ஆரம்ப
காலங்களில் மேற்குலக நாடுகளின் உண்மையான குடித்தொகை வரலாற்று
அனுபவங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாக இக்குடிவரையியில் நிலைமாறு
கோட்பாடு காணப்படுகின்றது.விருத்தியடைந்த நாடுகளின் பிறப்பு இறப்பு வீதங்களின் வீழ்ச்சி செயன்முறை பற்றிய பொதுமைப்படுத்தப்பட்ட விளக்கத்தை உருவாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இக் கோட்பாடு அண்மைக்காலங்களில் 3ம் உலக நாடுகளில் ஆரம்பக் கட்டத்தில் இருக்கின்ற குடித்தொகை மாற்றங்களுக்கு பிரயோகிக்கக் கூடிய கோட்பாடாக காணப்படுகின்றது. உயர்மட்ட பிறப்பு வீதத்தாலும், வேகமாக வீழச்சியடைந்துவரும் இறப்பு வீதத்தாலும் உயர் குடித்தொகையைக் கொண்டிருக்கின்ற நாடுகள் எதிர்கால குடித்தொகை போக்கை கண்டறிந்து செயற்பட இக்கோட்பாடு பயன்படுகின்றது.
இக்கோட்பாட்டின் உருவாக்க கர்த்தாவான Landry (1909) என்பவர் குடிப்புள்ளியியல் மாற்றம் 3 பிரதான கட்டங்கள் ஊடாக சென்று கொண்டு இருக்கின்றது என்றார்.
1) புராதன காலம்
2) இடைக்காலம்
3) நவீன காலம்
மேலும் ஐரோப்பிய குடித்தொகை அனுபவங்களை ஒரு கோட்பாட்டு வடிவத்தில் பொதுமைப்படுத்தும் நோக்கில் Thomson, Notesteen போன்றோர் இக்கோட்பாட்டை வேறு நாடுகளுக்கும் பிரயோகிக்கலாம் என வாதிட்டனர். இவர்கள் உலக நாடுகளை 3 பிரிவுகளாக வகுத்துள்ளனர்.
1) நிலைமாறு காலத்திற்கு முந்திய நிலை
2) நிலைமாறு காலப்பகுதி
3) நிலைமாறு காலத்திற்கு பிந்திய நிலை
குடிவரையியல் கோட்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியவராக பேராசிரியர் O.B.Walker (1947) என்பவர் காணப்படுகின்றார். இவர் குடித்தொகை பரினாம வளர்ச்சியை 5 கட்டங்களாக இனம் காணுகின்றார்.
1) உயர்மட்ட எண்ணிக்கையில் மாற்றமுறாத கட்டம்.
2) முற்பட்ட விரிவாக்கக் கட்டம்.
3) பிற்பட்ட விரிவாக்கக் கட்டம்.
4) குறைந்த எண்ணிக்கையில் மாற்றமுறாத கட்டம்.
5) வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் கட்டம்.
(தெளிவாக தெரிவதற்கு படங்களின் மீது சொடுக்கவும்)
(தெளிவாக தெரிவதற்கு படங்களின் மீது சொடுக்கவும்)


