகழும் மனித செயற்பாடுகள் இயற்கை அணர்த்தங்களை தீவிரப்படுத்த காரணமாக அமைகின்றது. இயற்கையாக நிகழும் இச்செயற்பாடுகளை தவிர்ப்பது சிரமமானதாகும். எனினும் இயற்கை அணர்த்தங்களால் நிகழும் அழிவுகளை அல்லது பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளமுடியும்.
இதன் காரணமாக உலகின் பல நாடுகளும் பல்வேறு வகையிலான சமூக, பொருளாதார மற்றும் கட்டுமான ரீதியிலான பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் எமது நாடான இலங்கையும் அதற்கு விதி விலக்கல்ல. இலங்கையிலும் பல அணர்த்தங்கள் இயற்கையாகவும், மானிட நடவடிக்கைகளாலும் ஏற்ப்படுத்தப்படுகின்றன. இலங்கையில் வெள்ளப்பெருக்கு, வரட்சி, சூறாவளி, இடி மின்னல் தாக்கம், நிலச்சரிவு, சுணாமி, ஆற்றுப்பெருக்கு முதலான அணர்த்தங்கள் இதுவரை காலமும் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் இயற்கை அணர்த்தங்கள் பாதிக்கும் முறையானது பிரதேச ரீதியாகவும், காலத்திற்கேற்பவும் வேறுபடும். உதாரணமாக வரட்சி நிலை அதிகமாக உலர்வலயத்தில் நிலவுவதோடு மத்திய மலை நாட்டில் மண்சரிவு அணர்த்தமும் நிகழ்வதுண்டு. அதேபோன்று பருவ காலங்களில் வெள்ளப்பெருக்கு, இடிமின்னல் தாக்கம் என்பனவும் ஏற்படுவதனை காணலாம்.
அதனடிப்படையில் நாம் இலங்கையில் இடம்பெறும் நிலச்சரிவு அணர்த்தம் பற்றி விரிவாக ஆராயவுள்ளோம். நிலச்சரிவு என்பதனை பொதுவாக பின்வருமாறு வரையறை செய்யலாம்.
'புவி மேற்பரப்பில் மண்படையானது தான் கொண்டுள்ள பாறைப்பொருட்களினதும் தாவரங்களினதும் தொகுதியினை ஈர்ப்பு விசை காரணமாக உயர்பிரதேசத்திலிருந்து தாழ்பிரதேசத்தை நோக்கி சரிதல் அல்லது அசைவுக்குட்படுதலே நிலச்சரிவு' என பொதுவாக அழைக்கப்படுகின்றது.
நிலச்சரிவு அணர்த்தமானது புவிச்சரிதவியல் அணர்த்தமாக காணப்படுகின்ற அதே வேளை காலநிலை அணர்த்தமாகவும் இது காணப்படுகின்றது. இது இயற்கையாக தோன்றுகின்ற அணர்த்தமாகவும் மானிட நடவடிக்கைகளாலும் தோன்றுகின்ற அணர்த்தமாகவும் கானப்படுகின்றது.
(நிலச்சரிவு அணர்த்தம்)
கடந்த காலங்களில் இலங்கையில் நிலச்சரிவு தொடர்பான பல செய்திகள் வெளியாகியுள்ளன. புவியியற் அகழ்வாராய்ச்சி துறையினரின் ஆராய்ச்சிகளின் படி இலங்கையில் பல நகரங்கள் நிலச்சரிவு அணர்த்தத்தினை எதிர்நோக்குகின்றன. இந்நகரங்கள் பாரிய மழையுடன் நிலச்சரிவினையும் சந்திக்கலாம். அவ்வாறெனின் சுணாமிக்கு பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் பெரிய இயற்கை அழிவு நிலச்சரிவு அணர்த்தமாகத்தான் இருக்கலாம்.
நிலச்சரிவு அணர்த்தத்தினை தீர்மானிக்கின்ற பிரதானமான இரண்டு காரணிகளாக பின்வருவன காணப்படுகின்றன.
1. இயற்கை காரணிகள்
2. மானிட நடவடிக்கைகள்
நிலச்சரிவினை இனங்காணுதல்
நிலச்சரிவு இடம்பெறும் முன்னர் அல்லது இடம்பெறும் பொழுது சில வகையான மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு நிலச்சரிவு அணர்த்தத்தினை இனம் காணலாம். அதனடிப்படையில் பின்வருமாறு அதனை பார்ப்போம்.
1. திடீரென வீடுகள், கட்டடிடங்கள் போன்றவற்றில் வெடிப்புக்களை அவதானித்தல்.
2. ஏற்கனவே காணப்படும் பிளவுகள், வெடிப்புக்கள் என்பன மேலும் விரிவடைதல்.
3. வீடுகள், கட்டிடங்கள் என்பனவற்றிலிருந்து நிலத்திணிவுகள் விலகுதல் அல்லது அசைதல்.
4. மலைப்பாங்கான பகுதிகள், மலையடிவாரங்கள், கட்டிட உட்பகுதிகள் மற்றும் பாதையோரங்களில் நீரூற்றுக்கள் தோன்றுதல்.
5. மரங்கள், மின்கம்பங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், வேலிகள், தடுப்புச்சுவர்கள் என்பன அசைவுக்குட்படல்.
6. நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்தல்.
7. நீரோடைகளில் காணப்படும் நீரானது கலங்கல் தன்மை அடைதல்.
8. நீர்க்குழாய்கள் திடீரென வெடித்தல்.
9. தரைமேற்பரப்பு எப்போதுமில்லாதவாறு ஈரத்தன்மை அடைதல்.
10. வீதிகள், கட்டிடங்கள், மரங்கள் போன்ற அம்சங்கள் கீழிறங்குதல்.
11. காலத்துக்கு காலம் படிப்படியாக வளைந்து செல்லும் மரங்கள் தென்படல்
மேற்கூறப்பட்ட விளைவுகளை நிலச்சரிவு ஏற்படும் போது அவதானிக்க கூடியதாக இருக்கும்.
1.1 இலங்கையில் நிலச்சரிவு அணர்த்தங்கள் ஏற்படும் மாவட்டங்கள்
இலங்கையில் நிலச்சரிவு அணர்த்தங்கள் ஏற்ப்படும் மாவட்டங்களாக பின்வருவன காணப்படுகின்றன.
பதுளை
காலி
அம்பாந்தோட்டை
களுத்துறை
கண்டி
கேகாலை
மாத்தளை
மாத்தறை
நுவரெலியா
இரத்தினபுரி
ளுழரசஉந:-hவவி:ஃஃறறற.nடிசழ.பழஎ.டமஃறநடிஃiனெநஒ.pரி?ழிவழைnஸ்ரீஉழஅ_உழவெநவெரூஎநைறஸ்ரீயசவiஉடநரூனைஸ்ரீ173ரூஐவநஅனைஸ்ரீ133ரூடயபெஸ்ரீநnசூணழயெவழைn
1.2 இலங்கையில் நிலச்சரிவு அணர்த்தங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்
நிலச்சரிவு அணர்த்தம் ஏற்ப்படுவதற்கான காரணிகளை இரண்டு பிரதான பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
1.இயற்கை காரணிகள்
2.மானிட நடவடிக்கைகள்
எனவே மேற்கூறப்பட்டதற்கிணங்க நாம் நிலச்சரிவு அணர்த்தங்களானது தோற்றுவிப்பதற்கான காரணங்களை விரிவாக ஆராய்வோம்.
இயற்கை காரணிகள்
புவிமேற்பரப்பில் நிகழும் இயற்கையான சில பௌதீகவியற் செயற்பாடுகள் நிலச்சரிவினை தூண்டும் காரணிகளாக அமைகின்றன. அதனடிப்படையில் அவற்றை பின்வருமாறு காண்போம்.
1. கடும் மழை:-
மழையானது தொடர்ச்சியாகவும், அதிகளவாகவும் இடம்பெறும் பிரதேசங்களில் நிலச்சரிவு அணர்த்தம் ஏற்படுகின்றது. அதாவது உயரமான பகுதிகளில் மழை பெய்யும் போது மழை நீரானது உட்புகுந்து மண் படைகளை இழகச்செய்வதன் மூலம் மண்ணின் பிடிப்புத் தன்மை குறைவடைகின்றது. இதன் காரணமாக மண்படையமைப்பு தனது இருப்பை விட்டு இடம்பெயரும் போது நிலச்சரிவு அணர்த்தம் ஏற்ப்படுத்தப்படுகின்றது.
2. தரைதோற்ற அமைப்பு
நிலச்சரிவினை தூண்டும் ஒரு காரணியாக தரைதோற்ற அமைப்பு காணப்படுகின்றது. அதாவது தரையமைப்புக்களைப் பொறுத்தும் பருப்பொருட்களின் அசைவு தீர்மானிக்கப்படுகின்றது. சாய்வின் கோணம் அதிகரிக்கும் போது நிலச்சரிவு வீதமானது கூடுதலாகக் காணப்படும்.
3. பாறைகளின் தன்மை
பாறைகளின் தன்மை என்னும் போது அது கொண்டுள்ள மூலகங்களின் அடிப்படையில் பாறைகள் பாகுபடுத்தப்படுகின்றது. உதாரணமாக சுண்ணாம்பு பாறைகள், கருங்கற் பாறைகள் போன்றவற்றை கூறலாம். இவ்வாறான பாறைகளில் சில வானிலையாலழிதலுக்கு உட்பட்டு இலகுவான முறையில் வெடிப்புக்கள், பிளவுகள் என்பன ஏற்படுத்தப்பட்டு நகர்ச்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.
4. இயற்கையாக நீர் வழிந்தோடுவதிலுள்ள தடைகள்
சில உயர் பகுதிகளில் மழை நீர் அல்லது ஆற்று நீர் ஓடும் பாதையில் இயற்கையான முறையில் தடைகள் காணப்படுகின்றன. உதாரணமாக மர வேர்களின் தடைகள், பாறைகளின் தடைகள், குழிகள் போன்றவற்றை கூறலாம். இவ்வாறான தடைகளில் நீரானது தடைப்பட்டு நீரானது தேங்கி நிற்கின்றது. தேங்கி நிற்கும் நீர் அவ்விடத்தின் பாறைப்படை அல்லது மண்படையினை ஊடுருவி அதனை இரசாயன மாற்றத்துக்குள்ளாக்கி அல்லது மண்படையினை நெகிழச் செய்து குலைத்து நிலச்சரிவினை தூண்டுகின்றது.
5. நில நடுக்கம்
நிலநடுக்கம் காரணமாக இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதில்லை. எனினும் எதிர்காலத்தில் ஏற்படும் என எதிர்வு கூறப்படுகின்றது. தகடுகளின் அசைவினால் தோற்றுவிக்கப்படும் நிலநடுக்கம் காரணமாக உயர் பிரதேசங்கள் மற்றும் பாறைகளில் காணப்படும் பருப்பொருட்கள், தாவரப் பொருட்கள் என்பன அசைவுக்குட்பட்டு இடம்பெயருகின்றன.
6. தாய்ப்பாறையின் தன்மை
தாய்ப்பாறையானது கொண்டுள்ள கனிப்பொருட்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு நிலச்சரிவானது தூண்டப்படுகின்றது.
7. இயற்கையாக அமைந்த நீரோட்டங்கள் அல்லது மேற்பரப்பு நீரோட்டம்
சில நீரோட்டங்கள் அல்லது ஆறுகள் என்பன உயர் பிரதேசத்திலிருந்து தாழ் நிலத்தை நோக்கி இடம்பெயரும் போது காலப்போக்கில் நிலச்சரிவு அணர்த்தங்கள் இடம்பெறுகின்றன.
8. குறிப்பிட்ட இடத்தில் இயற்கையாக அமைந்துள்ள தாவரப்போர்வை
சில இடங்களில் தாவரப்போர்வை அதிகமாகவும், சில இடங்களில் குறைவாகவும் காணப்படுகின்றது. தாவரப்போர்வை அதிகமாகக் காணப்படும் இடங்களில் நிலச்சரிவு வீதமானது குறைவாகவும் தாவரப்போர்வை குறைவாகக் காணப்படும் இடங்களில் நிலச்சரிவு அதிகமாகவும் காணப்படும். இதற்;கு காரணம் அப்பிரதேசத்தில் காணப்படும் தாவரப்போர்வையின் வேர்களானது அப்பிரதேச மண்ணில் கொண்டுள்ள பிடிப்புத்தன்மையேயாகும்.
9. வானிலையாலழிதல் செயற்பாடுகள்
புவிமேற்பரப்பில் பல்வேறு வழிகளில் பல்வேறு வகையில் வானிலையாலழிதல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இவையும் கூட நிலச்சரிவு அணர்த்தத்துக்கு செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாகவே காணப்படுகின்றன. உதாரணமாக பாறைகள் இரசாயன மற்றும் பௌதீக வானிலையாலழிதல் செயற்பாடுகளுக்கு உட்படும் போது அங்கு பாறைகளில் மாற்றம் ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட ஏதுவாகின்றது.
10. தொடர்ச்சியான பனியுருகல் செயற்பாடு
இச்செயற்பாடு இலங்கைளில் இடம்பெறுவதில்லை. உயர்மலைப் பிரதேசங்களில் இடம்பெறும் பனியுருகல் செயற்பாடானது தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற போது அது பாறைகளில் பௌதீக ரீதியான மாற்றத்தினை ஏற்படுத்தி அதாவது பாறைகளை சிதைவுக்குள்ளாக்கி அப்பாறைகளை இடம்பெயரச் செய்யும் போது நிலச்சரிவு ஏற்படுகின்றது.
11. எரிமலைக் கக்குகைகள்
இச்செயற்பாடும் இலங்கையில் இடம்பெறுவதில்லை. புவி நடுக்க செயற்பாடுகளினால் இடம்பெறும் எரிமலைச் செயற்பாட்டின் பொழுது இடம்பெறுகின்றது.
12. மண் திண்ணல் மற்றும் மண்ணரிப்பு
உயர் பகுதிகளிலும் சில இடங்களிலும் இடம்பெறும் மண் திண்ணல் மற்றும் மண்ணரிப்பு காரணமாக நிலச்சரிவு அணர்த்தம் ஏற்படுகின்றது.
13. தரைக்கீழ் நீரில் இயற்கையாக ஏற்படும் மாற்றம்
சில பகுதிகளில் தரைக்கீழ் நீரானது தனது பிரயாணத்தினை வழமையான முறையிலிருந்து இயற்கையான முறையில் மாற்றிக் கொள்ளும் போது அப்பிரதேசத்தில் நிலமானது நெகிழ்ச்சித்தன்மை அடைந்து நிலச்சரிவு ஏற்பட காரணமாக அமைகின்றது.
14. இயற்கையான வடிகால் அமைப்புக்கள் இயற்கையான முறையில் மாற்றமுறுதல்
சில இடங்களில் மழை பெய்யும் போது மழை நீரானது இயற்கையான முறையிலேயே தாழ்பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இவ்வாறான அமைப்புக்கள் சில சந்தர்ப்பங்களில் சில காரணங்களினடிப்படையில் இயற்கையான முறையில் மாற்றம் பெறுகின்றன. இதன்போது புதிய வடிகாலமைப்புக்களானது நீரோட்டத்துக்கு தாக்குப்பிடிக்காமல் அப்பிரதேசங்களில் நிலச்சரிவு அணர்த்தங்கள் ஏற்பட காரணமாகின்றது.
15. பனி உறைதல் செயற்பாடுகள்
இச்செயற்பாடும் இலங்கையில் இடம்பெறுவதில்லை. உயர்மலைப் பிரதேசங்களில் பனியானது உறைந்து மீண்டும் உருகல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றது. இதன் காரணமாக பனியானது உறைந்து உருகும் போது அது தன் பருமனில் மாற்றத்தினை ஏற்ப்படுத்துகின்றது. அதாவது உறையும் போது தன் பருமனை 10மூ இனால் அதிகரிக்கின்றது. மேலும் உருகும் போது பருமன் மீண்டும் பழைய நிலையினை அடைகின்றது. இச்செயற்பாடு தொடர்ந்து நடைபெறும் போது பாறைப்படையானது உடைவுகளையும், வெடிப்புக்களையும் பெற்று நிலச்சரிவுக்கு உட்படுகின்றது.
மானிட நடவடிக்கைகள்
1. முறையற்ற நிலப்பயன்பாடு
மனிதன் தமது பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்வதன் பொருட்டு நிலத்தினை தமது வசதிக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்கின்றான். இது பெரும்பாலும் விவசாய நடவடிக்கையுடனும், குடியிருப்புக்களை அமைககும் நடவடிக்கைகளுடனும் தொடர்புடையதாக அமைந்து காணப்படுகின்றது. அதாவது விவசாயத்தின் பொருட்டும், கட்டிட அமைப்பின் போதும் முறையற்ற விதத்தில் நிலத்தினை பண்படுத்தி அதன் இயற்கை தன்மையினை மாற்றியமைக்கும் போது நிலச்சரிவு அணர்த்தம் தூண்டுவிக்கப்படுகின்றது.
2. மலைகளைத் தகர்த்தல்
பல தேவைகளின் பொருட்டு மலைகள் தகர்க்கப்படுகன்றது. அதாவது கட்டிடத்தேவைக்கான கற்களை பெறவும், நிலத்தினை சமப்படுத்தும் பொருட்டும், கட்டிடத்தேவைகளின் பொருட்டும் மலைகள் உடைக்கப்படுகின்றது. இதன் காரணமாக பாறைகள் மற்றும் பருப்பொருட்கள் என்பன அசைவுக்குட்பட்டு நிலச்சரிவு அணர்த்தம் ஏற்படுகின்றது.
3. நீர் வழிந்தோடலை தடைசெய்தல், திசைதிருப்புதல், தேக்கிவைத்தல்
இயற்கையான முறையில் அமைந்துள்ள நீரோடைகளை மனிதன் தமது தேவைகளின் பொருட்டு அதனை மாற்றியமைக்கின்றான். உதாரணமாக குடியிருப்புக்களை அமைக்கவும், விவசாய நடவடிக்கைகளுக்காகவும், பாதைகளை அமைப்பதற்காகவும் இயற்கையான முறையில் அமைந்த வடிகான் அமைப்புக்களையும், நீரோடைகளையும் மாற்றியமைக்கின்றனர். இதன் காரணமாக வழிமாறிப் போகும் நீர் ஆங்காங்கே தங்கி நிலத்தை நெகிழ்வடையச் செய்கின்றது. இதன் காரணமாக நிலச்சரிவு அணர்த்தம் தூண்டப்படுகின்றது.
4. அகழ்வுக் கைத்தொழில்கள்
இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வு போன்ற கைத்தொழில்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றினைப் பெறும் பொருட்டு நிலமானது அதிகமாக தோண்டப்படுகின்றது. இதன் காரணமாக மண்ணின் படையமைப்பு குலைக்கப்படுவதுடன் மட்டுமல்லாது அயற்பிரதேசங்களிலும் உள்ள பகுதிகளையும் சேர்த்து நிலச்சரிவுக்கு உள்ளாகின்றது.
5. முறையற்ற நிர்மானிப்புக்கள்
மானிடத்தேவைகளின் பொருட்டு உயர்மலைப்பகுதிகளில் பல்வேறுபட்ட பண்பாட்டம்சங்களை முறையற்ற விதத்தில் நிறுவுகின்றனர். தொலைத்தொடர்பு கோபுரங்கள், குடியிருப்புக்களுக்கான கட்டிடங்கள், போன்றவற்றை கூறலாம். இவ்வாறான அம்சங்களின் அதிகரித்த அழுத்தம் காரணமாக பருப்பொருட்களானது அசைவுக்குட்படுகின்றது.
6. பயிர்ச்செய்கை நடவடிக்கைகள்.
சில பிரதேசங்களில் நடைபெறும் முறையற்ற பயிர்ச்செய்கை நடவடிக்கைகளாலும் நிலச்சரிவு அணர்த்தம் ஏற்படுகின்றது. அதாவது உயர் பிரதேசங்களிலும், சாய்வான பகுதிகளிலும் நடைபெறும் பயிர்செய்கைகள் திட்டமிடப்படாதவாறு நடைபெறுவதன் மூலம் மண்திணிவுகள் அசைவுக்குட்படுகின்றன.
7. குத்துயரச் சாய்வான பிரதேசங்களில் கட்டிடங்கள் அமைத்தல்
மனித பெருக்கத்தின் காரணமாக இன்று அனேகமான இடங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்வதன் பொருட்டு உயர்மலைப் பிரதேசங்கிளலும், சாய்வான பகுதிகளிலும் மனத தேவைக்கான கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் அழுத்தம், மற்றும் முறையற்ற நிர்மானிப்புக்கள் காரணமாக நிலச்சரிவு அணர்த்தங்கள் ஏற்படுகின்றன.
8. சரிவுகளை வெட்டித்துப்பரவு செய்தல்
இயற்கையான முறையில் அமைந்த சரிவுகளை மனித நடவடிக்கைகளுக்காகவும், நோய் நிலமையிலிருந்து பாதுகாப்பதற்காகவும் சரிவுகள் வெட்டித் துப்பரவு செய்யப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக மண்திணிவுகள், மற்றும் அவற்றில் அமைந்த பருப்பொருட்கள் என்பன அசைவுக்குட்படுகின்றன.
9. பாரியளவில் காடுகளை வெட்டியழித்தல் மற்றும் தாவரப்போர்வையை நீக்குதல்
தாவரப்போர்வைகள் மண்ணரிப்பினை கட்டுப்படுத்துவதோடு, மண்படையமைப்பினை பற்றிப்பிடித்துக் கொண்டுள்ளதன் மூலம் மண்சரிவினையும் கட்டுப்படுத்துகின்றது. இன்று பெருமளவிலான காடுகள் மானிட தேவைகளின் பொருட்டு வெட்டியழிக்கப்படுகின்றன. அதாவது குடியிருப்புக்களை அமைக்கவும், கட்டிடத்தேவைகளுக்காகவும், பயிர்செய்கை நடவடிக்கைகளுக்காகவும், வீதி அபிவிருத்திப்பணிகளுக்காகவும் காடுகள் அதிகளவான முறையில் உயர்மலைப்பகுதிகளிலும், சாய்வான பகுதிகளிலும் வெட்டியழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தாவரப்போர்வைகள் நீக்கப்படுகின்றன. எனவே தவார வேர்கள் பற்றிப் பிடித்திருந்த மண் நெகிழ்வுத் தன்மையினைப் பெற்றுக்கொள்ளும். அது மழை பெய்யும் போது தானாகவே உதிரத்தொடங்கும். அதுவரை மண் தாங்கி நின்ற பாறைகளும் கீழே விழுவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாகின்றன. 1840ம் ஆண்டு ஆங்கிலேயர் கொண்டு வந்த தரிசு நிலச்சட்டத்தின் கீழ் மலை நாட்டிலுள்ள அதிகமான காடுகள் வெட்டியளிக்கப்பட்டன. அதன் பின்பு மண்சரிவுகள் அதிகமாக இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
10. சேனைப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள்
சேனைப்பயிர் செய்கை என்பது குறிப்பிட்ட காட்டுப்பகுதிகளை வெட்டி தாவரப்போர்வைகளை எரித்து அவ்விடத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகும். இவ்வாறு பயிர்செய்கை பண்ணப்படும் இடமானது காலப்போக்கில் மண்ணின் தரம் குன்ற அவ்விடம் கைவிடப்பட்டு வேறு இடத்தினை நாடிச்செல்கின்றனர். கைவிடப்பட்ட இடமானது மண்ணின் படையமைப்பு மாற்றப்பட்டதனாலும், மழை வீழ்ச்சி காரணமாகவும் நிலச்சரிவு அணர்த்தத்தினை எதிர்கொள்கின்றன.
11. ஆராய்சி செய்யாது கற்குழிகளை தோண்டுதல்
12. கருங்கற்களை வெடிக்க வைத்தல்
கருங்கற்களானது கட்டிடத்தேவைகளுக்கு பயன்படுத்தும் பொருட்டு உயர்மலைப் பிரதேசங்களிலும், பாறைகளிலும் வெடிவைத்தல், அதிர்வுகளை பயன்படுத்தி வெடிக்கவைத்தல் போன்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதன் காரணமாக அப்பகுதிகள் அதிர்வுக்;குட்பட்டு பாறைகள், பருப்பொருட்கள் என்பன அசைவுக்குட்பட்டு நிலச்சரிவு அணர்;த்தம் ஏற்படுகின்றது.
13. மேட்டு நிலங்களில் நீரைத் தேக்கி வைத்தல்
மின்சாரம், பயிர்ச்செய்கை போன்ற நடவடிக்கைகளுக்காக உயார்பகுதிகளில் மழை நீரானது சேமித்து வைக்கப்படுகின்றது. இவ்வாறு சேமித்து வைக்கப்படும் நீரானது மண்ணரிப்பினை தோற்றுவிக்கப்படுகின்றது.
14. அதிகளவு கால்நடைகளின் அல்லது மந்தைகளின் மேய்ச்சல்
கால்நடைகளானது சாய்வான பகுதிகளிலும், உயர் பகுதிகளிலும் மேய்ச்சலுக்கு விடப்படுகன்றன. புற்கள் மழை நீரினால் உண்டாகும் மண்ணரிப்பினை தடை செய்கின்றது. இப்பிரதேசங்களில் கால்நடைகள் அதிகளவான முறையில் மேற்ப்பரப்பில் காணப்படும் புற்களை உட்கொள்வதன் பொருட்டு நீக்குகன்றது. இவ்வாறான செயற்பாடுகிளனால் இப்பிரதேசங்களில் மண்சரிவு அணர்த்தம் தூண்டுவிக்கப்படுகின்றது.
15. பாறைகளில் குடியிருப்புக்கள் அமைத்தல்
பாறைப்பகுதிகளிலும், சாய்வான பாறைப்பகுதிகளிலும் குடியிருப்புக்களை அமைக்கும் நடவடிக்கை காரணமாக அப்பகுதிகள் அதிகளாவான சுமை, அழுத்தம் காரணமாக வெடிப்புக்களை பெற்று உடைவுக்குள்ளாகின்றதது.
16. மீள் கட்டுமான அபிவிருத்திச் செயற்பாடுகள்
17. போக்குவரத்துப்பாதைகள் அமைத்தல்
இன்று இலங்கையில் உயர்மலைப்பிரதேசங்களுக்கும் மத்திய மலை நாட்டுக்கும் பெருந்தெருக்கள் அமைக்கப்பட்டுவருகின்றது. இதன் காரணமாக பாறைப்பகுதிகள், குடையப்பட்டும், வெட்டப்பட்டுமே வீதிகள் அமைக்கப்படுகின்றன. இந்நடவடிக்கைகளின் காரணமாகவும் நிலச்சரிவு அணர்த்தங்க்ள தோற்றுவிக்கப்படுகின்றது. அருகில் காட்டப்பட்டுள்ள படம் இலங்கையின் தெற்கு அதிவேகப் பாதையினை அமைத்த பின்பு அப்பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவு அணர்த்தமாகும்.
18. கழிவுநீர் அடைபட்டுப் போதல்
மக்கள் பயன்படுத்திய பின்பு நீரை சரியான முறையில் வெளியேற்ற வேண்டும். இவை வெளியேற்றப்படும் பாதையும் அடைபட்டு விட்டால் இக்கழிவுநீரும் நிலத்தில் தங்கி நெகிழ்வுத்தன்மையை உண்டு பண்ணும். இலங்கையில் மனித குடியிருப்புக்களுக்கருகில் ஏற்படும் நிலச்சரிவு அணர்த்தங்குளுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
19. பார ஊர்திகளின் பாவனை
20. மண் திட்டுக்களை வெட்டி அகற்றுதல்
நிலச்சரிவு அணர்த்தம் தொடர்பான தகவல்களை இலங்கையில் அறிந்து கொள்ளககூடிய இடங்;கள்
1. பல்லேகல திறந்தவெளிச்சாலை
2. கொழும்பு பல்கலைக்கழகம்
3. பேராதனைப் பல்கலைக்கழகம்
4. வளி மண்டலவியல் திணைக்களம்
5. அணர்த்த மத்திய முகாமைத்துவ நிலையம்
1.3 இலங்கையில் நிலச்சரிவு அணர்த்தங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்
நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக இலங்கையில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றை நாம் சூழல் ரீதயிலான பாதிப்பு, பொருளாதார ரீதியிலான பாதிப்பு, சமூக ரீதியிலான பாதிப்பு போன்ற பலவாறாக நோக்க முடியும். எனவே மேற்கூறப்பட்டதனடிப்படையில் பின்வருமாறு விரிவாக ஆராய்வோம்.
1. நீரின் தரம் பாதிப்படைதல்
இலங்கையில் நீர் நிலைகள், மற்றும் ஆறுகளில் ஏற்படும் நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக பருப்பொருட்கள், அடையல்கள், மற்றும் கனிப்பொருட்கள் என்பன நீருடன் கலப்பதன் காரணமாக அந்நீரின் தரம் பாதிப்படைகின்றது. இதன் காரணமாக அந்நீரினை பாவனைக்கு உட்படுத்த முடியாமற் போகின்றது.
2. புவியின் வெளியுருவவியற் தன்மை மற்றும் மேற்பரப்பு தன்மை மாற்றமடைதல்
நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக பாறைகள் உடைதல், கீழிறங்குதல், மண் திணிவுகள் அசைவுக்குட்படல் போன்ற செயற்பாடுகள் காரணமாக இயற்கையாக அமைந்த புவிமேற்பரப்பு தன்மை மாற்றியமைக்கப்படுகின்றது.
3. மனித உயிர்கள் பலியாதல்
இலங்கையில் மக்கள் குடியிருப்புக்களில் ஏற்படும் நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக பாறைகள் விழுதல், கட்டிட உடைவுகள் காரணமாக உயிர்ச்சேதங்களும் ஏற்படுகின்றன.
4. சொத்துக்கள் சேதம்
நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக மனித சொத்துக்களும் சேதமடைகின்றது. உதாரணமாக கட்டிடங்கள், வீடுகள், பாவனைப் பொருட்கள் வீதிகள், பொது கட்டிடங்கள் போன்றவையும் சேதமடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
5. பெருந்தோட்டத்துறை மற்றும் பயிர் நிலங்கள் பாதிப்படைதல்
அதிகமாக இலங்கையில் பெருந்தோட்டப்பயிர்செய்கை பண்ணப்படும் மாவட்டங்களிலேயே நிலச்சரிவு அணர்த்தங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அது பெருந்தோட்டத்துறையில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. பயிர்ச்செய்கை செய்யப்படும் பிரதேசங்களில் நிலச்சரிவு அணர்த்தம் ஏற்படும் போது பயிர்செய்கை நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், பயிர்செய்கை நடவடிக்கைகள் தடைப்படுகின்றது. மேலும் செய்கை பண்ணப்பட்ட பயிர்களும் கூட அழிவினை எதிர்நோக்குகின்றது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும், பொருளாதாரத்திலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.
6. போக்குவரத்து சீர்கேடு அல்லது போக்குவரத்து தடைப்படுதல்
இலங்கையில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வீதியோரங்களில் அதிகமான நிலச்சரிவு அணர்த்தம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக போக்குவரத்து தடைப்படுகின்றது.
7. நீர் செல்லும் வழிகள் தடைப்படுதல்
நதி நீரோட்டங்கள் மற்றும் ஆறுகள் பாயும் இடங்களில் ஏற்படும் நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக அங்கு நீரோட்டமானது தடைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி நீரோட்டங்களின் பாதையும் திசை திருப்பப்படுவதனையும் அவதானிக்க முடியும்.
8. விவசாய நிலங்கள் இழக்கப்படுதல்
இலங்கையில் பயிர்செய்கை பண்ணப்படும் இடங்களில் ஏற்படும் நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக பயிர்செய்கை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அந்நிலங்களில் மீண்டும் பயிர்செய்கை பண்ணமுடியாமல் போகின்றது. மேலும் அப்பிரதேசங்களில் மக்கள் பயிர்செய்கை செய்ய முன்வருவதுமில்லை.
9. இயற்கையான வளங்கள் பாதிக்கப்படுதல் மற்றும் இழக்கப்படுதல்
சில இடங்களில் ஏற்படும் நிலச்சரிவு அணர்த்தம் காரணமாக இயற்கை வளங்களும் பாதிப்பை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக சில தாவரங்கள் அழிவடைதல் போன்றவற்றை கூறலாம்.
10. கலாசார முக்கியத்துவமுள்ள இடங்கள் பாதிப்படைதல்
இலங்கை கலாசர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். பல இடங்களிலும் கலாசார முக்கியத்துவத்தினைப் பிரதிபலிக்கும் பல அடையாளச் சின்னங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான பிரதேசங்களில் நிலச்சரிவு அணர்த்தம் ஏற்படும் போது இப்பிரதேசத்தின் கலாசாரத்தினை பிரதிபலிக்கும் சின்னங்களும் அழிவினை எதிர்நோக்கும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன.
11. மக்களின் அன்றாட (இயல்பு) வாழ்கை பாதிப்படைதல்
மக்கள் வாழும் பிரதேசங்களில் நிலச்சரிவு அணர்த்தம் ஏற்படுவதன் காரணமாக அப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்கை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றது. இதனை அருகில் காட்டப்பட்டுள்ள படத்தினை கொண்டு விளங்கிக் கொள்ள முடியுயும்.
12. மக்கள் உள ரீதியாக பாதிப்படைதல்
நிலச்சரிவு ஏற்படும் சந்தர்ப்பங்களில் இறப்புக்கள் நிகழ்தல், உடல்களுக்கு சேதம் ஏற்ப்படுதல், அவர்களின் பெறுமதியான சொத்துக்களை அழிவடைதல் போன்ற காரணங்களினால் மக்கள் மனங்களில் அது நீங்கா வடுவினை ஏற்படுத்தி விடுகின்றன. அதன் காரணமாக பல உளவியல் பிரச்சினைகளுக்கும் அவர்கள் முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.
13. மக்கள் அகதிகளாக்கப்படுதல்
நிலச்சரிவு அணர்த்தங்கள் பாரியளவு அழிவுகளை ஏற்படுத்தும் போது பொருட்கள் அதிகளவு சேதமடைவதன் காரணமாகவும் மற்றும் அப்பிரதேசங்களில் மக்கள் வாழ விருப்பமின்மை காரணமாக மக்கள் வேறு வசிப்பிடங்களும் அற்ற நிலையில் அகதிகளாகும் நிலைமையும் ஏற்படுகின்றது.
14. சொத்துக்களின் (நிலத்தின்) பெறுமதி குறைவடைதல்
அடிக்கடி நிலச்சரிவு அணர்த்தம் ஏற்படும் பிரதேசங்களை மக்கள் அதிகளவு குடியிருப்புக்களை அமைக்க முன்வரமாட்டர். மேலும் பயிர்செய்கை நடவடிக்கைகளை கூட அப்பிரதேசங்களில் செய்கை பண்ண முடியாது. இதன் காரணமாக அப்பிரதேசத்தின் கேள்வி குறைவாகக் காணப்படும்.
15. செலவினங்கள் அதிகரித்தல்
நிலச்சரிவு அணர்த்தமானது அதிகளவு சேதங்களை ஏற்படுத்தும் போது அதனை நிவர்த்தி செய்வதற்கான செலவினங்களும் அதிகமாகவே காணப்படுகின்றது.
1.6 இலங்கையில் நிலச்சரிவு அணர்த்தங்களை தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்
நிலச்சரிவு அணர்த்தமானது இயற்கை காரணிகளாலும், மானிட நடவடிக்கைகளாலும் ஏற்படுகின்றன என மேற்கண்டோம். எனினும் சில திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நிலச்சரிவு அணர்த்தத்தின் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் இலங்கையில் நிலச்சரிவு அணர்த்தத்தினை குறைப்பதற்கும், தடுப்பதற்கும் மேற்கொள்ளக் கூடிய வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்.
1. சாய்வு பிரதேசங்களில் மரங்களை நடுதல்
சில சாய்வான பகுதிகளில் தாவரப்போர்வை குறைவாகக் காணப்படுவதனாலும் மற்றும் தாவரங்களை அகற்றுவதன் காரணமாகவும் நிலச்சரிவு அணர்த்தங்கள் ஏற்படுகின்றன என கண்டோம். எனவே இவ்வாறான பிரதேசங்களை இனங்கண்டு அப்பிரதேசங்களில் தாவரப்போர்வையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் மரங்களை பாதுகாப்பதுடன் தரிசு நிலங்களில் மரங்களை நாட்ட அரசுகளோ, தனியார் துறையினரோ முன்வர வேண்டும்.
2. சாய்வு நிலங்களில் பொருத்தமான விவசாய நுட்பமுறைகளைப் பின்பற்றுதல்
மண் மற்றும் நீரினைப் பாதுகாப்பதற்காக சாய்வினை கொண்ட பிரதேசங்களில் சமவுயரக்கோட்டு பயிர்செய்கை நுட்ப முறை பின்பற்றப்படுகின்றது. சாய்வு நிலங்களில் பதப்படுத்தப்படாத பயிர்செய்கை முறையும் மேற்கொள்ளப்படுகின்றது. சாய்வுகளில் மண் உழுதலுக்கு உட்படுமாயின் மண் கீழ் நோக்கி நகர்வதற்கு வாய்ப்பாக அமையும். ஆகவே சாய்வு நிலங்களில் மண் உழுதலைத் தவிர்ப்பது நல்லது.
3. கற்சுவர் அமைத்தல்
நிலச்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய குத்துச்சாய்வான மற்றும் சாய்வான பிரதேசங்களை இனங்கண்டு அப்பிரதேசங்களில் பாரிய தடுப்பு சுவர்களை அமைப்பதன் மூலம் நிலச்சரிவு அபாயத்தினைக் குறைத்துக் கொள்ள முடியும்.
4. நீர் வடிந்தோட திட்டமிட்ட முறையில் வடிகால்களை அமைத்தல்
மழைக்காலங்களில் மழைநீர் ஓடும் இடங்களை இனங்கண்டு அதற்கு ஏற்றவாறான கால்வாய்களை அமைத்தல் மற்றும் நீர் தேங்கி நிற்க கூடிய இடங்களை இனங்கண்டு அங்கு தேங்கும் நீரை வெளியேறுவதற்கான வடிகால்களை அமைக்க வேண்டும்.
5. இயற்கையாக நீர் வழிந்தோடும் வழிகளை தடைசெய்யாதிருத்தல்.
6. அதிகம் சாய்வான பகுதிகளில் பயிர்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருத்தல்.
7. நிலச்சரிவு அபாயப் பிரதேசங்களில் குடியிருப்புக்களை அமைக்காதிருத்தல்.
8. தாவரப்போர்வையை அழிவடையாது பாதுகாத்தல்
9. படிக்கட்டுப் பயிர்செய்கையை நடைமுறைப்படுத்தல்
10. நிலச்சரிவு தொடர்பான அறிவினையும், விழிப்புணர்ச்சிகளையும் மக்களிடையே ஏற்படுத்தல்
11. நிலச்சரிவினை தூண்டும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு தண்டனை வழங்குதல் மேலும் சட்டங்களை கடுமையாக்குதல்
12. அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிட்ட முறையில் நடைமுப்படுத்துதல்
13. சாய்வுப்பிரதேசங்களில் திட்டமிட்ட முறையில் குடியிருப்புக்களை அமைத்தல்
14. மூடுபயிர்களை நடுதல்

ஆக்கம் கிழக்குப் பல்கலைக்கழகம்