நீரின் பரம்பல் அறிமுகம்

உலகிலுள்ள ஒவ்வொன்றிலும் நீர் காணப்படுகின்றது. புவிக்கு மேலே வளி மற்றும் முகில்களிலும், புவியின்மீது ஆறு, சமுத்திரம், பனிக்கட்டி, தாவரம், விலங்குகள் மற்றும் புவியின் உட்பகுதிக்குள் சில மைல்கள் வரையிலும் நீர் காணப்படுகின்றது. இங்கு நீரானது இரண்டு வகையானதாகக் காணப்படுகின்றது. அதாவது சமுத்திரம் போன்றவற்றில் உவர் நீராகவும், மனிதன், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கைக்கு பயன்படும் நிலையிலுள்ள நன்னீர் ஆகிய இரண்டு வகைகளில் காணப்படுகின்றது.


விண்வெளியிலிருந்து புவியை பார்க்கும்போது அது நீல நிறமாகத் தெரிவதனால் அதனை நீலக்கோள் என அழைக்கின்றனர்.; புவிமேற்பரப்பில் 71 வீதமாக மூடியுள்ள சமுத்திரத்திலிருந்து சூரியக் கதிhகள் தெறிப்படைவதனால்தான்  இந்த நீலநிறம் தோன்றுகின்றது. 

புவியில் உள்ள மொத்த நீரில் 97.3 சதவீதம் நீரானது சமுத்திரங்கள் மற்றும் ஏரிகளில் உவர்நீராகவும், 2.7 சதவீதமான நீர் நன்னீராகவும் காணப்படுகின்றது. மொத்தமாகக் குறைந்தளவிலே நன்னீரானது காணப்படுகின்றபோதிலும் நன்னீரை 100 சதவீதமாகக் கொண்டு நோக்குகின்றபோது 68.7 சதவீதம் பணிக்கட்டியாகவும்,  30.1 சதவீதம் தரைக்கீழ் நீராகவும், 1.2 சதவீதம் தரைமேற்பரப்பு நீராகவும் காணப்படுகின்றது. இந்தக் குறைந்தளவிலான தரைமேற்பரப்பு நன்னீரானது ஆறுகள், ஏரிகள் சே;றுநிலங்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றது.

மொத்த நீர்ப்பரம்பலை 100 சதவீதமாக எடுத்துக்கொள்ளும்போது 2.7 சதவீதமுள்ள நன்னீரில், பனிக்கட்டி 2.05 சதவீதமாகவும், தரைக்கீழ் நீர் 0.68 சதவீதமாகவும், ஏரிகள், நதிகள், மண்ணீரம் ஆகியவற்றில் உள்ள மேற்பரப்பு நன்னீரானது 0.0161 சதவீதமாகவே காணப்படுகின்றது. அந்தவகையில் மனிதனால் பயன்படுத்தக்கூடிய நன்னீரின் அளவு மிகவும் குறைந்தது என்பது இதிலிருந்து அறிந்துகொள்ளமுடியும்.


கோராவெளி ஆறு (மட்டக்களப்பு - மாதுறு ஓயாவின் கிளையாறு)


சந்தணமடு ஆறு (மட்டக்களப்பு - முந்தணி ஆற்றின்கிளையாறு)




சோதையன் குளம் (மட்டக்களப்பு )
Article By :- AKSHAYAN