நிலப்படத்தின் (MAP) சில குறியீடு மாற்றங்கள்

இலங்கை நிலவளவைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்படுகின்ற 1:50000 இடவிளக்கவியல் படங்களின் குறியீடுகளில் ஒரு சில குறியீடுகள் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. எனவே இனிவரும் காலங்களில் நிலவளவைத் திணைக்களத்தினால் வெளியிடப்படும் படங்களில் இப்புதிய குறியீடுகளே பழைய குறியீடுகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும். 


மாற்றங்களுக்குட்பட்ட குறியீடுகள்
1.     A  தரத்து வீதியின் கிலோமீற்றர் தூண் குறித்தல்  (தூன் அமைந்துள்ள               இடத்தில் கறுப்பு நிறப் புள்ளி இடப்பட்டுள்ளது.)
2.     கட்டப்பட்ட பிரதேசம்  (மெல்லிய நிறமாக மாற்றப்பட்டுள்ளது.)
3.     சம ஆழக்கோடு  (பெறுமதி காட்டப்பட்டுள்ளது)
4.     வரலாற்றுப் பிரதேசம்  (நிறயம் கறுப்பாக மாற்றப்பட்டுள்ளது)
5.     கற்சுரங்கம் (குறியீடு சற்று மாற்றப்பட்டள்ளது)
6.    நகரசபை எல்லை, மாகாண சபை எல்லை (குறியீடு மாற்றப்பட்டுள்ளது)
7.    தாவரங்கள் (புல்வெளி, கண்டல், பற்றை, காடு என்பவற்றின் குறியீடுகள்        மாற்றப்பட்டுள்ளது)


மாற்றப்பட்ட குறியீடுகளைக் கொண்ட படம்.



பழைய நிலப்படக்(Map) குறியீட்டினைக் காண்பதற்கு இங்கே அழுத்தவும்.