பண்பாட்டு அம்சங்களில் பௌதிக அம்சங்களின் செல்வாக்கு (Map02)

பண்பாட்டு அம்சங்களின் அமைவில் பெளதி அம்சங்களின் செல்வாக்கினை விபரணம் செய்தல் (தேசப்படம் - தொடர் 01  )

ஒரு பிரதேசத்தின் பண்பாட்டு அம்சங்களின் அமைவிலும் அவற்றின் இயல்பிலும் பௌதிக அம்சங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன.


•    பௌதிக அம்சங்கள் எனும்போது இயற்கையாக பூமியில் தோற்றம்பெற்று அமைந்திருக்கின்ற அம்சங்களைக் குறிக்கும். அந்தவகையில் பிரதான பௌதிக அமசங்களாக தரைத்தோற்றம், வடிநில அம்சம், கரையோர அம்சம் மற்றும் இயற்கைத் தாவரங்கள் என்பன அடங்குகின்றன. அந்த வகையில் இந்தப் பிரதேசத்தில் மலை, மலையுடன் இணைந்த அம்சங்கள், சமவெளிகள்,  காடு, பற்றைக்காடு ஆகிய இயற்கைத் தாவரங்கள், நதிகள் மற்றும் சேற்று நிலங்கள் ஆகிய அம்சங்கள் காணப்படுகின்றன.

•    பண்பாட்டு அம்சங்கள் எனும்போது மனித நடவடிக்கைகளினால் உருவாக்கப்பட்ட அம்சங்களைக் குறிப்பிடலாம். அந்தவகையில் விவசாய நடவடிக்கைகள், குபுடியிருப்புகள், நீர்ப்பாசன அம்சங்கள், வீதிஅமைப்பகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். இந்தப் பிரதேசத்தில் நெல், வீட்டுத்தோட்டம், சேனப்பயிர், மற்றும் பிறவகைப் பயிர்கள் ஆகிய விவசயா நட்வடிக்கைகளும், மனிதக்குபுடியிருப்புகள், பாடசாலை, விழிபாட்டுத் தலங்கள் முதலியனவும், பிரதான வீதி, சிறுவீதிகள் மற்றும் குளம் முதலிய  நீhப்பாசன அம்சங்களும்  காணப்படுகின்றன.

•    பிரதேசத்தின் மத்திய மற்றும் மேற்கு அரைப்பகுதிகளில் நெற்பயிர்ச்செய்கை பரம்பிக் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் அண்ணளவாக ½ பங்கிற்கு மேல் நெல்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்டுகின்றது. இங்கு நெற்பயிர்ச்செயைகயின் அமைவில் பௌதிக அம்சங்களான சமவெளி, ஆறுகள் மற்றுநும் சிறு அருவிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பிரதேசத்தின் சமவெளிகளிலேயே நெற்பயிர்ச்செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக 120 மீற்றருக்கும் 160 மீற்றருக்கும் இடைப்பட்ட பரந்த சமவெளியினை இங்கு காணலாம். அதுமட்டுமன்றி ஒரு சில பகுதிகளில் அண்ணளவாக தொடரலை தன்மை கொண்ட நிலங்களிலும் இங்கு நெற்பியிhச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

•    பிரதேசத்தில் ஆங்காங்கே வீட்டுத்தோட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு வீட்டுத் தோட்டங்களின் அமைவில் சமவெளி அல்லது தொடரலை நிலங்களும் மற்றும் ஆறுகள், சிறு அருவிகள் சேற்று நிலங்கள் ஆகிய நீர்வசதி கொண்ட பகுதிகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

•    பிரதேசத்தின்  மலைச்சாய்வுகள், ஆற்றங்கரையோரங்களில் சேனைப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு மலைச்சாய்வானது நெற்பயிருக்கோ அல்லது வீட்டுத்தோட்ட நடவடிக்கைக்கோ அல்லது செறிவான குடியிருப்புகளுக்கோ பொருத்தமற்றதாக உள்ளதனால் சேனைப் பயிர்மேற்கொள்ளப்படுகின்றது. இதைவிட மலைச்சாய்வுகள் காணப்படுகின்ற சேனைப்பயிர்ந்செய்கையானது ஏற்கனவே அப்பகுதியில் காணப்பட்ட காடுகளை அல்லது புதர்களை அழித்து மேற்கொள்ளப்பட்டிருக்காலாம் என்பதை அருகிலுள்ள காடகள் வெளிப்படுத்துகின்றன. பிரதேசத்தின் தென்கீழ் மூலையில் அமைந்திருக்கும் சேனைப்பயிர் நிலங்களின் அமைவில் ஆறும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.

•    பிரதேசத்தில் தென்எல்லலையின் மத்திய பகுதியிலிருந்து ஆரம்பித்து வடகீழ் மூலைக்கு அருகாமையில் பிரதேசத்தை விட்டு வெளியேறும் பிரதான வீதியினை அவதானிக்கலாம். இவ்வீதியின் நேரான போக்கில் சமவெளி என்கின்ற பௌதிக அம்சம் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. மலைச்சாய்வுகளுக்கு அருகாமையில் வளைந்துசெல்லும் சிறு வீதி மற்றும் மணல்பாதைகள் காணப்படுகின்றன. இத்தகைய போக்கிற்கு தரைத்தோற்ற உயரவேறுபாடுகள்; செல்வாக்குச் செலுத்தியுள்ளன.

•    பிரதேசத்தில் வடகீழ் மூலையில் செறிவான குடியிருப்பினை காணமுடிகின்றது. இதற்கு பிரதேசத்தின் வீதி இணைவு செல்வாக்குச் செலுத்தியுளள்போதிலும் பிரதானமாக இங்கு காணப்படுகின்ற சமதரையானதும் தாழ்வானதுமான தரைத்தோற்ற அம்சம் முக்கியபங்கு வகிக்கிறது. உயர்மலைப் பகுதிகளோ அல்லது காடுகள் உள்ள பகுதிகளில் குடியிருப்புகளை அரிதாகவே காணலாம்.

•    பிரதேச  நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கும் பௌதிக அம்சங்களுக்கும் தொடபுள்ளது. மலைச்சாய்வை அடுத்த இறக்கங்கள் பெருமளவில் களங்களைக் கொண்டுள்ளன. பிரதேசத்தின் மத்தியில் அமைந்திருக்கும் களத்தின் அமைவில் எலகமுவ எனும் குன்று செல்வாக்குச் செலுத்தியுள்ளது.

•    (அனைத்து அம்சங்களுக்கும் புனையாவரைபடத்துடன் தொடர்பை விளக்கவும். புனையா வரைபடங்கள் பெரும்பாலும் விவசாயம், குடியிருப்பு, நீhப்பாசனம், வீதியமைப்பு என்ற அடிப்படையில் வரையவும்)


விபரணத்திற்குரிய தேசப்படம்



(Article By :- B.S.AKSHAYAN )