உலகின் குடியிருப்புகள்

மனிதன் குடியிருப்புக்களை பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் அமைத்துக்கொண்டான்.  அந்தவகையில் சூழலில் ஏற்படும் வெய்யில்மழைபனிவெப்பம்குளிர் என்பவற்றிலிருந்தும்விலங்குகளிலுமிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளல்இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளல்கள்ளவர்களிடமிருந்து தம்மையும்தமது உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ளல் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை நடாத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக மனிதன் தமது உறைவிடங்களை அமைத்துக்கொண்டான்.



1)            ஒரு குடியிருப்பில் காணப்படும் முக்கிய அம்சங்கள்
•             வீடுகள்  ( குடிசைவீடுகல்வீடுமாடிவீடு)
•             மக்கள் கூட்டம் (ஒருவர்ஒருகுடும்பம்பலகுடும்பங்கள்)
•             நிர்வாக அலுவலகம் (கிராம உத்தியோகத்தர் அலுவலகம்நகரசபைபிரதேச செயலகம்)
•             சேவை நிலையங்கள் ( வைத்தியசாலைபாடசாலைதபாற்கந்தோர்)
•             தொழிற்சாலைகள் (அரிசி ஆலைசீமெந்து தொழிற்சாலைஉணவு பதனிடல் தொழிற்சாலை)
•             போக்குவரத்து வீதிகள் (பிரதான பெருந்தெருசிறுவீதிபுகையிரத வீதி)
•             உட்கட்டமைப்பு ( மின் இணைப்புகுடிநீர் வழங்கல்முறைகள்)
•             சுற்றுச்சூழல்(நிலம்நீர்தாவரம்)


2)            குடியிருப்புக்களை வகைப்படுத்தல்
குடியிருப்புகளை பல்வேறு பிரமாணங்களை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தலாம். அந்தவகையில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் வசிப்பிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்தல்பருமன் மற்றும் தொழிற்பாட்டினடிப்படையில் வகைப்படுத்தல்அமைவுக் கோலத்தினடிப்டையில் வகைப்படுத்தல் என பலவாறும் வகைப்படுத்த முடியும்.
பருமன் மற்றும் தொழிற்பாட்டின் அடிப்படையில் குடியிருப்புக்களைப் பிரதானமாக கிராமக் குடியிருப்பு (Rural)  நகரக்குடியிருப்பு (Urban)  என இரண்டாக பிரிக்கலாம். இதுவே பொதுவான பாகுபடுத்தலாகவும் உள்ளது.

வடிவத்தினடிப்படையில் குடியிருப்புக்களைப் (Settlement Patterns)  பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
•             நாடா அல்லது நேர்கோட்டுக் குடியிருப்பு (Linear Settlement)
•             தூரமைந்த அல்லது சிதறிய குடியிருப்பு (Dispersed Settlement)
•             கொத்தணி அல்லது மையப்படுத்தப்பட்ட குடியிருப்பு (Nucleated Settlement)



வசிப்பிடங்களின் எண்ணிக்கை அல்லது வசிப்பவர்களின் எண்ணிக்கை அல்லது படிமுறை வளர்ச்சிநிலை (hierarchy) அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
•             தனிமைப்படுத்தப்பட்ட வீடு (Isolated Dwelling)
•             குக்கிராமம் (Hamlet)
•             கிராமம் (Village)
•             நகரம் (Town)
•             மாநகரம் (City)
•             பெருநகரம் (Metropolitan)
•             கூட்டுநகரம் (Combination)
•             நகரத்தொகுதி(Megalopolis)
3)            குடியிருப்புக்களின் படிமுறை வளர்ச்சி நிலை
குடியிருப்புக்களின் படிமுறை ரீதியிலான வளர்ச்சி நிலை அல்லது படிமுறையாக்கம் என்னும்போது அது குடியிருப்புக்களின் வசிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் நிலப்பரப்பு  அடிப்படையில் குடியிருப்புக்களை விளக்குவதைக் குறிக்கும். இங்கு குடியிருப்பவர்களின் எண்ணிக்கை என்பது நாட்டிற்கு நாடு அல்லது பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் குடியிருப்புக்களின் படிமுறை ஒழுங்கானது தனிமைப்படுத்தப்பட்டவீடுகுக்கிராமம்கிராமம்நகரம்மாநகரம்பெருநகரம்கூட்டுநகர்பெருநகரத்தொகுதி என்றவாறு அமைந்துள்ளது. இங்கு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகுக்கிராமம்கிராமம் என்பன பொதுவாக கிராமக் குடியிருப்புகளின் படிமுறை ஒழுங்கை குறித்து நிற்பதுடன்நகரம்மாநகரம்பெருநகரம்கூட்டு நகரம்நகரத்தெகுதி என்பன நரங்களின் படிமுறை ஒழுங்கினைக் குறித்து நிற்கின்றது.

•             தனிமைப்படுத்தப்பட்ட வீடு :- ஒன்று அல்லது இரண்டு கட்டங்கள் அல்லது குடும்பங்கள் வசிக்கின்ற பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட வீடு அல்லது பண்ணைவீடு எனப்படுகின்றது. இங்கு ஆகக்கூடியது 10 பேர்வரையில் வசிக்கக்கூடும். பற்றாக்குறையான சேவைகள் கிடைத்தல் அல்லது பெரியளவிலான விவசாய நிலங்களைப் பராமரித்தல் போன்றவற்றுக்காக இத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் தோற்றம் பெறலாம்.

•             குக்கிராமம் :-மிகக்குறைந்தளவிலான சேவை வசதிகளையும் குறைந்தளவிலான கட்டடங்களையும் , 10 – 100 பேர்வரையிலான மக்கள் தொகையையும் கொண்டமைந்த குடியிருப்புக்கள் குக்கிராமங்கள் எனப்படுகின்றன.

•             கிராமம் :-  கொத்தான குடியிருப்புக்களை அல்லது சமூகத்தையும் கொண்டு இடைத்தரமான சேவை வசதிகைளயும், 100 – 1000 பேர்வரையிலான மக்கள் தொகையையும் கொண்டு காணப்படுகின்ற குடியிருப்புகள் கிராமங்கள் எனப்படுகின்றன. கிராமங்கள் பொதுவாக குக்கிராமங்களை விட பெரியதாகவும் கூடிய குடியிருப்புக்களையும்  நகரங்களை விட சிறியதாகவும் குறைந்த குடியிருப்புக்களையும் கொண்டு காணப்படுவதுடன்ஒருளவு குறைந்த சேவை வசதிகளான சாதாரன கடைதபாற்கந்தோர் மற்றும் சிறிய பாடசாலை போன்றவற்றையும் கொண்டு காணப்படும்.

•             நகரம்:- நெருக்கமான குடியிருப்புக்களையும், 1000 – 100000 பேர்வரையிலான மக்கள் தொகையையும் கொண்டு காணப்படும் பகுதிகள் நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. நகரங்கள் கிராமங்களை விட பெரியதாகவும்அதிழக சனத்தொகை உடையதாகவும் காணப்படுவதுடன்மாநகரங்களை விட சிறியதாகவும்குறைந்த சனத்தொகை கொண்டதாகவும் காணப்படும்.

•             மாநகரம்:- மிகுதியான சேவை வசதிகளையும், 1 மில்லியன் தொடக்கம் 10 மில்லியன் வரையிலான மக்கள் தொகையையும் கொண்ட குடியிருப்புகள் மாநகரம் எனப்படுகின்றன. 

•             பெரு நகரம்:- மத்திய நகரத்தைச் சுற்றி உபநகரங்களும்அடுத்து சிறிய நகரங்களும் வளர்ச்சியடைகின்றபோது அவை பெருநகரம் எனப்படும்.

•             கூட்டு நகரம்:- பெருநகர்கள் படிப்படியே விரிவாகி இரு பெருநகர்கள் ஒன்றுடனொன்று இணைவதால் தொடர்ச்சியாக வியாபிக்கும் நகர்ப்புறப்பண்புகளைக் கொண்ட பாரிய பிரதேசம் உருவாகின்றது.  இவ்வாறு பெருநகர்கள் ஒன்றுடனொன்று இணைவதால் உருவாகும் வலயம் கூட்டுநகர்கள் என்றழைக்கப்படும்.

•             நகரத்தொகுதி:- சில கூட்டுநகர்கள் பாதை வலையமைப்பினால் ஒன்றுடனொன்று தொடர்பு கொள்வதால் நகர்த்தொகுதிகள் உருவாகின்றன. நகர்த்தொகுதிகளின் உருவாக்கம் நகர குடியிருப்பு வளர்ச்சியின் உச்ச கட்ட சந்தர்ப்பமாகக் கருதப்படும்.


4)            குடியிருப்பு கோலங்கள்
குடியிருப்புக்கள் அமைந்திருக்கின்ற வடிவங்களை குடியிருப்புக் கோலங்கள் என அழைக்கப்படுகின்றன. அந்தவகையில குடியிருப்புக்களின் அமைவானதுசிதறிய குடியிருப்புகள்மையப்படுத்தப்பட்ட குடியிருப்புகள்,  நேர்கோட்டு குடியிருப்புகள் என  பிரதானமாக மூன்று வகையானதானதாகக் காணப்படுகின்றது.
•             சிதறிய குடியிருப்பு :- பரந்ததொரு நிலப்பரப்பில் ஒன்றுக்கொன்று அதிக தூரத்திலும்குறைந்தளவிலான எண்ணிக்கையிலும் குடியிருப்புக்கள் அமைந்து காணப்படும்போது சிதறிய குடியிருப்பு எனப்படுகின்றது. பெரிய பண்ணை நிலங்களின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் பண்ணை வீடுகள்மலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் குறைந்தளவிலான வீடுகளை இத்தகைய குடியிருப்புகளுக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். விவசாய நடவடி;ககைளக்கு பெருமளவிலான நிலம் தேவைப்படுதல்நீர்ப்பற்றாக்குறை நிலவும் வரண்ட பிரதேசங்கள் போன்றவற்றில் இவ்வாறு பெருநிலப்பரப்பில் சில குடியிருப்புகள் காணப்படும். இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசங்கள்வாகரை பிரதேசம் போன்றவற்றில் இத்தகைய குடியிருப்புக்களைக் காணலாம்.
•             நேர்கோட்டுக் குடியிருப்பு :- நீளவாட்டப் போக்கிலும் ஒடுங்கிய வடிவிலும் அமைற்துள்ள குடியிருப்புவடிவங்களை நேர்கோட்டுக் குடியிருப்புக்கள் அல்லது நாடாவடிக் குடியிருப்புக்கள் என அழைப்பர்.  புகையிரத பாதைகள்பிரதான வீதிகள்ஆற்றுபள்ளத்தாக்குகள் ஆகியவற்றின் போக்கிற்கு இணைவாக அமைந்து காணப்படும்.  இலங்கையின் மன்னம்பிட்டி போன்ற பகுதிகளில் புகையிரத வீதிபிரதான வீதி ஆகியவற்றிற்கிடையில் இத்தகையதொரு குடியிருப்பு வடிவம் காணப்படுகின்றது.
•             மையப்படுத்தப்பட்ட குயிருப்பு:- குறுகிய நிலப்பரப்பில் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகவும்அதிக குடியிருப்புக்களையும் கொண்டமைந்து காணப்படும் குடியிருப்பு வடிவங்களை மையப்படுத்தப்பட்ட குடியிருப்புகள் அல்லது கொத்தணிக் குடியிருப்புக்கள் என அழைப்பர். மையப்படுத்தப்பட்ட குடியிருப்புக்கள் பெரும்பாலும் வீதிச் சந்திகளைச் சுற்றி அல்லது ஆறுகள் குறுக்கிடும் பகுதிகளைச் சுற்றியோ உருவாகுகின்றன.

5)            கிராமியக் குடியிருப்புகள்
முதனிலை பொருளாதார நடவடிக்கைககளான பயிhச்செய்கைவிலங்கு வளர்ப்புமீன்பிடிவேட்டையாடுதல் மற்றும் காய்கனிகளை சேகரித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு வாழ்க்கை நடாத்துவோர் வசிக்கும் பகுதிகள் கிராமியக் குடியிருப்புகள் எனப்படுகின்றன. ஆனாலும் சில கிராமியக் குடியிருப்புகளில் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் வசிக்கின்றனர். பெரும்பாலான கிராமியக் குடியிருப்புப் பகுதிகள் வசிப்பிடங்களை கொண்ட பிரதேசம்பொருளாதார நடவடிக்கைப் பிரதேசம் என இரண்டு பாகங்களாக பிரிந்து காணப்படும்.

கிராமியக் குடியிருப்புகளை அவற்றின் உறுதிப்பாட்டினடிப்படையில் தற்காலிகமான அரைகுறை உறுதிப்பாடுடைய குடியிருப்புகள் எனவும்நிலையான கிராமியக் குடியிருப்புகள் எனவும் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.

குறுகிய காலத்தில் தமது தேவையின் நிமித்தம் வசித்தல் அரைகுறையான உறுதிப்பாடுடைய குடியிருப்பு எனப்படுகின்றது. நிலையான குடியிருப்புகளில் வாழ்வதற்கு முன்னர் மனிதர் தற்காலிகமான மற்றும் அரைகுறையான உறுதிப்பாடுடைய குடியிருப்புகளில் வாழ்ந்தனர். உணவு தேடி காலத்திற்கு காலம் நகர்ந்து குடியேறுதல்இரைகிடைக்கும் இடங்களை மாற்றுதல்இடத்திற்கிடம் மாறிச் சென்று மீன்பிடித்தல்சேனைப் பயிர்ச்செய்கைசேனைப் பயிhச்செய்கைபருவக்காதலநிலை மாற்றம் சார்ந்த இடர்கள் போன்ற காரணங்களினால் தற்காலிக மற்றும் அரைகுறையான குடியிருப்புக் கோலங்கள் உருவாகியுள்ளன. இன்றும் கூட உலகின் சில பிரதேசங்களில் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தற்காலிகமான குடியிருப்புக்களை காணக்கூடியதாகவுள்ளது.

பெரும்பாலான காலங்களில் தொடர்ச்சியாக ஒரேயிடத்தில் அமைந்துள்ள குடியிருப்புகள் நிலையான குடியிருப்புகள் என்றழைக்கப்படுகின்றன. நிலையான குடியிருப்புகளுக்கு எடுத்துக்காட்டாக ஆசிய நாடுகளின் நெல் விவசாயக் குடியிருப்புகள்;, இலங்கையின் ஈரவலயக் கிராமங்கள்மத்திய மலைநாட்டின் பள்ளத்தாக்கு சார்ந்த கிராமங்கள்உலர் வயல குளத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். தோற்றம் அமைவிடம்பொருளாதார நடவடிக்கைகள்இடப்பரப்புசனத்தொகைகுடியிருப்புக் கோலங்களின் தன்மை போன்ற பிரமாணங்களுக்கமைய இவ்வாறான நிலையான குடியிருப்புகளை வகைப்படுத்தலாம்.

6)            நகரக்குடியிருப்புகள்
சிறப்புப்பணியும் துரித இயக்கமும் கொண்டவை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியில் பெருமளவிலான சனத்தொகை திரட்சியும்கைத்தொழில்சேவை வசதிகளின் மையப்படுத்தப்பட்ட தன்மையையும் கொண்டுள்ள குடியிருப்புகள் நகரக்குடியிருப்புகள் எனப்படுகின்றன. நகரக் குடியிருப்புகளின் அடிப்படையான பண்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

•             நகரப்பகுதிகளில் கட்டங்களுக்குரிய நிலப்பயன்பாடு அதிகளவில் காணப்படுவதனால் விவசாய நிலங்களுக்கான நிலப்பயன்பாட்டிற்குரிய நிலத்தின் அளவு மிகக் குறைவாகக் காணப்படும். பிரதேசத்தின் அதிகமான பகுதிகளை வீடுகளும்தொழிற்சாலைகளும் ஏணைய கட்டடத் தொகுதிகளும் ஆக்கிரமித்திருக்கும்.
•             பல்வேறு பட்ட தொழில்நடவடிக்கைகள் நகரப்பகுதிகளில்  செறிந்திருப்பதனால் பல்வேறு இனமதங்களைச் சேர்த்வர்கள் வசிக்கின்றனர்.
•             நகரசனத்தொகையானது கிராமியக் குடியிருப்புகளை விட அதிகரிப்பதனால் சனத்தொகை செறிவும் நகரப்பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றது.

7)            நகரக்குடியிருப்புக்களை வேறாக்கும்போது பயன்படுத்தப்படும் அளவுகோல்கள்

நகரக்கு குடியிருப்புக்களை வரையறை செய்கின்றபோது பெரும்பாலும் நகரங்களின் சனத்தொகை அளவுகோலாக சில நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றபோதிலும்சில நாடுகளில் வேறுபட்ட அளவீடுகளும் அளவுகோல்களாகக் கொள்ளப்படுகின்றன. நகரக்குடியிருப்புக்களை வரையறை செய்வதில் சனத்தொகை அளவுபொருளாதார நடவடிக்கைநிருவாக மையம் போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

•             நிருவாக மையங்களை அளவுகோலாகப் பயன்படுத்தும் நாடுகளாக இலங்கைலிபியாபாகிஸ்தான்பிரித்தானியாகெயிட்டிகொஸ்டாரிக்கா டொமினிக்கன் குடியிரசு முதலியன காணப்படுகின்றன.
•             நிருவாக நடவடிக்கைகளுடன் வேறு சில அளவுகோல்களையும்  (பிரமாணங்களையும்) பயன்படுத்தும் நாடுகளாக சூடான்நிகாரகுவா முதலியன காணப்படுகின்றன. சூடானைப் பொறுத்தவரையில் நிருவாக மையமாகவும் 5000 பேரை விட கூடிய சனத்தொகையுள்ள குடியிருப்பையும் கொண்டு காணப்படுமாயின் அது நகரமாகக் கொள்ளப்படும்.
•             சனத்தொகை கைத்தொழில்லாத தொழில்களின் வீதம்நகரப் பண்புகள் ஆகியவற்றை அளவுகோள்களாக தஜிகிஸ்தான்துர்க்மெனிஸ்தான்உஸ்பெகிஸ்தான்எஸ்தோனியாலத்வியாஉக்ரேன் போன்ற நாடுகளில் அளவுகோல்களாகக் கொள்ளப்படுகின்றன.
•             யப்பான் - 50000 பேருக்கு மேற்பட்ட சனத்தொகையையும்குடியிருப்பில் கட்டப்பட்ட நகரின் வீடுகளில் 60 வீதம் மையப்படுத்தப்பட்டிருத்தல்தொழிற்படையில் 60 வீதத்தை விட அதிகமானோர் கைத்தொழில் அல்லது வியாபாரம் அல்லது வேறு நகர் தொழில்களில் ஈடுபட்டிருத்தல்சில குடியிருப்புகளில் நகர்ப்புற வசதிகளும் பண்புகளும் இருத்தல் முதலிய இயல்புகளையுடயவை யப்பானில் நகரக்குடியிருப்புகள் என அழைக்கப்படுகின்றன.
•             ஐக்கிய அமெரிக்கா – 2500 க்கு மேற்பட்ட சனத்தொகையையும்நகரமயமான வலயத்தையும் கொண்ட பிரதேசங்கள் ஐக்கிய அமெரிக்காவில் நகரக்குடியிருப்புகள் என கொள்ளப்படுகின்றன.
•             இந்தியா – 5000 இற்கு மேற்பட்ட சனத்தொகையையும் வாழ்கின்ற மக்களில் 75 சதவீதமானோர் விவசயாமல்லாத தொழில்களிலிலும் ஈடுபாடுகின்ற குடியிருப்புகள் இந்தியாவில் நகரக்குடியிருப்புகளாகக் கொள்ளப்படுகின்றன.
•             இஸ்ரேல் - 2000 இற்கு மேற்பட்ட சனத்தொகையையும்,  வாழ்கின்ற மக்களில் 75 சதவீதமானோர் விவசயாமல்லாத தொழில்களிலிலும் ஈடுபாடுகின்ற குடியிருப்புகள் இஸ்ரேலில்;  நகரக்குடியிருப்புகளாகக் கொள்ளப்படுகின்றன.
•             அவுஸ்ரேலியா – 1000 இற்கு மேற்பட்ட சனத்தொகையையும், 250 வீடுகளுக்கு அதிகமானஅதேநேரம் குடியிருப்புகளில் உள்ள 100 வீடுகளில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இருக்கின்றமை போன்ற இயல்பையுடைய குடியிருப்புகள் அவுஸ்ரேலியாவில் நகரக்குடியிருப்புகளாகக் கொள்ளப்படுகின்றன.

8)            நகரக்குடியிருப்புக்களை தொழிற்பாட்டின் அடிப்படையில் வகைப்படுத்தல்


நகரக்குடியிருப்புக்களை தொழிற்பாட்டின் அடிப்படையில் கைத்தொழில் நகரம்துறைமுகநகரம்வர்த்தக நகரம்கலாசார நகரம் எனப் பல தொழிற்பாடுகளை அடிப்பபடையாகக் கொண்டு  வகைப்படுத்தலாம்.

•             கைத்தொழில் நகரம் :- பிலடெல்பியாசிக்காக்கோபபுலோநியுகாசில்பேமிங்காம்நெற்றிங்காம்பீகார்றூர்கேலாஒசாகாயொக்ககாமாகோபே,  பத்திராவதி

•             துறைமுக நகரம்:- றியொடிஜெனீராபுவனஸ்அயர்ஸ்வல்பறைசோநியுயோர்க்நியுயோர்க்வன்கூவர்மொன்றியல்லண்டன்லிஸ்பன்கேப்ரவுண்டேர்பன்லாகோஸ்கராச்சிமும்பாய்கொழும்புமெல்போன்சிடனி

•             கலாசார நகரம்:- எகிப்துலண்டன்புதுடெல்லிரோம்வோஷிங்டன்

•             சேவை நகரம்:- சிங்கப்பூர்சாங்காய்

•             வர்த்தக நகரம்:- மும்பாய்சிடனிகேப்ரவுண்நியுயோர்க்லண்டன்டோக்கியோ

•             கல்வி நகரம்:- ஒக்ஸ்போட்கேம்பிறிட்ஜ்அண்ணாமலைநாலந்தா

•             நிருவாக நகரம்:- புதுடில்லிபீஜிங்பக்தாத்கொழும்பு

•             சுற்றுலா நகரம்:- ஒஸ்லோஊட்டிகண்டி

•             தொலைத்தொடர்பு நகரம்:- டோக்கியோலண்டன்கொழும்பு

•             மீன்பிடி நகரம்:- நோர்வேஒசாகாகற்பிட்டி

•             சமயப்பணி நகரம்:- மக்காஜெருசலேம்வாரணாசிமதுரை




9)          நகரக்குடியிருப்புக்களை சனத்தொகை அடிப்படையில் வகைப்படுத்தல்

சனத்தொகையினடிப்படையில் நகரங்கள் பிரதானமாக சிறிய நகரங்கள்இடைத்தர நகரங்கள்நகரங்கள்மில்லியன் நகரங்கள்மாபெரும் நகரங்கள் என ஐந்தாகப் பிரிக்கப்படுகின்றன.

•             சிறியநகரங்கள் - 20 ஆயிரத்திற்குக் குறைந்த சனத்தொகை கொண்ட குடியிருப்புகள் நகரங்கள் எனப்படுகின்றன. ( 20000 கீழ்)
•             இடைத்தர நகரங்கள் - 20 ஆயிரத்திலிருந்து - 100 ஆயிரத்திற்கு இடைப்பட்ட  சனத்தொகை கொண்ட குடியிருப்புகள் இடைத்தர நகரங்கள் எனப்படுகின்றன. (20 000 – 100 000)
•             நகரங்கள் - 100 ஆயிரத்திலிருந்து 1 மில்லியனுக்கு இடைப்பட்ட சனத்தொகை கொண்ட குடியிருப்புகள் நகரங்கள் எனப்படுகின்றன. (100 000 – 1 000 000)
•             மில்லியன் நகரங்கள் - 1 மில்லியனிலிருந்து 10 மில்லியனுக்கு இடைப்பட்ட சனத்தொகை கொண்ட குடியிருப்புகள் மில்லியன் நகரங்கள் எனப்படுகின்றன. (1 000 000 – 10 000 000)
•             மாபெரும் நகரங்கள் - 10 மில்லியனிலிருந்து அதற்கு மேல் சனத்தொகை கொண்ட குடியிருப்புகள் மாபெரும் நகரங்கள் அல்லது மெகாசிற்றி எனப்படுகின்றன. (10 000 000 மேல்)