நகரங்களில் வறுமை

வறுமைக்கு பல்வேறு வரைவிலக்கணங்கள் கொடுக்கப்படுகின்றபோதிலும் 'வறுமை என்பது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாத நிலை'  என வரைவிலக்கணப்படுத்தலாம்.
 உலகத்தில் வறுமை என்பது பலவகைப்பட்டதாக காணப்படுகின்றது. உலகத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதமானோர் வறுமையில் வாடுவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இதில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினருக்கும் கூடுதலான மக்கள் தொகையினர் 1 டொலருக்கும் குறைந்த வருமானத்தைப் பெறுகின்றனர். தெற்காசிய நாடகளில் 44 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதில் உள்ளடங்குகின்றனர். இங்கு போசாக்கான உணவின்மை, ஆரோக்கியமான உடல் பாதுகாப்பின்மை, போதியளவு மருத்துவ சுகாதார வசதிகள் இன்மை, குறைந்தளவான அடிக்கட்டுமான வசதிகள் போன்ற பல விடயங்களும் வறுமையான நாடுகளில் காணப்படுகின்றன.

வளர்ந்து வருகின்ற நாடுகளில் முக்கியமான கவனத்திற்கு உட்படவேண்டிய நாடுகள் இதில் உள்ளடங்கப்படுகின்றன. அந்நாடுகள் தொடாபான வறுமை பற்றிய பார்வை முக்கியமாகக் கொள்ளப்படுவதோடு இயற்கையாகக் காணப்படுகின்ற வளப்பற்றாக்குறை, தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலை என்பன முக்கிய காரணியாக சுட்டிக்காட்டபடுகின்றன. கல்வியறிவு போசாக்க என்பன மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக பல அறிக்கைகள் சுட்டிக் காட்டகின்றன. குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நடைமுறையில் காணப்படுகின்ற கொள்கைகள், அரசியல் ஸதிரமற்ற தன்மைகள் என்பனவும் காரணங்களாக அமைகின்றன. இவ்வாறு பொதவாக வறுமையானது காணப்படுகின்றது.

  உலகில் இன்று நகரங்களின் சனத்தொகை வளர்ச்சியடைந்து கொண்டே செல்கின்றது. இதனால் உலகில் மில்லியன் நகரங்கள், மெகா நகரங்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. ஆரம்ப காலங்களில் நகரசனத்தொகை வளர்ச்சி என்பது ஒரு மந்த கதியிலேயே இடம்பெற்று வந்தது. ஆனால் இன்று நகரவளர்ச்சி திடீரென அதிகரித்து வருகின்றது. உலகில் நகரங்களின் பரம்பல் பற்றி நோக்கும்போது அது 1950 களில் விருததியடைந்த நாடுகளிலேயே அதிக நகரங்கள் காணப்பட்டன. 2000 ஆணடுகளில் வளர்முக நாடகளில் காண்ப்பட்ட நகரங்களே அதிக சனத்தொகை கொண்டஇநகரங்களாக மாற்றமடைந்தன. இதேவேளை 2015 ஆம் ஆண்டளவில் அதிக சனத்தொகை கொண்ட நகரங்கள் தொடர்ந்தும் வளர்மக நாடகளிலேயே காணப்படும் என்றும், அத்துடன் அவை பெருமளவில் ஆசியாவில் காணப்படும் எனவும் எதிhவுகூறப்படுகின்றது.

  நகர சனத்தொகை வீதத்தை அதிகளவில் கொண்ட மதல் 10 நாடுகள் (2007)
                                                               Source:- www.mapsofworld.com
 
    வளர்முக நாடுகளிலேயே இன்று உலகில் காணப்படும் பல்வேறு மாநகரங்களும் அமைந்துள்ளன.  வளர்மக நாடுகளின் நகராக்கத்தில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அந்தவகையில் வறுமை வேலையின்மை மற்றும் நிலப்பற்றாக்குறை என்பன காரணமாக கிராமிய பகுதிகளிலிருந்து மக்கள் நகரங்கள் நோக்கி இடம்பெயர்ந்தiமை, நகரங்களில் காணப்பட்ட வேலைவாய்ப்பு, சேவை போன்ற இழுவிசைக்காரணிகளின் செல்வாக்கு, வளர்முக நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட அபிவிருத்திக் கொள்கைகளில் காணப்பட்ட நகர் சாhந்த பாரபட்சம், நகரப்பகுதிகளில் குடித்தொகை அதிகரிப்பு என்ற விளைவுக்கு வழிசமைத்தது. நகரங்களின் புவியியல் ரீதியான சார்பான நிலைமையினால் முயற்சியாண்மையாளர்களிடையே ஏற்பட்ட கவர்ச்சி,  வர்த்தக பொருளாதார நிர்வாகக் காரணிகள் காரணமாக நகரங்களின் வரலாற்று ரீதியிலான வளர்ச்சி. நகரப்பகுதிகளில் குடித்தொகையின் இயற்கை வளர்ச்சி, நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக நகரப்பகுதிகளிலே ஏற்பட்ட புவியியல் ரீதியான விரிவாக்கம், கிராமாந்திரங்களின் அல்லது கிராம நகரங்களின் தோற்றம் போன்ற காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இத்தகைய நிலைமைகளால் 2004 ஆம் ஆண்டில் உலகில் காணப்பட்ட 10 மில்லியனுக்கு மேற்பட்ட சனத்தொகை கொண்ட 20 நகரங்களில் 12 ஐ வளர்முக நாடுகள் கொண்டனவாக காணப்பட்டன. இந்த நிலைமை இன்னும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.
     
   உலகில் இன்று சனத்தொகை கூடிய மாநகரங்கள் பெரும்பாலும் வளாமக நாடுகளிலேயே அமைவ பெற்றுள்ளன. அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பார்க்கிலும், வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிக மாநகரங்கள் காணப்படுகின்றன. இதற்கு பல்வேறு காரணிகள் காணப்படுகின்றது.  வளர்முக நாடுகளில் ஒரேயொரு விருத்தி பெற்ற நகரமே காணப்படுன்றது. இதனால் நிலைமைகளினால் கைத்தொழில், நிர்வாக, சேவைகளின் மையப்படுத்தலும் இங்க அதிகரித்தாக காணப்படுகின்றது. இத்தகைய நிலைமைகள் காணமாக பெருமளவில் மக்களை கவரக்கூடியனவாக இருப்பதனால் மக்கள் தொகை அதிகரிக்கின்றது. வளாமுக நாடுகள் பெரும்பாலும் விவசாய நடவடிக்கைகளையே பரந்துபட்ட அளவில் கிராமப்பகுதிகளில் கொண்டுள்ளது. அத்துடன் நகரப்பகுதிகளிலெ கைத்தொழில் நடவடிக்கைகளின் செறிவாக்கமும், அதனால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புக்களும் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் பெருமளவில் தொழில் தேடுவோர் நகரப்பகுதிகளில் குடியேறுகின்றனர். 

   மின்சாரம், போக்குவரத்து, தொடர்பால், கல்வி, மருத்துவவசதி போன்ற உட்டகட்டமைப்பு, சேவை வசதிகளின் விருத்தியடைந்த நிலைமை இங்குள்ள நகரப் பகுதிகளிலே அதிகளவில் காணப்படுகின்றது. கிரமப்பகுதிகளில் இவை மிகக் குறைவான வகையிலும் முற்றாக விருத்தி பெறாமலுமே காணப்படுகின்றது. இதனால் தமது தேவையை இலகுவாக பூர்த்துசெய்து கொள்ள விரும்புகின்ற மக்கள் பெருமளவில் இங்கு கிரமப் பகுதிகளிலிருந்து நகரப்பகுதிகளில் குடியேறுகின்றனர். மேலும் உள்நாட்டு – வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் காணப்படுகின்றமை, கிராமிய பகுதிகளில் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பு கிராமப் பகுதிகளை விட நகரப்பகுதிகளில் காணப்படுகின்றமை போன்ற காரணிகளும் வளர்முக நாடுகளில் அதிக மாநகரங்கள் காணப்படுவதற்கு காரணமாக அமைகின்றன. 

   வளர்முக நாடுகளில்  நகரங்கள்  பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனது. அந்தவகையில் தங்குமிட வதிவிடப்பிரச்சினைகள், உடல்நல சுகாதாரப் பிரச்சினைகள், போக்குவரத்து நெருக்கடி, போககுவரத்து நெருக்கடி, சட்டவிரோத நடவடிக்கைகளில் சூழல் சீர்குலைதல் ஆகிய பிரச்சினைகள் முக்கியமானiயாகும். அந்தவகையில் நகரங்களில் காணப்படுகின்ற வறுமை நிலை அதிகளவான நகரப்;பிரச்சினைகளுக்க காரணமாக அமைகின்றது. நகரப்பிரதேசங்களில் நகர வறுமை ஏற்படுவதற்குரிய காரணங்களாக கிரமப்பகுதிகளில வேலைவாய்ப்பின்மை, கழராம மக்களின் அதிகளவானோர் நகரங்களில் குடியேறுதல், உயர் வாழ்க்கைச் செலவு, பகுதிநேர வேலைவாய்ப்புகள் போன்ற காரணிகள் செல்வாக்குச் செலுத்தகின்றன.

  நகரப்பிரதேசங்களில் நிலத்திற்கான பெறுமதி அதிகமாகும். இதன் காரணமாக வேறு பிரதேசங்களிலிருந்து நகரை நோக்கி வருபவர்கள் உறைவிடங்களை அமைத்துக் கொள்வதில் சிரமப்படுகின்றனர். பெரும்பாலும் இவ்வாறு வெளியிடங்களிலிருந்து நகரப்குதிகளுக்கு வருபவர்களில் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களாகக் காணப்படுகின்றமையாலும் நகரங்களின் ஒதுக்கப்புறங்களில் அதாவது வீதிகளின் அருகாமையிலோ அல்லது கால்வாய்களுக்க அருகிலோ தமது உறைவிடங்களை தற்காலிகமாக அமைத்துக் கொள்கின்றனர். இத்தகைய தற்காலிக உiவிடங்கள் சேரிக்குடியிருப்புக்கள் எனப்படுகின்றன. இவை சட்டவிரோதமானவையாகவிருப்பதுடன், சூழல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கின்றது. சில நாடுகளின் நகரங்களில் வீதிகளிலும் தமது உறைவிடங்களாக பயன்படுத்துகின்றனர்.

 நகரப்பகுதிகளில் வறியவர்கள் தமது குறைந்த செலவுகளில் சேரிகளை உருவாக்கிக் கொள்கின்றனர். இத்தகைய சேரிப்புறக் குடியிருப்பக்கள பொதவாக நகரின ஒதுக்குப் பகுதிகளிலே காணப்படுகின்றன. நகரத்தின் மையத்திற்கு அருகில் காணப்படுதல்,  சதுப்பு நிலங்களில், பாதை, இரும்புப்பாதை, கால்வாய் ஆகியவற்றிற்கு அருகில் காணப்படுதல், மலைச்சரிவு, குப்பை கூழமில்லா பகுதிகளிலும் சேரிகளினதும், அத்துமீறிய குடிமனைகளினதும் அமைவிடத்தைக் காணலாம். இத்தகைய சேரிப்புறங்கள் நகரங்களில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றன.
  நகரப்பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகனங்கள் வெளியேற்றும் புகை, தொழிற்சாலைகளினால் வெளியேற்றப்படும் புகை, நச்சுக்கழிவுகள் காரணமாக உடல்நல சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. தொழிற்சாலைக்கழிவுகள் நீர்நிலைகளில் சேருதல், நகரக்கழிவுகள் குவிந்து கிடத்தல் முதலிவற்றால்  தொற்றுநோய்கள் பரவுகின்றன. இவை நுளம்பகளின் பெருக்கத்திற்கு வழிவகுப்பதுடன் டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கும் வழிவகுக்கின்றது. வாகனங்கள், விமானங்கள் மூலம் மேலெழுப்பப்படும் தூசுக்கள் சுவாசத்துடன் கலப்பதனால் சுவாசப் புற்றுநோய் முதலிய நோய்களும் ஏற்படுகின்றன. அத்துடன் நகரப்பகுதிகளில் காணப்படுகின்ற வறியவர்களுக்கு போதிய வருமானமின்மையாலும் சுகாதார வசதிகளை முறையாகப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் உருவாகியுள்ளன.
    நகரப்பிரதேசங்களில் தொழில்வாய்ப்பைத் தேடி பல்வேறு பிரதேசங்களிலுமிருந்தும் இளைஞர்களும், யுவதிகளும் வருகின்றனர். இவர்கள் தமக்குரிய தொழில்வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில் பணம் ஈட்டும்பொருட்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட முனைகின்றனர். கடத்தல், கொள்ளை, திருட்டு, பாதாள உலகக் குழுக்களில் இணைதல், கலாசார சீர்கேடு நடவடிக்கைகள் முதலிவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் நகரப்பிரதேசங்களில் குற்றச் செயல்களும், வண்முறை நடவடிக்கைகளும் அதிகளவில் இடம்பெறுகின்றன.

  நகர்புர வறுமையினை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சுய உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல், சேரிப்புற வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மானித்து கொடுத்தல், ஏழைகளை மேம்படுத்தும் திட்டங்களை உருவாக்குதல், சிறந்த நகர முகாமைத்துவத்தை ஏற்படுத்தல், அரச சாhப்ற்ற நிறுவனங்களின் உதவியை வறியவாகளுக்கு பெற்றுக்கொடப்பதற்க வழிசெய்தல், செமிப்பு வசதி வாயப்புகளை வறியவர்களிடையே ஏற்படுத்தல் போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்த முனையலாம்.
  எனவே வளர்முக நாடுகளில் நகரங்களில் காணப்படுகின்ற வறுமை நிலையானது பல்வேறு நகரப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவருகின்றது.


உசாத்துணைகள்:-
·         http://www.unescap.org/pdd/publications/urban_poverty/urban_poverty.asp
·         http://www.wilsoncenter.org
·         http://members.tripod.com/sadashivan_nair/quotpovertyquotasubject/id34.html


(யArticle By:- Akshayan)