Home » » இருநூல்களின் புத்தக வெளியீடு

இருநூல்களின் புத்தக வெளியீடு

சித்தாண்டி - மாவடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தில் இன்று (19.04.2015) இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. அக்‌ஷயன்  அவர்களால் எழுதப்பட்ட "நீரியல் ஓர் அறிமுகம்" எனும் உயர்தர புவியியல் மாணவர்களுக்கான ஓர் நூலும், "சிறுநீரகக் கல் ஓர் அறிமுகம்" எனும் உடல்நலத்துடன் தொடர்புடைய ஓர் நூலும் என இரண்டு நூல்கள்  வெளியிட்டு வைக்கப்பட்டன. 


கல்வியத்தின் பணிப்பாளர் திரு. மா.சபாரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  திரு. க.சூரியகுமாரன் (பணிப்பாளர், வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம், மட்டக்களப்பு) அவர்களும், சிறப்பு  அதிதிகளாக திரு. செ.புவீந்திரன் (தாதிய பரிபாலகர், வாழைச்சேனை வைத்தியசாலை), திரு. பூ.அருள்நாதன் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) , திரு. இ.நாகேந்திரன் (ஆசிரியர்),  திரு. தி. கமலநாதன் (ஆசிரியர்), திரு. பொ.கருணாகரன் (சுதேச முறிவு வைத்தியர்), திருமதி. வ.கமலநாதன் (ஆசிரியர்), திருமதி ஜெ.புவீந்திரன் (ஆசிரியர்) ஆகியோரும் கலந்துகொண்டனர். 

மற்றும் நிகழ்வுகளில் கல்வி நிலைய நிருவாகத்தினர், பழைய மாணவர்கள், தரம் 9 - 13 வரையிலான மாணவர்களும் கலந்துகொண்டனர்.

























0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2006-2019. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger