கப்பல் கட்டும் கைத்தொழில்

சர்வதேச வர்த்தகத்தில் பொருட் பரிமாற்றத்தின்போதும் மீன்பிடி நடவடிக்கையின்போதும் அவசியமான சிறியளவு முதல் பாரியளவிலான கப்பல் வரையான கப்பல் உற்பத்தி இதன்கீழ் இடம்பெறும். யுத்தக்கப்பல், அணைத்து வசதிகளை கொண்ட கப்பல், பெற்றோலிய பொருட்களை ஏற்றி இறக்கும் கப்பல், பொருட்களையும் ஆட்களையும் ஏற்றி இறக்கும் கப்பல் போன்ற பலவகை கப்பல்களை உற்பத்தி செய்கின்றது.


1)            கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபடும் நாடுகள்:-
•             யப்பான், சீனா, தென்கொரியா, சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராட்சியம், ஜேர்மனி, சுவீடன், டென்மார்க், நெதர்லாந்து, பிரான்ஸ், ரய்யா, இந்தியா, நோர்வே.
•             பிரித்தானியா, அமெரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் ஆரம்ப காலங்களில் முதன்மை வகித்ததுடன் தற்காலத்தில் ஜப்பான், சீனா, தென் கொரியா, தாய்வான் உட்பட பல்வேறு நாடுகள் இக்கைத்தொழிலில் ஈடுபடுகின்றது.

2)            கப்பல் கட்டும் தொழிலுக்கு சாதகமான காரணிகள்:-
•             துறைமுக வசதி - கப்பல் கட்டும் தொழிலில் துறைமுக வசதி கொண்ட கடற்கரையோரங்கள் சாதககமானவையாகக் காணப்படுகின்றன. இதனால் கப்பல் கட்டும் கைத்தொழிலில்  ஈடுபடும் நாடுகள் கப்பல்கள் திரித்து நிற்கக் கூடியதும், செல்லக்கூடியதுமான உள்நாட்டு நீர் நிலைகளையும், துறைமுக்களையும் கொண்டிருக்கின்றன. ய்பபானில் டோக்கியோ, நகோயா போன்ற துறைமுகங்களும்  அமெரிக்காவில் பிலடெல்பியா, பால்ரிமோர் துறைமுகங்களும்  பிரித்தானியாவில் கிளாஸ்கோ , இந்தியாவில் விசாயகப்பட்டினம் போன்ற துறைமுகங்களையும் குறிப்பிடலாம்.
•             இரும்புருக்கு மையங்கள் காணப்படுதல் - கப்பல்களுக்குத் தேவையான உருக்குத்தகடுகள், தண்டவாளங்கள், பாரப்பொறிகள், இயந்திரங்கள் முதலியவற்றை இரும்புருக்குத் தொழிற்சாலைகளில் இருந்து பெறுவதற்காக அவற்றுக்கு அருகாமையில் கப்பல் கட்டும் துறைமுக்கள் அமைந்துள்ளன. உதாரணமாக டோக்கியோ, யொக்ககாமா கப்பல் கட்டும் துறைமுகங்கள், பிற்ஸ்பேக், பவுலோ ஆகிய பிரதேசங்களுக்கருகாமையில் இரும்புருக்கு மையங்கள் அiமெரிக்காவிலும் உள்ளன.
•             தொழிலாளர் வசதி தொழில்திறன் மிக்க தொழிலாளர் வசதி கப்பல் கட்டும்தொழிலுக்கு இன்றியமையாத ஒன்றாகும். இயந்திரவியலில் ஏற்பட்ட விருத்தி கப்பல் கட்டும் தொழிலை சிக்கலாக்கி விட்டது. அதனால் கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபடுத்தவதற்கு பொறியியல் துறையில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களைக் கொண்டிருக்கின்ற நாடு கப்பல் கட்டும் தொழிலில் முன்னேறி வருகின்றது. உதாரணமாக யப்பான். ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழிநுட்ப அறிவுடைய தொழிலாளாகளை அதிகளவில் கொண்டுள்ளது.
•             துணைக் கைத்தொழில் விருத்தி ஒரு பாரிய கப்பலை அமைப்பதற்கு பல்வேறு துணைக் கைத்தொழில்களும் விருத்தி பெற்றிருக்க வேண்டும். துணைப்பொறிகள்,கொதிகலன்கள், சில்லுகள், அச்சுகள், கயிறு சுற்றும் அச்சாணிகள் , பம்பிகள், மின்னியற் பொறிகள், வடங்கள், கிறுகள், தளபாடங்கள் என்பனவும் தேவைப்படுவதால் இத்துறை சார்ந்த கைத்தொழில் துறைகளும் விருத்தி பெற்றிருத்தல் வேண்டும். யப்பானில் இலத்திரணியல் தொழில் மற்றும் ஏணைய கைத்தொழில் துறைகளும் மிக உச்ச அளவில் விருத்தியடைந்திருக்கின்றன.
•             மூலதன வசதி கப்பல் கைத்தொழில் அதிக மூலதனம் அவசியமான கைத்தொழிலாகும். இதனால் இக்கைத்தொழிலுக்கு அரச ஆதரவு அவசியமாகும். உயர் வருமானம் கொண்ட பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இது தொடர்பாக அடிப்படை மூலதனத்தை இட்டுள்ளது. ஜப்பான், இந்தியா போன்றவற்றிற்கு முதலிடும் சக்தி உள்ளமையினால் கப்பல் கட்டும் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. பொருளாதாரத்தில் பலவீனமான நாடுகள் இக்கைத்தொழிலில் ஈடபடுவது இல்லை. இவற்றினால் மேற்கூறிய மூலதனத்தை முதலிட முடியாமையால் ஆகும்.
•             வரட்சியான காலநிலை - காலநிலை காரணியில் முக்கியமானது நீண்ட காலமாக நீர் கிடைக்கா வண்ணம் வரட்சியாக இருப்பது கப்பல் கைத்தொழிலுக்கு முக்கியமானது.
•             யுத்தக்கப்பல், அணைத்து வசதிகளை கொண்ட கப்பல், பெற்றோலிய பொருட்களைஏற்றி இறக்கும் கப்பல், பொருட்களையும் ஆட்களையும் ஏற்றி இறக்கும் கப்பல் போன்ற பலவகை கப்பல்களை உற்பத்தி செய்கின்றனர்.


3)            கப்பல் கட்டும் தொழிலில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள்:-
•             யப்பான் மற்றும் அமெரிக்கா என்பன முதன்னிலை உற்பத்தி நாடுகளாக விளங்குகின்றன.
•             உதிரிப்பாகங்கள் வேறு இடங்களில் செய்யப்பட்டு பாரிய துறைமுகக் கட்டடங்களில் பொருத்தப்படுகின்றமை.
•             புதிய நாடுகளின் போட்டி. ( N.I.C. நாடுகள்)
•             பல்வேறு மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படல். (கண்ணாடி இழை, மரம், அலுமினியம், இறப்பர், பிளாஸ்டிக்)
•             யுத்தம் மற்றும் போக்குவரத்து விருத்தி காரணமாக சர்வதேச சந்தையில் கப்பல்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

•             உற்பத்திச் செலவு அதிகரித்துச் செல்கின்றது.