உலக சூழல் தினமானது வருடாந்தம் ஜுன் மாதம்
05 ஆம் திகதியன்று கொண்டாடப்படுகின்றது. 1972 ஆம் ஆண்டில் முதன்முதலாக
சர்வதேச சூழல் தினக்கொண்டாட்டமானது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.சூழல்தின நிகழ்வுகளுக்கு பொறுப்பான அமைப்பாக ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித் திட்டம்(UNEP) செயற்படுகின்றது. இவ்வருடம் 41 வது சூழல் தினம் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. சூழல் தினத்தை பல்வேறு நாடுகள் கொண்டாடுகின்ற போதிலும், ஒவ்வாரு வருடமும் விசேடமாக முதன்மைக் கொண்டாட்டத்திற்குரிய ஒரு இடம் தெரிவு செய்யப்படும். இவ்வருடம் சூழல்தினமானது விசேடமாக மொங்கோலியா நாட்டில் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சூழல்தினத்திலும் ஒரு கருப்பொருளில் அனுஸ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் இவ்வருடம் (2013) சூழல்தினத்தின் முக்கிய கருப்பொருளாக சிந்திப்போம் : உண்ணுவோம்: பாதுகாப்போம் (Think.Eat.Save) என்ற கோசத்துடன் கொண்டாடப்படுகின்றது. அதாவது 'உண்பதற்கு முன்னர் சிந்தியுங்கள் அத்துடன் சூழலைப் பாதுகாக்க உதவுங்கள்' (Think before you eat and help save our environment) என்ற அர்த்தத்துடன் "அனாவசிய உணவு வீண்விரயத்தை தவிர்ப்போம்" என்ற தொனிப்பொருளில் இது கொண்டாடப்படுகின்றது.
இவ்வருடத்தின் கருப்பொருளான சிந்திப்போம்:உண்ணுவோம்: பாதுகாப்போம் என்பது ஒரு உணவு வீண்விரயத்திற்கு எதிரானதும், உணவு இழிப்பிற்கும் எதிரான ஒரு பிரச்சாரமாகும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய தாபனத்தின் (FAO) அறிக்கைகளின் படி, ஒவ்வொரு வருடமும் 1.3 பில்லியன் தொன் அளவு உணவு வீண்விரயமாக்கப்படுகின்றது. இந்த வீண்விரயமாக்கப்படும் அளவானது உப சகாரா ஆபிரிக்கப் பிரதேசத்தின் மொத்த உற்பத்தியின் அளவிற்குச் சமனாகும். இதேவேளை உலகில் ஏழுபேரில் ஒருவர் பசியினால் இறப்பதுடன், 20000 இற்கும் அதிகமான 5 வயதை விட குறைந்த சிறுவர்கள் தினமும் உயிரிழக்கின்றனர்.
வாழ்க்கையில் இத்தகைய பெரிய ஏற்றத்தாழ்வானது சூழலில் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றது. ஆனால் இவ்வருடத்தினுடைய கருப்பொருளானது உணவினுடைய சூழல்மீதானதாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அது பற்றிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அதிகாரமளிக்கின்றது.
(FAO)அறிக்கைகளின் படி, ஒவ்வொரு
வருடமும் 1.3 பில்லியன் தொன் அளவு உணவு வீண்விரயமாக்கப்படுகின்றது. இந்த
வீண்விரயமாக்கப்படும் அளவானது உப சகாரா ஆபிரிக்கப் பிரதேசத்தின் மொத்த
உற்பத்தியின் அளவிற்குச் சமனாகும். இதேவேளை உலகில் ஏழுபேரில் ஒருவர்
பசியினால் இறப்பதுடன், 20000 இற்கும் அதிகமான 5 வயதை விட குறைந்த
சிறுவர்கள் தினமும் உயிரிழக்கின்றனர். வாழ்க்கையில் இத்தகைய பெரிய
ஏற்றத்தாழ்வானது சூழலில் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றது. ஆனால்
இவ்வருடத்தினுடைய கருப்பொருளானது உணவினுடைய சூழல்மீதானதாக்கம் பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அது பற்றிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும்
அதிகாரமளிக்கின்றது.
[Article By :- Akshayan BA (Hons) special in Geography]
(For more Details :- www.unep.org/wed )
