தென்சூடான் என்ற புதிய நாடு - 2011

             
உலகின் இருண்ட கண்டம் என அழைக்கப்படுவது ஆபிரிக்கா கண்டம் ஆகும். ஆபிரிக்காவிலேயே உலகில் மிகவும் பெரிய பாலைவனமான சகார பாவைனமும், உலகிலேயே மிகவும் நீளமான நதியான நைல் நதியும் (கிளைநதிகளுடன் ஒப்பிடுகின்றபோது அமேசன் நதியே தற்போது பெரியது எனப்படுகின்றது.) காணப்படுகின்றது.


உலகிலேயே வரட்சி, வறுமை, பட்டிணி , உள்நாட்டு யுத்தங்கள் உனப் பல்வேறு பட்ட இன்னல்களைத் தொடர்ச்சியாக கொண்ட ஒரு கணடமாகவே ஆபிரிக்கா காணப்படுகின்றது. சனத்தொகைவளர்ச்சி அதிகம், ஆனால் ஆயுள்காலம் குறைவு என சமூக பொருளாதார நிலைமைகளிலும் பின்தங்கிய பலநாடகள் வேறு கண்டங்களுடன் ஒப்பிடுகின்றபோது ஆபிரிக்காவில் காணப்படுகின்றன. ஆபிரிக்காவின் வடக்கில் அமைந்துள்ள நாடான லிபியா அண்மையில் யுத்தம் வெடித்து இறுதியில் கடாபியின் சாவுடன் அந்நாடு கிளர்ச்சிப் படைகளினால் தற்போது ஆளப்பட்டு வருகின்றது. இருந்தும் கடாபி ஆதரவுப் படைகள் மீண்டும் அங்கு தாக்குதல் சிலவற்றை இடையிடையே தொடுத்துக்கொண்டே இருக்கின்றன. அதே போன்று சோமாலியா நாட்டில் கடும்வரட்சி காரணமாக பட்டிணியால் மக்கள் இறந்துகொண்டிருக்கின்றார்கள். சர்வதே சாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகளைக்கூட அங்குள்ள கிளர்ச்சி அயுதக் குழுக்கள் மக்களை சென்றடைவதில் தாக்கத்தை செலுத்துகின்றன. இவ்வாறு நிலைமை இருக்கின்ற அதேவேளை கடந்த 2011 இல் சூடான் என்ற தனிநாட்டிலிருந்து பிரிந்து தென்சூடான் எனும் புதிய நாடு ஆபிரிக்க கண்டத்தில் உதயமாகியுள்ளது.

தென்சூடான் சூடானிலிருந்து பிரிந்து தனிநாடாக மாறியதுடன், மற்றைய பகுதி தற்போது வடசூடான் எனவும் அழைக்கப்படுகின்றது.  ஐக்கிய நாடுள் சபையில் தென்சூடான் 193 ஆவது நாடாக அங்கத்துவம் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 2008 ஆம் ஆணண்டுகளில் ஐரோப்பா கண்டத்தில்  சேபியாவிலிருந்து கொசோவோ என்றஒரு நாடு விடுதலை பெற்று 192 ஆவது நாடாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.