நீரின் பௌதிக இயல்புகள்

நாம் வாழும் புவியின் 70 சதவீதமான மேற்பரப்பானது நீரினால் மூடப்பட்டுள்ளது.  புவியில் உள்ள உயிர்களின் நிலைப்பிற்கு அடிப்படையாக அதைவதில் நீரின் பங்கு முக்கியமானதாகும். அதிகமான விலங்குகள் மற்றும் தாவரங்கள் தமது கனவளவில் 60 சதவீதத்திலும் அதிகமான அளவு நீரைக்கொண்டுள்ளன.


நீரானது மிகவும் எளிமையான அணுக்கட்டமைப்பை கொண்டுள்ளது. இரண்டு ஐதரசன் அணுக்களையும், உரு ஒட்சிசன் அணுவையும் கொண்டதாகவே நீர் மூலக்கூறு காணப்படுகின்றது. நீரிலுள்ள  ஐதரசனின் ஒரு பக்கமானது நேர் ஏற்றத்தினையும், எதிர்ப்பக்கம் மறை ஏற்றத்தினையும் கொண்டுள்ளது. அதேபோன்று ஒட்சிசனின் அணுவின் ஒரு பக்கமானது நேர் ஏற்றத்தினையும், எதிர்ப்பக்கம் மறை ஏற்றத்தினையும் கொண்டுள்ளது. நீரினுடைய இத்தகைய முனைவுத் தன்மையானது ஒன்ரறையொன்று இணைத்து மூலக்கூறுகள் ஒன்று செர்வதற்கு காரணமாக இருப்பதுடன், ஒரு பலமான கரைப்பானாகவும் மற்றும் நிலமேற்பரப்பில் அழுத்தத்தை ஏற்றுபடுத்துவதற்கு ஏற்றவகையிலும் இருப்பதற்கு உதவுகின்றது. 


நீர் மூலக்கூறுகள் பௌதிக நிலை மாற்றத்தினை உருவாக்குகின்ற போது, நீர் மூலக்கூறுகள் தாமாகவே முற்றிலும் மாறுபட்ட வடிவங்களில் அதனுடைய மூலக்கூறுகளை ஒழுங்கு செய்து கொள்கின்றது. கனவளவில் அதிகரிப்பதற்கும், அடர்த்தியில் குறைவதற்கும் பனித்தடங்களால் இந்த மூலக்கூறு ஒழுங்குபடுத்தல் எடுக்கப்படுகின்றது. உறைதலில் நீர் மூலக்கூறுகளின் விரிவாக்கமானது , திரவநீரின் மேல் பனிக்கட்டியானது மிதப்பதற்கு வழிவகுக்கின்றது.

         நீரானது மேலும் கொண்டுள்ள தனிப்பட்ட பௌதிகப் பண்புகள்

•    நீரானது ஒரு உயர்ந்த அளவு திட்டவட்டமான வெப்பத்தைக் கொண்டுள்ளது. பொருட்களின் வெப்பநிலையை மாற்றுவதற்கு தேவைப்படுகின்ற மொத்த சக்தியாக இந்த திட்டவட்டமான வெப்பம் காணப்படுகின்றது. நீரானது சூடாவதற்கு முன்னர் அதிகளவிலானக வெப்ப சக்தியை உறிஞ்ச வேண்டியிருப்பதனால் அது அதிகளவில் குறிப்பிட்ட வெப்பத்தைக் கொண்டுள்ளது. அதாவது நீரானது குளிர்;சசியடைகின்றபோது நீரானது மெதுவாக வெப்பசக்தியை வெளியிடுவதனை இது கருதுகின்றது. நீரினுடைய இந்த உயர்வளவிலான குறிப்பிடத்தக்க வெப்பமானது, புவியின் மிதமான காலநிசை; செயற்பாட்டிற்கு அனுமதிப்பதுடன், உயரினங்கள் தமது உடல் வெப்பநிலையை திறம்படப் பேணுவதற்கும் உதவிபுரிகின்றது.

•    நீரானது தனது தூய்மையான நிலையில் நடுநிலையான pH பெறுமானத்தைக் கொண்டுள்ளது. அதாவது தூயநீரானது அமிலமோ அல்லது வேறு அடிப்படைகள் இரண்டுமோ இல்லாத நிலையில் உள்ளது என்பதனை நடுநிலையான pH பெறுமானம் விளக்கி நிற்கின்றது. நீரில் பொருட்கள் கரைந்திருக்கின்றபோது அதனுடைய pH பெறுமானத்தை மாற்றுகின்றது. மழைநீரானது காபனீரொட்சைட்டு மற்றும் கந்தகவீரொட்சைட்டு ஆகியவற்றை கொண்டு வருவதனால் இயற்கையாகவே மழைநீரானது அமிலத்தன்மைக்குரிய pH பெறுமானமான அண்ணளவாக 5.6 ஐக் கொண்டுள்ளது.

•    நீரானது பாதரசம் தவிர்ந்த ஏணைய எந்த திரவங்களைப் பாhக்கிலும் எளிதாக வெப்பத்தைக் கடத்தக்கூடியது. நீரினது எளிதாக வெப்பத்தைக் கடத்தக்கூடிய இயல்பினைக் கொண்டுள்ளமையால்  ஏரிகள் மற்றும் சமுத்திரங்கள் போன்ற பெரிய நீர்ப்பரப்புகள் ஒரு சீரான குத்தான வெப்பநிலை தன்மையினைக் வைத்திருப்பதற்கு காரணமாகின்றது.

•    நீரானது 0 - 100 பாகை செல்சியஸ் என்ற முக்கியமான வெப்பநிலை வரம்பினுள் அமைகின்றபோது திரவநீராக இருக்கின்றது. இத்தகைய வெப்பநிலை வீச்சானது  எமது புவியில் நீரானது திரவ நிலையில் அமைந்து காணப்படுவதற்கு வழிவகுக்கின்றது.

•    நீரானது பொதுவான ஒரு கரைப்பான் ஆகும். இத்தகைய தன்மையினால் பெரியளவிலான வித்தியாசமான இரசாயணங்களைக் கரைப்பதற்குரிய வசதியினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி இத்தகைய கரைக்கக்கூடிய வசதியினால் கழுவுநீரோட்டம், ஊடுருவல், தரைக்கீழ் நீரோட்டம், உயிரினங்கள் என்பவற்றில் போசனைக் கரைசல்களைக் எடுத்துச் செல்வதற்குரிய வசதியினைக் கொண்டிருப்பதற்கும் காரணமாகஅமைகின்றது. 

•    நீரானது உயர்மேற்பரப்பு அழுத்தத்தினைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது. இத்தகைய இயல்பானது நீரானது புவியீர்ப்பு விசையினால் கீழ்நோக்கி இழுக்கப்பட்டாலும் குத்தான கட்டமைப்பில் நிமிர்ந்து நிற்பதற்கு காணமாக அமைந்துள்ளது. நீரினுடைய உயர் மேற்பரப்ப அழுத்தமானது நீர்துளிகள் மற்றும் அலைகளின் உருவாக்கத்திற்கு வழிவகுப்பதுடன், தாவரங்களின் வேர்களிலிருந்து இலைகள் வரை நீர் மற்றும் கரைக்கப்பட்ட போசனைகள் நகாவதற்கும் மற்றும் சின்னஞ்சிறு நாளங்களைக் கொண்ட சிலவிலங்குகளின் உடலில் இரத்தம் நகர்வதற்கும் வழிவகுக்கின்றது.

•    நீர் மூலக்கூறு மாத்திரமே புவியில் எல்லா மூன்று பௌதிக நிலைகளிலும் குறிப்பாக திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகியவற்றில் காணப்படும் ஒரு மூலக்கூறாகக் காணப்படுகின்றது. எல்லா நிலைகளிலும் பாரிய அளவிலான வெப்பப்பரிமாற்றம் நிகழ்கின்றது. இத்தகைய வெப்பப்பரிமாற்ற நிகழ்வானது புவியினுடைய வளிமண்டலத்தின் வெப்பசக்தியின் மீள்பரம்பலுக்கு வழிவகுக்கின்றது. பரிமாற்றப்பட்ட அடிப்டை வெப்பததில்; வளிமண்டலத்தினுள்ளெ  ஏறக்குறைய ¾ பங்கு இச்செயற்பாடானது  நீரினது ஆவியாக்கம் மற்றும் ஒடுங்கல் ஆகிய செய்ல்களின் மூலம் நிறைவேற்றப்படுகின்றது.

•    நீர் மூலக்கூறுகளின் உறைதல் காரணமாக அவற்றினுடைய திணிவுகள் பெரிய கனவளவினை  ஆக்கிரமிப்பதற்கு வழிவகுக்கின்றது.  நீரானது உறைகின்றபோது அது திடீரென கனவளவில் ஏறக்குறைய 9 சதவீதத்தினால் விரைவாக சேர்த்துக்கொள்கின்றது. நன்னீரானது சுமார் 4 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் உயர்ந்த பட்ச அடர்த்தியைக் கொண்டுள்ளது. எமது புவிக்கிரகத்தில் உள்ள திரவைங்களில் நீர்மாத்திரமே திரவநிலையிருந்த திண்ம நிலைக்கு மாறும்போது அடர்த்தியில் அதிகரிக்காத ஒரேயொரு பொருள் ஆகும். 

அட்டவணை: வேறுபட்ட வெப்பநிலைகளில் நீர் மூலக்கூறுகளின் அடர்த்தி

           வெப்பநிலை        (o C)          
அடர்த்தி     (g per cm3)           
                                                           
0 (திண்மம்)
0.9150
0 (திரவம்)
0.9999
4
1.0000
20
0.9982
40
0.9922
60
0.9832
80
0.9718
100 (வாயு)
0.0006


Article by :-   AKSHAYAN.