Home » » சூழல் தின நிகழ்வு - 2013

சூழல் தின நிகழ்வு - 2013

சித்தாண்டி மாவடிவேம்பு பிரதேசத்தில் கல்வி வழங்கி வரும் கல்வி நிலையமான தவசி லேணிங் சிற்றியில் நேற்றைய தினம் (08.06.2013) புவியியல் சூழல்தினத்தை முன்னிட்டு வினாவிடைப்போட்டி நிகழ்வொன்று நடைபெற்றது.  சூழல்தின வினாவிடைப்போட்டி நிகழ்வினை கல்வி நிலைய தலைமையாசிரியர் அக்சயன் அவர்கள் தலைமையேற்று நடாத்தியிருந்தார்.

நிகழ்வில் சூழல்தினம் சம்பந்தமான விழிப்புணர்வு உரை மற்றும் கவிதைகள் வாசிக்கப்பட்டதுடன், தரம் 10 - 13 வரையிலான மாணவர்களுக்கு வினாவிடைப் போட்டியும் நடைபெற்றது. 

நிகழ்வில் கலந்துகொண்ட அணியினருக்கான பரிசில்களை கல்வி நிலைய திட்டமிடலாளர் க.சிவா அவர்கள் வழங்கி வைத்தார். நிகழ்வுகளுக்குரிய ஏற்பாடுகளை புவியியல் வினாவிடை ஏற்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2013. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger