Home » » புவியியல் வெளிவாரி மாணவர்களுக்கான தொலைதூர வகுப்பு

புவியியல் வெளிவாரி மாணவர்களுக்கான தொலைதூர வகுப்பு

பேராதனைப் பல்கலைக் கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முதலியவற்றில் வெளிவாரியாக பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களின் நன்மை கருதி  எமது கல்வி நிலையத்தில் புவியியல் பாடத்திற்கான வழிகாட்டல் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

அந்தவகையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும்,  தொலைதூரத்திலுள்ள மாணவர்களின் நன்மை கருதி  வீட்டில் இருந்தவாறே தொலைத் தொடர்பு சாதனங்களின் துணையுடன் மட்டுப்படுத்தப்பட்ட புவியியல் வழிகாட்டல் வகுப்புக்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன. 

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த எமது சேவையினூடாக இணைந்து கொள்ள முடியும்.   

வகுப்பிற்காக கட்டணம் அறவிடப்படாமல் இலவச சேவையாகவே எமது கல்வி நிலையம் இதனை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. ஆனால் தொலைபேசி சேவைக்காக பயன்படுத்தப்படும் எயார்டெல் வரையறையற்ற அழைப்புச் சேவையானது (ரூபாய் 98 இற்கு)  நிறுத்தப்படுமானால் அது தொடர்பில் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். 

வகுப்பானது நடைபெறும் முறை

வீட்டில் இருந்தவாறு குரல்வழித் தொலைத் தொடர்பின் மூலம் பாடரீதியான வழிகாட்டல்கள் வழங்கப்படும். 

5 பேர்கொண்ட குழுக்களாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்பு நடைபெறும். 

ஒவ்வொரு மாணவர்களும் தத்தமது வீட்டில் இருந்துகொண்டே இந்த வகுப்பில் கலந்துகொள்ள முடியும். 

மாணவர்கள் எயார்டெல் சேவை வழங்குநரின் சிம் அட்டை இலக்கமொன்றை  வைத்திருப்பதுடன், வாட்ஸ்ஆப் இணைப்பொன்றையும் வைத்திருத்தல் அவசியமாகும்.

குரல்வழி அழைப்பிற்காக எயார்டெல் பயன்படுத்தப்படுவதுடன், ஒரு சில மேலதிக பாடரீதியான ஆவணங்களை பரிமாறிக் கொள்வதற்காக வாடஸ்ஆப் பயன்படுத்தப்படும். 

வகுப்பு வேளையானது பெரும்பாலும் மாலை 7.00 - 9.00 மணிக்கு  இடைப்பட்டதாக இருக்கும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இத்தகைய வகுப்பு நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தமது சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு அன்றைய வகுப்பிலேயே தெளிவடைந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும்.



வகுப்பில் எவ்வாறு இணைந்து கொள்வது?

எமது தொலைதூர புவியியல் வகுப்பில் இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் எம்மால் வழங்கப்படும் மின்னஞ்சல் முகவரிக்கு பின்வரும் விபரங்களை உள்ளடக்கி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவேண்டும்.

மின்னஞ்சல் கிடைத்தவுடன், குழுக்களாக்கப்பட்டு அதன் பின்னர் வகுப்புக்கள் தொடர்பான விபரம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களை மாத்திரமே இணைத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளமையால் எதிர்வரும் 30.10.2019 வரையில் பதிவுசெய்துகொள்ளவும்.

பின்வரும் விடயங்களை உள்ளடக்கி   marimuththan@gmail.com  எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உமது தகவல்களை அனுப்பி வைக்கவும்.


(1) Full Name:
(3) District:
(4) Whatsapp Number:
(5) Airtel Mobile  Number:
(6) 1st Year/ 2nd Year/ 3rd Year?




மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக மேலேயுள்ள மின்னஞ்சல் முகவரிக்கூடாகத் தொடர்புகொள்ளவும். 




(உங்களுடைய வழமையான தொலைபேசி இலக்கம் வேறு ஏதாவது அதாவது டயலொக், மொபிடெல், ஹட்ச; ஆகிய ஏதாவது இருந்தாலும், குறிப்பிட்ட வகுப்பு நேரத்தில் மாத்திரமாவது எயாடெல் பாவிக்கவேண்டும், ஏனெனில் தற்போது இலவச வரையறயற்ற அழைப்பு வசதி காணப்படுகின்றமையால் எம்மால் அழைப்புக்களை எடுக்க இலகுவாகவிருக்கும் என'ற காரணத்தினாலேய எயார்டெல் இலக்கம் பயன்படுத்தபடுகின்றது. இதன்மூலம் எமக்கும் மாணவர்களுக்கும் மேலதிக செலவீனம் குறைத்துக் கொள்ளப்படும்)


0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY IN TAMIL | TLC-Downloads | TLC-Files
Copyright © 2006-2019. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger