இலங்கையின் கைத்தொழில்கள்

வளங்களை பயன்படுத்தி மனிதருடைய தேவையை நிறைவு செய்வதற்கு மனித தலையீட்டினால் மேற்கொள்ளப்படும் பொருளாதார முயற்சி கைத்தொழில் என வரைவிலக்கணப்படுத்தலாம்.  ஆரம்ப காலத்தில் விவசாயத்தை மையமாக கொண்டு விளங்கிய பொருளாதாரம் இன்று கைத்தொழில் துறைக்கு கூடிய முக்கியத்தம் கொடுப்பதை அவதானிக்க முடியும். இலங்கையின் கைத்தொழில் துறையினைப் பல பிரிவுகளாகப் பாகுபடுத்தலாம்.


•             செயற்பாடுகளின் அடிப்படையில் இலங்கையின் கைத்தொழிலை மூலப்பொருள் அகழ்வு, உற்பத்தி, சேவை எனப்பாகுபடுத்தலாம்.
•             கைத்தொழில் உற்பத்திகளின் மூலதனம் முதலிவற்றை அடிப்படையாகக் கொண்டு பேரளவுக் கைத்தொழில், இடைநிலைக் கைத்தொழில், சிற்றளவுக் கைத்தொழில் எனப் பாகுபடுத்தலாம்.

தற்போதைய நிலையில் இலங்கையில் முக்கியத்துவம் பெறுகின்ற கைத்தொழில்களாக சீமெந்துக் கைத்தொழில், சீனிக் கைத்தொழில்ஆடைக் கைத்தொழில், இறப்பர் பிளாஸ்டிக் சார் கைத்தொழில்,   பாரம்பரிய கைப்பணி கைத்தொழில் என்பவற்றைக் குறிப்பிடலாம்.


1)            சீமெந்து கைத்தொழில்
•             இலங்கையின் கைத்தொழிலில்களில் சீமெந்துக் கைத்தொழில் முக்கியமானதொன்றாகும். 1950 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைப் பிரதேசத்தில் முதன்முதலாக சீமெந்துத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. டோக்கியோ, மிற்சுயி, நிப்போன், கால்கைம் முதலிய நிறுவனங்கள் சீமெந்து உற்பத்தியில் ஈடுபடுகின்றன.


2)            சீமெந்துக் கைத்தொழில் நடைபெறும் பிரதேசங்கள்
•             காலி, புத்தளம், திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் சீமெந்துத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
•             கொல்கைம் நிறுவனத்தின் சீமெந்து ஆலை காலி(உணவட்டுன), புத்தளம்(பாலாவி) ஆகிய மாவட்டங்களில் அமைந்து காணப்படுவதுடன், டோக்கியோ சீமெந்து ஆலையானது திருகோணமலையில் (சீனன்குடா) அமைந்துள்ளது.
•             கடந்த 15 வருடங்களாக இயங்காத நிலையில் இருந்து வந்த யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை சீமெந்து ஆலையானது தற்போது மீண்டும் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

3)            சீமெந்து கைத்தொழிலுக்கு சாதகமான காரணிகள்

•             மூலப்பொருள் வசதி - மூலப்பொருள் வசதி சீமெந்துக் கைத்தொழிலுக்கு அடிப்படையான காரணியாகக் காணப்டுகின்றது. சீமெந்துக் கைத்தொழிலின் மூலப்பொருளாக பிரதானமாக சுண்ணக்கல் காணப்படுவதுடன், கல்சியம், சிலிக்கன், இரும்பு மற்றும் களி முதலிய பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. சீமெந்துக்குரிய பிரதான மூலப்பொருளான சுண்ணக்கல் பெறக்கூடிய இடங்களுக்கருகாமையில் தொழிற்சாலைகள் அமையும்போது போக்குவரத்து செலவு குறைவடைதல், பொருள் பழுதுபடாதிருத்தல் ஆகிய அனுகூலங்கள் கிடைக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் புத்தளம் தொடக்கம் முல்லைத்தீவு வரையுள்ள கரையோரப் பகுதிகளில் சுண்ணக்கல் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட காங்கேசன்துறை ஆலையானது அவ்வாறு மூலப்பொருளை அருகிலே கொண்டுள்ளது. புத்தளத்தில் உள்ள ஆலையும் ஆருகாமையில் சுண்ணக்கல்லை கொண்டுள்ளது. திருகோயமலை, காலி ஆகிய பிரதேசத்திலுள்ள ஆலைகள் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலிருந்து சுண்ணக்கல்லை பெற்றுக்கொள்கின்றன.

•             போக்குவரத்து வசதி -போக்குவரத்து வசதியும் சீமெந்துக் கைத்தொழிலின் விருத்திக்கு பங்களிப்பு செய்யும் காரணிகளுள் ஒன்றாகும். காலி, திருகோணமலை ஆகிய சீமெந்து ஆலைகள் துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு வீதி வலையமைப்பு வசியுடன் காணப்படுகின்றன. கடல்வழிமூலம் மூலப்பொருட்களை ஏற்றியிறக்குவதற்கும், முடிவுப்பொருளை சந்தைப்படுத்தவதற்கும் இத்தகைய துறைமுக வசதி சாதகமாகவுள்ளது. இலங்கையின் விருத்தி பெற்ற பெருந்தெருக்களின் தன்மையும் இலகுவாக மூலப்பொருட்களை கொள்கலன்கள் மூலம் பெற்றுக்கொள்வதற்கும், முடிவுப்பொருளை நாட்டின் பல பாகத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் துணைபுரிகின்றது.

•             சந்தைவாய்ப்பு - சந்தை வசதியும் சீமெந்துக் கைத்தொழிலின் விருத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தனியாரது அமைவிடங்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக உள்நாட்டிலேயே பெருமளவில் கேள்வி காணப்படுகின்றது. குறிப்பாக அண்மைக்காலங்களில் இடம்பெற்றும் வீதி புனரமைப்பு, புதிய அதிவேக பாதைகளை அமைத்தல், துறைமுகங்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக அதிகளவில் சீமெந்து பயன்படுத்தவேண்டிய தேவை உள்ளது. மேலும் தனிநபர் வீடுகளை அமைத்தல், வீட்டு உபகரண உற்பத்தி போன்ற தேவைகளுக்காகவும் சீமெந்தின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இதனால் சமேந்திற்கரிய கேள்வி உள்நாட்டிலேயே அதிகரித்து வருகின்றது.

•             மூலதனம் - மூலதன வசதியும் சீமெந்துக் கைத்தொழில் விருத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றது. குறிப்பாக இயந்திர சாதனங்களை கொளாவனவு செய்தல், தொழிற்சாலை நிர்மாணித்தல், போக்குவரத்து வாகனங்களை கொள்வனவு செய்தல், ஆரம்ப தொழிலாளர் செலவுகள் போன்ற பல்வேறு தேவைகளுக்காக பெருமளவில் மூலதனம் தேவைப்படுகின்றது. அந்தவகையில் இலங்கையில் சீமெந்து உற்பத்தியில் பெரும்பாலும் வெளிநாடுகள் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டோக்கியோ சீமெந்து ஆலையில் யப்பான் முதலீடு செய்துள்ளது.

•             அரசகொள்கை -இலங்கையின் சீமெந்துக் கைத்தொழில்துறை வளர்ச்சியில் பொருத்தமான அரசகொள்கை காணப்பட்டமையும் சீமெந்துக் கைத்தொழிலின் விருத்திக்கு பங்களித்துள்ளது. 1950 இல் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் அமையப்பட்டுள்ளதுடன் 1955 இல் அரச அனுசரணையுடன் கூட்டுத்தாபனமாகவும் 1957 இல் கைத்தொழில் கூட்டுத்தாபனத்தின் கீழ்கொண்டுவரப்பட்டது.  தற்போது கைத்தொழில் அமைச்சினால் நடத்தப்படுகின்றது.

•             தொழிலாளர்வசதி - பயிற்சி பெற்ற தொழிலாளர் மற்றும் தொழிநுட்பவியாலளர்களின் தேவையும் சீமெந்துக் கைத்தொழிலின் விருத்தியில்; செல்வாக்குச் செலுத்துகின்றது.

4)            சீமெந்து கைத்தொழிலின் சமகால வேறுபாடு
•             சூழல் மாசடைதலை குறைப்பதற்கு மரஉற்பத்திக்காக சீமெந்துடன் தொடர்புடைய உற்பத்திகளை பயன்படுத்தல்.
•             உள்நாட்டின் உற்பத்தியை பார்க்கிலும் மேலதிகமாக சீமெந்து இறக்குமதி காணப்படுகின்றது.
•             வியாபார பெயரை அடிப்படையாக கொண்டு வியாபார நடவடிக்கை வளர்ச்சியடைதல். உதாரணம் - கோல்சிம்
•             வௌ;வேறு அளவில் வௌ;வேறுவகை தேவைக்கேற்ப சீமெந்தை அறிமுகப்படுத்தல். உதாரணம் - சாந்து பூசுதல், டைல்ஸ் என்பன
•             சமகால உற்பத்தி பல்லினமானவை. உதாரணம் - பல்வேறுவகையான பொருளுற்பத்தி.





5)            சீனிக் கைத்தொழில்
•             இலங்கை மக்களின் அன்றாட உணவுகளில் சீனியும் முக்கியமாக காணப்படுகின்றது. தேனீர், இனிப்பு பண்டங்கள், மாச்சில் (பிஸ்கட்), அணிச்சல்(கேக்) முதலிய பல உணவுகளில் சேர்க்கப்படுகின்றது.
•             சீனி உற்பத்தியில் இடைக் கைத்தொழில்களாக பல்வேறு கைத்தொழில்கள் (மதுபானம், வாசனைபொருள்) உருவாகியுள்ளன.


6)            சீனிக் கைத்தொழில் நடைபெறும் பிரதேசங்கள்
•             கந்தளாய் (திருகோணமலை), பெல்வத்தை (மொனறாகலை)செவணகல (மொனறாகலை)கிங்குறாணை (அம்பாறை)
•             கந்தளாயில் 1960 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட முதல்தர சீனித்தொழிற்சாலையானது 1994 கள் வரை இயங்கிய நிலையில் கைவிடப்பட்டு காணப்பட்டது. கடந்த (2014) பாகிஸ்தான் நாட்டின் உதவியுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருந்தது.
•             ஹிங்குறாணை சீனித் தொழிற்சாலையானது 15 ஆண்டுகள் இயங்காத நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இயங்கத் தொடங்கியது.


7)            சீனிக் கைத்தொழிலுக்கு சாதகமான காரணிகள்
•             மூலப்பொருள் வசதி சீனிக் கைத்தொழிலுக்குரிய மூலப்பொருளாக கரும்பு காணப்படுகின்றது. இலங்கையில் வரண்ட பிரதேசங்களில் கரும்புப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. திருகோணமலை, அம்பாறை, மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் கரும்பு வயல்கள் காணப்படுகின்றன. இவற்றை விட கிளிநொச்சி போன்ற இடங்களிலும் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே தொழிற்சாலைகள் அமையப்பெற்றுள்ள இடங்களுக்கருகாமையிலே மூலப்பொரளான கரும்பு காண்ப்படுகின்றமை முக்கியமானதாகும். கரும்பு தவிர சில தொழிற்சாலைகளில் குறிப்பாக தற்போது கிங்குராணை சீனி உற்பத்தி ஆலையில் இந்தியாவிலிருந்து கற்கண்டு பெறப்பட்டு அதிலிருந்து சீனி தயாரிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

•             போக்குவரத்து வசதி மூலப்பொருட்களை ஏபெற்றுக்கொள்வதற்கும் முடிவுப்பொருளை சந்தைக்கு கொண்டு செல்லுவதற்கும் பெரும்பாலும் கனரக வாகனஙகள், பாரஊர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையின் வீதிகள் பெரும்பாலும் காபட்இடப்பட்டு காணப்படுகின்றமையும் இலகுவானதும் துரிதமானதுமான போக்குவரத்திற்கு வழிவகுக்கின்றது.

•             சந்தை வாய்ப்பு இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சீனிக்கு உள்நாட்டிலேயே சந்தை காணப்படுகின்றமையானது சாதகமான காரணியாக அமைகின்றது. இலங்கையின் உள்நாட்டு நுகர்விற்கு போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாமையால் மேலதிகமாக பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் சீனியை இறக்குமதி செய்கின்ற நிலைமை காணப்படுகின்றது. எனவே உள்நாட்டு சந்தையை பூரணப்படுத்தக்கூடியளவிற்கு உற்பத்தியை மேற்கொள்வதற்கு சந்தை வசதி காணப்படுகின்றது.

•             தொழிலாளர் வசதி - தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு சாதாரண தொழிலாளர்களும், பயிற்சி பெற்ற இயந்திர இயக்குனர்களும், தொழிநுட்பவியலாளர்களும் தேவைப்படுகின்றனர். அந்தவகையில் குறைந்த கூலியில் தொழிலாளர்களை பணியிலமர்த்த முடிவதுடன், பயிற்சி பெற்ற தொழிலாளர்களையும் குறிப்பிட்ட பிரதேசங்களில் பெற முடிகின்றது.

•             அரச கொள்கை – 1957 இல் இலங்கை சீனி கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்டு கந்தளாய், ஹிங்குரான ஆகிய தொழிற்சாலைகள் அதன்கீழ் கொண்டுவரப்பட்டது. 1977 இன் பின் தனியார் துறையில் கைத்தொழில் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. கரும்பு உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசுஇறக்குமதி செய்யப்படும் சீனி தொடர்பாக வரி அறவிடுவதுடன், மானியங்களையும் வழங்கி வருகின்றது.

8)            சீனிக் கைத்தொழிலின் அண்மைக்கால மாற்றங்கள்
•             ஆரம்ப காலங்களில் இலங்கை சீனி கூட்டுத்தாபனத்தின் கீழும் பின் தனியார் துறையின் கீழும் சீனி தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.
•             கரும்பு உற்பத்திக்காக காடு மற்றும் ஒதுக்குப் பிரதேசங்கள் தெரிவு செய்யப்படுவதனால் காட்டு விலங்குகளின் நடமாட்டத்தில் இடையூறுகள் தோற்றம்பெற்றறுள்ளதுடன், யானை போன்றவற்றின் அச்சுறுத்தல்களுக்கும் வழிவகுக்கின்றது.
•             மூலப்பொருளாக கரும்புக்கு பதிலாக கற்கண்டை இறக்குமதி செய்து அதிலிருந்து சீனி உற்பத்தி செய்கின்ற நிலைமை தற்போது சில தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.
•             இயங்காத நிலையில் செயலிழந்து காணப்பட்ட தொழிச்hலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. கிங்குராணை தொழிற்சாலை கடந்த 2012 ஆம் அண்டில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதுடன், கந்தளாய் தொழிற்சாலை எதிhவரும் 2015 ஆம் ஆண்டிற்குள் இயங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
•             உள்நாட்டில் சீனித்தேவை அதிகரித்துள்ளமையாலும், தற்போதுள்ள உற்பத்தி போதாமையாலும் மேலதிகமாக தேவைப்படும் சீனியை இறக்குமதி செய்கின்ற போக்கு காணப்படுகின்றது.


9)            ஆடைக் கைத்தொழில்
•             இலங்கை கைத்தொழில்துறையில் நடைமுறையில் முன்னணி வகிப்பது ஆடைக் கைத்தொழிலாகும்.  திற்நத பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்ட்ட பின் ஆடை தொடர்பாக இலங்கை பிரதான நாடாகியது.


10)          ஆடைக் கைத்தொழில் இடம்பெறும் பிரதேசங்கள்
•             இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் ஆடைக் கைத்தொழில் இடம்பெறுவதுடன், குறிப்பாக முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களினுள் பெரும்பாலும் அமைந்து காணப்படுகின்றன.
•             மாவத்தகமை, பொல்காவலை, மிரிகமை, கட்டுநாயகா, பியகம, கொறணை, சீதாவக்கை, கொக்கலை, மல்வத்தை, மல்வத்தை, வத்துபிடிவெல, கண்டி போன்ற பகுதிகளில் அமைந்துள்ள ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்களில் அதிகளவிலான உற்பத்தி நடைபெறுகின்றது.

11)          ஆடைக் கைத்தொழிலுக்கு சாதகமான காரணிகள்

•             தொழிலாளர் வசதி - இலங்கையின் ஆடைக் கைத்தொழிலின் இiஅமைவில் செல்வாக்குச் செலுத்துகின்ற பிரதான காரணியாக இருப்பது தொழிலாளர் வசதி ஆகும். குறைந்த செலவிலும், பயிற்சி பெற்றதுமான தொழிலாளர்களை இலங்கையில் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.
•             சந்தை வசதி - இலங்கையின் ஆடைகள் தரமானதாகையால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு காபணப்படுகின்றது. கடந்த  தசாப்தங்களில் இலங்கையின் ஆடைகளுக்கு ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் பெரும் கேள்வி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
•             போக்குவரத்து வசதி - இலங்கையில் துறைமுகவிருத்தி, பிரதான வீதிகளின் விருத்தி என்பனவும் தொழிலுக்கு தேவையான போக்குவரத்து வசதிக்கு வழிவகுக்கின்றது.
•             முதலீடு ஆடைக்கைத்தொழிலில் பெரும்பாலும் வெளிநாட்டு முதலீடகள் இடம்பெறுகின்றன. முதலீட்டாளர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி நிலம் என்பன அருகிலேயே பெற்றுத்தரப்பட்டுள்ளது.
•             அரசகொள்கை - சுதந்திரத்தின் பின் ஏற்டபட்ட அரசு இலங்கையின் ஆடைக் கைத்தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு செயற்பாடுகளை கொண்டு வந்துள்ளது. கொழும்பு பெரும்போக பொருளாதார ஆணைக்குழு 1978 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு கட்டுநாயக, பியாகம என்பன ஏற்றுமதி வலயமாக அமைக்கப்பட்டது.1992 இல் கொழும்பு பெரும்போக பொருளாதார ஆணைக்குழுவை பரவலாக்க இலங்கை முதலீட்டாளர் சபையை அமைத்தல். 1994 இன் பின்னர் அரசு பல்வேறு பெயர்களில் கைத்தொழிலைப் பரவலாக்கி ஆடைக்கைத்தொழிலை வலுவூட்டியது.


12)          ஆடைக் கைத்தொழிலின்  சமகால மாற்றங்கள்
•             1962 ஆடைக்கைத்தொழிலில் குடியிருப்பை அமைத்தமை.
•             1978 - சுதந்திர வர்த்தக வலயம் அமைத்தமை
•             1992 - 200 ஆடைக்கைத்தொழில் வேலைத்திட்டம்
•             1995 - கைத்தொழில் பூங்கா ஆரம்பம்
•             1996 - கைத்தொழில் நகரம் ஆரம்பம்
•             2006 - கிராமத்துக்கு கைத்தொழில் வேலைத்திட்டம்
•             வியாபார கண்காட்சியை ஏற்படுத்தி மற்றொரு சந்தையை தேடுதலைக் காண முடியும்.
•             ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை ஐரோப்பிய நாடுகளினால் நீக்கப்பட்டுள்ளமையால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.



13)          இறப்பர், பிளாத்திக்கு சார் கைத்தொழில்
•             இறப்பர் உற்பத்தியில்ஒரு சந்தர்ப்பத்தில் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் அதே வேளை மற்றொரு சந்தரப்பத்தில் முடிவு பொருள் உற்பத்தி இடம் பெறுகின்றது. மூலப்பொருளாக இறப்பரை உற்பத்தி செய்யும் கைத்தொழில் இறப்பர் பயிரிடும் நிலத்தின் அருகிலும் முடிவுப்பொருள் உற்பத்தி செய்யும் கைத்தொழிற்சாலை கைத்தொழில் பிரதேசங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளது.
•             இறப்பருடன் இணைந்து செல்லும் கைத்தொழில் பிளாத்திக் கைத்தொழில், கனிய எண்ணெய்யின் உப தொழிலாக பிளாத்திக் உற்பத்தி இடம் பெறுகின்றது.


14)          இறப்பர், பிளாஸ்டிக் கைத்தொழில் விருத்திக்கு சாதகமான காரணிகள்

•             மூலப்பொருள் வசதி - இறப்பர் உற்பத்தியைப் பொறுத்தவரையில் மூலப்பொருன் எற்பத்தி, முடிவுப்பொருள் உற்பத்தி என இருவகையான உற்பத்தி இடம்பெறுகின்றது. மூலப்பொருளான இறப்பர் பால் , சீற் றப்பர் உற்பத்தி செய்யும் போது இறப்பர் தோட்டங்கள் அமைவு பெற்றிருக்கும் பிரதேசங்களில் இறப்பர் பால் தொழிற்சாலைகள் அமைவு பெற்றுள்ளன. குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, கழுத்துறை ஆகிய மாவட்டங்களில் இறப்பர் பால் பதனிடும் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. அதேபோன்று முடிவுப்பொருளான டயர்.டியூப், பாதணி, கால்மிதியடி போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் களனி போன்ற கைத்தொழில் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொழிற்சாலைகள் பதப்படுத்தப்பட்;ட இறப்பர் பாலை தொழிற்சாலைகளிலிருந்து பெற்று உற்பத்தியை மேற்nகொள்கின்றன.
•             பொருத்தமான நிலம் - இறப்பர் மூலப்பொருள் உற்பத்தி செய்வதில் பொருத்தமான நிலம் முக்கியமாகக் காணப்படுவதுடன், பொருத்தமான காலநிலையும் அவசியமாகும். பாரியளவிலான தோட்டஙகளில் இறப்பர் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இறப்பர் மரங்கள் வளர்வதற்கு பாரிய சாய்டவான தரைத்தோற்றமுடைய நிலங்கள் தேவைப்படுவதுடன், வருடம் பூராவும் மழை கிடைக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அந்தவகையில் இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் இறப்பர் மரங்கள் வளரகட்கூடிய பொருத்தமான தரைத்தோற்றம் மற்றும் காலநிலை கொண்ட நிலங்கள் காணப்படுகின்றன.
•             தொழிலாளர் வசதி - இறப்பர் தொழிற்சாலைகளில் பணிபுரிதல், இறப்பர் பால் சேகரித்தல் போன்றவற்றிற்காக பெருமளவில் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இறப்பர் தொழில் மேற்கொள்ளப்படும் பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான ஆண்கள் பெண்கள் இறப்பர் தோட்;டங்களில் குறைந்த கூலியில் தொழில் புரிகின்றனர்.
•             சந்தை - இறப்பர், பிளாஸ்டிக் சார் கைத்தொழிலுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தை வாய்ப்பு காணப்படுகின்றது. பதப்படுத்தப்படும் இறப்பர் பால் உள்நாட்டில் உள்ள ரயர் முதலிய பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் சீற் இறப்பராக ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பிளாஸ்டிக் பொருட்களிலும் பல்வேறு உற்பத்தி உருவாகல், உயர்ந்த உற்பத்தி உருவாகின்றமையால் தேவைகள் அதிகமாதல்.
•             கைத்தொழில் வலயம் அல்லது கைத்தொழில் நகரத்துக்கு அருகில் சிறு அளவில் வீட்டுப்பாவனை பிளாத்திக்கு பொருள் கைத்தொழில் பரந்துள்ளது.
•             சந்தை, போக்குவரத்து உழைப்பு ஆகியன பிளாத்திக்கு கைத்தொழில் இடஅமைவிற்கு செல்வாக்கு செலுத்துகின்றது.
•             போக்குவரத்து வசதியும் இறப்பர் பிளாஸ்டிக்கு கைத்தொழிலில் செல்வாக்குச் செலுத்துகின்றது.

15)          இறப்பர், பிளாத்திக்கு சார் கைத்தொழிலின் அண்மைக்கால மாற்றங்கள்
•             அனேக உபகரணம் பிளாத்திக்கில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
•             தரத்தில் உயர்ந்த வௌ;வேறு உற்பத்திகள் இடம்பெறும்.
•             வியாபார பெயரினால் உற்பத்தி உயர்வடைதல் (பினிக்ஸ், ஆர்பிகோ)
•             காட்டுவளங்களைப் பாதுகாப்பதற்கு பிளாஸ்டிக்காலான பொருட்களின் உற்பத்தி அதிகளவில் முக்கியமானது.
•             பயன்பாட்டின் பின் கழிவுகள் சூழலில் சேர்த்தல் சுற்றாடல் மாசடைதல் அதிகரிப்பிற்கு ஏதுவாகிறது.



16)          பாராம்பரிய கைவினைக் கைத்தொழில்கள்
•             பெரும்பாலும் சூழலில் பெறப்படுகின்ற மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு வீட்டிலிருந்தாவாறே சிறியளவு மூலதனத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற கைத்தொழிலாக பாரம்பரி கைவினைக் கதை;தொழில் காணப்படுகின்றது. பாரம்பரிய கைப்பணிக் கைத்தொழில் துறையில் உள்ளடங்கும் சில துறைகளும், உபதுறைகளும் கீழே தரப்பட்டுள்ளது.

•             களிமண் - மட்பாண்;டம், சிவப்பு களிமண்
•             நார், ஓலை மற்றும் புல் - பாய்கள், நார்
•             தும்பர பொருட்கள் - சணல், பஞ்சு
•             பிரம்பு மூங்கில் பொருட்கள் - பிரம்பு சார்ந்த உற்பத்திகள்
•             உலோகம் சார்ந்த கைப்பணிப் பொருட்கள் - உலோக வார்ர்புகள், உலோக செதுக்கல்கள், வெள்ளி செதுக்கல்கள், தங்க செதுக்கல்கள்
•             ஆபரணங்கள் - உலோக ஆபரணங்கள், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள்
•             முகமூடிகள் - முகமூடி, பொம்மைகள், தானியங்கி பொம்மைகள், செதுக்கிய முகமூடிகள்
•             சங்கீத உபகரணங்கள் - சாஸ்திரிய சங்கீத உபகரணங்கள், சாஸ்திரிய சங்கீதமல்லாத சங்கீத உபகரணங்கள்
•             ஆடைகள் - கைகளால் நெய்யப்பட்ட ஆடைகள், கை சித்திரத் தையல்வேலை, தையல் இயந்திரத்தினால் செய்யப்பட்ட சித்திரத் தையல் வேலை, துணியில் வர்ணம் தீட்டுதல், ஒட்டு வேலை
•             பட்டிக் பொருட்கள் - பட்டிக் சுவர் அலங்காரங்கள், பட்டிக் உடைகள்
•             லேஸ் - கைகளால் வடிவமைக்கப்பட்ட லேஸ், தடின் லேஸ், கைகளால் பின்னப்பட்ட லேஸ்
•             மரம் சார்ந்த கைப்பணிப் பொருட்கள் - மரத்திலான செதுக்கிய வடிவங்கள், மரச்சிற்பங்கள், மரத்திலான வேறு உற்பத்திப் பொருட்கள்
•             காலணி மற்றும் தோற்பொருட்கள்
•             கற்கள் சார்ந்த கைப்பணிப் பொருட்கள் - கற்சிற்பங்கள், கற்செதுக்குகள், கற்கள் சார்ந்த வேறு உற்பத்திப் பொருட்கள்
•             பாராம்பரிய ஓவியம் மற்றும் சிற்பங்கள் - பாராம்பரி ஓவியங்கள், பாராம்பரிய சிற்பங்கள், பாராம்பரிய விழாக்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்
•             தென்னை பனை சார்ந்த பொருட்கள் - தேங்காய் ஓடு, ஈக்கிள், மடலு, தென்னந்தும்பு கித்துள் தும்பு, பனை ஓலை, தல ஓலை
•             நானாவிதமானவை கடதாசியிலான கைப்பணிப்பொருட்கள், கடதாசி கூழ் சார்ந்த பொருட்கள், மரத்தூள் சார்ந்த பொருட்கள், கடற்சிற்பிகள் சார்ந்த பொருட்கள், பல்வகையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கைப்பணிப் பொருட்கள்



17)          பாராம்பரிய கைவினைக் கைத்தொழிலுக்கு சாதகமான காரணிகள்
•             மூலப்பொருள் வசதி பாராம்பரிய கைப்பணிக் கைத்தொழிலின் விருத்திக்கு செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் மூலப்பொருள் இன்றியமையாததாகும். பெரும்பாலும் மூலப்பொருட்கள் சூழலில் இரந்து மிக இலகுவாகப் பெறப்படுகின்றதுடன், சில மூலப்பொருட்கள இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக தென்னை, பனை சார்ந்த கைப்பணிப் பொருட்கள் எனும்போது தென்னை, பனை உற்பத்தி இடம்பெறும் பிரதேசங்களைச் சார்ந்து அமைந்திருக்கும்.
•             தொழிலாளர் வசதி பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடன் குறிப்பாக அயல் பகுதிகளில் இருந்தோ அல்லது தமது குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து இக்கைத்தொழில்களை மேற்கொள்கின்றனர். இங்கு பாரம்பரிய நுட்பமுறைகளை பரம்பரைக்கு வழங்குவதைக் காணலாம். வீட்டில் வேலை செய்துகொண்டே கைத்தொழிலில் ஈடுபடுவதால் பெண்களுக்கு அதிகம் பங்களிப்பு செய்ய முடியும்.
•             சந்தை வசதி சுற்றுலாத்துறை விருத்தி போன்ற காரணங்களால் கைப்பணிப் பொருட்களுக்கு உள்நாட்டு சந்தை வசதி காணப்படுவதுடன், வெளிநாடுகளிலும் சந்தை வசதி காணப்படுகின்றது. வருடாந்த கண்காட்சிகள், விருதுகளை வழங்கல், பயிற்சி நெறிகள் போன்றவற்றினுடான ஊக்குவிப்புகள் நடைபெறுவதனாலும் தரமான கைப்பணிப்பொருட்கள் சந்தைக்கு வழங்கப்படுகின்றன. அத்துடன் ஒவ்வொரு கைத்தொழிலுக்கும் சிறப்பான பிரதேசங்கைள ஏற்படுத்துவதனுடாகவும் சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

•             அரசகொள்கை அரசாங்கம் சிறு கைத்தொழில் திணைக்களம், லக்சல கைப்பணி கைத்தொழில், கெமிதிரிய தேசிய அலங்கார (மோஸ்தர்) மத்திய நிலையம் என்பவற்றை அமைத்து ஒத்துழைப்பை வழங்குதல், சமுர்த்தி வங்கி, கிராமிய வங்கி ஆகியவற்றின் ஊடாக கடனை பெறுதல் போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

18)          பாராம்பரிய கைப்பணி கைத்தொழில்களின் அண்மைக்கால மாற்றங்கள்;
•             சுற்றாடல் பிரச்சினைத் தீர்வாக சம்பிரதாய கைப்பணி கைத்தொழிலை மேற்கொள்ளலாம்.
•             இக்கைத்தொழில் சூழலுடன் சேர்கின்ற கழிவுப்பொருட்கள் அசுத்தமான வாயு என்பன குறைவாக்கும்.
•             பொருட்களை மீள்சுழற்சிக்கு உள்ளாக்கல், சூழலுடன் இணைந்த பொருள் உற்பத்தி என்பனவற்றால் இக்கைத்தொழில் சமகாலத்தில் கூடிய முக்கியத்தவம் வாய்ந்தது.
•             சுற்றுலா கைத்தொழிலின் சந்தை சமகாலத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.

•             பாரம்பரிய கைத்தொழிலில் ஈடுபடுவதற்கு நவீன பரம்பரைக்கு விருப்பம் இன்மையால் இது வீழ்ச்சிக்கு உள்ளாகும்.