இந்த லாநினா நிகழ்வு மற்றும் லாநினாவிற்கு எதிர்மாறான எல்நினோ நிகழ்வு ஆகியவற்றின் உருவாக்கமும் அதனுடைய தாக்கமும் தென் பசுபிக் சமுத்திரத்திலேயே நிகழ்கின்றது. இத்தகைய எல்நினோ, லாநினா நிகழ்வுகள் உருவாகும் தென்பசுபிக் சமுத்திரத்தின் வழமையான நிலை எத்தகையது? எல்நினோ, லாநினா நிகழ்வுகள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன? அஅந்நிகழ்வுகளினால் ஏற்படுகின்ற தாக்கம் என்ன? முதலிய விடயங்களை இக்கட்டுரை ஆராய்கின்றது.
1. எல்நினோ , லாநினா வரைவிலக்கணங்கள்:-
• அறிமுகம்:- பசுபிக் சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படுகின்ற வழமைக்கு மாறான மாற்றத்தினால் உருவாகும் காலநிலை குழப்பநிலைமைகளே எல்நினோ, லாநினோ நிகழ்வுகளாகும். எல் நினோ என்பது ஸ்பானிய மொழிச் சொல்ல்லின் படி சிறு பையன் (யேசுவின் ஆண்குழந்தை) எனவும் லா நினா என்பது சிறு பெண் (பெண்குழந்தை) எனவும் பொருள்படும். எல் நினோ, லா நினா என்பன தென் பசுபிக் சமுத்திரத்தின் வெப்பநிலை சுழற்சியில் பங்கு வகிக்கும் ஒரு நிகழ்வாகக் காணப்படுகின்றது.
• எல்நினோ:- தென்அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையின் மத்திய கோட்டுப்பகுதிக்கு அருகாமையில், மத்திய மற்றும் கிழக்கு பசுபிக் சமுத்திரத்தின் வழைமையான சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலையை விட அதிகமாக அதாவது வெப்பமாகக் காணப்படும் நிலையினை எல்நினோ எனப்படுகின்றது.
• லாநினா:- தென்அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையின் மத்திய கோட்டுப்பகுதிக்கு அருகாமையில், மத்திய மற்றும் கிழக்கு பசுபிக் சமுத்திரத்தின் வழமையான சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலையிலும் பார்க்கக் குறைவாக அதாவது குளிர்ச்சியாகக் காணப்படும் நிலையினை லாநினா எனப்படுகின்றது.
2. பசுபிக் சமுத்திரத்தின் வழமையான காலநிலை தன்மை:-
• எல்நினோ லாநினா என்பனவற்றின் உருவாக்கமானது தென்பசுபிக் சமுத்திரத்தின் மேற்பகுதியிலே தோற்றம் பெறுகின்ற ஒரு நிகழ்வாகக் காணப்படுகின்றது. பசுபிக் சமுத்திரத்தில் வழமையான நிலையினை அறிந்த கொள்வதன் மூலம் எல்நினோ, லாநினா என்பவற்றின் உருவாக்கத்தினை இலகுவாக அறிந்து கொள்ளலாம். வழமையாக பசுபிக் சமுத்திரத்தின் மேற்கு கரை சமுத்திர பகுதிகளில் தாழமுக்க நிலைமையும் அதனால் அதிக மழைவீழ்ச்சியும், மாறாக கிழக்கு கரை சமுத்திரப் பகுதிகளில் உயரமுக்க நிலைமை காணப்படுவதுடன், இப்பிரதேசங்களில் குறைந்தளவான மழைவீழ்ச்சியும் கிடைக்கின்றது.
3. எல்நினோவின் உருவாக்கம்:-
• எல்நினோ நிகழ்வின் காரணமாக மேற்கு அயன பசுபிக் சமுத்திரத்தில் மேற்கிருந்து கிழக்காக சமுத்திர வெப்பநிலையானது அதிகரிக்குமாறு சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை நகர்கின்றது. இதனால் மத்திய, கிழக்கு பசுபிக் சமுத்திரத்தின் வெப்பநிலையானது அதிகரித்து வெப்பநிலைமையினை ஏற்படுத்துகின்றது. இந்நிகழ்வினால் வழமையாக பசுபிக் சமுத்திரங்களில் காணப்படுகின்ற தாழமுக்க, உயரமுக்க நிலைமைகள் இடம் மாறுகின்றன.
• குறிப்பாக பேரு கடற்கரையை அண்மித்த மேற்கு பசுபிக் பகுதியில் வழமைக்கு மாறாக தாழமுக்க நிலைமை உருவாகுவதுடன், கிழக்கு பசுபிக் பகுதியில் உயரமுக்க நிiமையும் தோன்றுகின்றது.
• மேற்கு பசுபிக் பகுதிகளில் இத்தாக்கத்திற்கு பிறகு ஈரப்பதன் குறைந்து, குறைவான மழைவீழ்ச்சியைக் கொண்ட வரண்ட நிலைமை ஏற்படுகின்றது. குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆபிரிக்கா முதலிய பகுதிகளுக்கு வரண்ட காலநிலையை ஏற்படுத்துகின்றது. அதேவேளை குறைந்த மழையைப் பெற வேண்டிய கிழக்கு பசுபிக் பகுதியானது மிதவெப்பத்துடனும், அதிக மழையையும் பெற்றுக்கொள்கின்றது.
• எல்நினோவானது 2- 7 வருட இடைவெளியில் எப்போதாவது தோன்றும். அத்துடன் இது 12-18 மாதங்கள் வரை நீடிக்கும்.
4. எல்நினோ இடம்பெற்ற காலப்பகுதிகள்:-
| 1902-1903 | 1905-1906 | 1911-1912 | 1914-1915 |
| 1918-1919 | 1923-1924 | 1925-1926 | 1930-1931 |
| 1932-1933 | 1939-1940 | 1941-1942 | 1951-1952 |
1953-1954
|
1957-1958
|
1965-1966
|
1969-1970
|
| 1972-1973 | 1976-1977 | 1982-1983 | 1986-1987 |
| 1991-1992 | 1994-1995 | 1997-1998 |
5. லாநினோவின் உருவாக்கம்:-
• லா – நினா என்பது எல்நினோவிற்கு எதிரானதாகும். எல் நினா காலப்பகுதிக்கு பின்னர் ஏற்படுவதாகவே லாநினோ காணப்படுகின்றது. இருப்பினும் இது அடுத்தடுத்து ஏற்படுவதில்லை.
• லா - நினாவானது கிழக்கு பசுபிக் பகுதியிலிருந்து மேற்கு பசுபிக் நோக்கி சமுத்திர குளிர்த்தன்மையினை நகர்த்துகின்ற நிகழ்வின்போது உருவாகின்றது. இதனால் மத்திய, கிழக்கு பசுபிக் கட்மேற்பரப்பு வெப்நிலை மிகவும் குறைவடைந்து குளிர்ச்சியடைகின்றது.
• லா-நினா வி;ன்போது வழமையான தாழமுக்க, உயரமுக்க நிலைமைகளில் தீவிரதன்மையை இது ஏற்படுத்துகின்றது. அதாவது மேற்கு பசுபிக் சமுத்திரத்தில் தீவிர தாழமுக்க நிலைமையையும், மேற்கு பசுபிக் பகுதியில் தீவிரமான உயரமுக்க நிலைமையையும் உருவாக்குகின்றது.
• லா –நினா தாக்கத்தின் காரணமாக மேற்கு பசுபிக் பகுதியில் மிதவெப்பமும், அதிக ஈரப்பதனும், அதிக மழைவீழ்ச்சியும் காணப்படுகின்ற அதேவேளை கிழக்கு பசுபிக்கில் குறிப்பாக பேரு மற்றும் ஈக்குவடோர் கடற்கரை பகுதிகளில் அதிக வரட்சியையும் குளிர்ச்சியையும் கொடுக்கும்.
• 2011 இல் இலங்கை, அவுஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ், பிறேசில் முதலிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமைகள் இந்த லா-நினா நிகழ்வினால் ஏற்பட்டதாகும்.
6. லாநினா இடம்பெற்ற காலப்பகுதிகள்:-
| 1904-1905 | 1909-1910 | 1910-1911 | 1915-1916 |
| 1917-1918 | 1924-1925 | 1928-1929 | 1938-1939 |
| 1950-1951 | 1955-1956 | 1956-1957 | 1964-1965 |
| 1970-1971 | 1971-1972 | 1973-1974 | 1975-1976 |
1988-1989
|
1995-1996
|
1998-1999
|
2010-2011
|
7. எல்நினோவின் வரலாறு:-
எல்நினோ செயற்பாடானது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். எல்நினோ பற்றிய முதலாவது பதிவு 1567 ஆம் ஆண்டு தென்னமெரிக்க மீனவர்களினால் பதிவுசெய்ய்பபட்ட குறிப்பேடுகளிலிருந்து பெறப்பட்டது.
தென்னமெரிக்க மீனவர்கள் பேரு, ஈக்குடோர், நாடுகளின் கரையோரத்தில் சமுத்திர மேற்பரப்பு நீரோட்டமானது அளவுக்கதிகமான வெப்பநிலையுடன் இருப்பதை உணர்ந்தார்கள்.
அந்த அளவுக்கதிகமான வெப்பநிலை நீரோட்டம் காரணமாக அவர்களுடைய மீன்பிடித் தொழிலானது (அஞ்சோவி - யுnஉhழஎல) பெரும் வீழ்ச்சியடைந்தது. அதே காலப்பகுதியில் கடும் மழை காரணமாக பேரு நாட்டின் விவசாயத்துறையும் பெரும் நஸ்டமடைந்தது.
பேரு, ஈக்குவடோர் நாடுகளின் கரையோரத்தில் பசுபிக் சமுத்திர மேற்பரப்பு நீரோட்டத்தின் திடீர் வெப்பநிலை உயர்வும் அதைத் தொடர்ந்து வரும் காலநிலை சீர்கேடும் அனேகமாக கிறிஸ்மஸ் பண்டிகைக் காலங்களில் தோன்றுவதனால், அந்தக் காலநிலை மாற்றத்திற்கு எல்நினோ என்று பெயரிட்டனர்.
எல்நினோ எனும் ஸ்பானிய மொழிச் சொல்லின் அர்த்தம் 'கிறிஸ்துவின் குழந்தை' என்பதாகும்.
[Article By :- Akshayan BA (Hons) special in Geography , MA in Geogrphy]
References:-
http://www.shrimpnews.com/FreeReportsFolder/WeatherFolder/ElNino.html
http://www.elnino.noaa.gov/
http://www.wikipedia.org




