மண் தரமிழத்தல்

மண்ணானது தனது பயன்பாட்டு திறனை இழத்தல் மண்தரமிழத்தல் எனப்படும். மண்ணினுடைய பௌதீக இரசாயண இயல்பகள் பயனபாட்டிற்க ஒவ்வாத முறையில் மாற்றமடைதல் இதன் மூலம் குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் மண்ணனானது நீர் காற்று போன்றவற்றினுடைய செயற்பாடுகளினாலும். மற்றும் உவர்த்தன்மையடைதல் காரணமாகவும் தனது தரத்தினை இழக்கின்றது.


1)    மண்ணரிப்பு :-
•    மண்ணும் போசனைச் சத்துக்களும் இயற்கைக்;காரணிகளான ஓடும்நீர், காற்று, பனிக்கட்டியாறு போன்றவற்றாலும் மானிடக்காரணிகளான காடழிப்பு போன்றவற்றாலும் அரித்துச் செல்லப்படுதல் மண்ணரிப்பு எனப்படுகின்றது. மண்ணரிப்பு நடவடிக்கையில் அரித்தல், அரிக்கப்பட்ட மண்ணை கொண்டுசெல்லல், பின்னர் ஓர் இடத்தில் படியவிடல் ஆகிய செயற்பாடுகள் காணப்படுகின்றன.

    2)    மண்ணரிப்பினை ஏற்படுத்தும் இயற்கைக் காரணிகள்:-
•    கடும் மழைவீழ்ச்சி:- கடுமையான மழைவீழ்ச்சி ஒரு பிரதேசத்தில் ஏற்படுகின்றபோது அங்கு பெய்கின்ற மழைத்துளிகிளின் பருமன் அதிகமாயிருக்கின்ற அதேவேளை மழைத்துளிகள் பூமியில் மிக்கவேகத்துடன் வந்தடைவதனாலும் மண்ணரித்தல் இடம்பெறுவதற்கு துணைநிற்கின்றது.
•    வெள்ளப்பெருக்கு:- நதியானது தனது நீரின் கனவளவு அதிகரிக்கின்றபோது அந்நதியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளின் பரப்பளவும் அதிகரித்துக் காணப்படும். இதன்போது நதிப்படுக்கைகளையண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கினால் மண்ணரிப்பு இடம்பெற ஏதுவாகின்றது.
•    கடல் அலையின் தொழிற்பாடு:- கரையோரப்பிரதேசங்களில் கடலலையின் செயற்பாடு கரையோர மண்ணரிப்பிற்கு காரணமாகின்றது. அலைகள் கரையோர நிலத்திலுள்ள மண்ணை அரித்து கடல்பரப்பை அதிகரிக்கின்றதுடன் குறிப்பிட்ட பிரதேசத்தின் நிலப்பரப்பளவையும் குறைவடையச்செய்கின்றது. இலங்கையில் மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் 685 முஆ2 கரையோரம் பாதிப்படைந்துள்ளது.
•    காற்று:- அதிக வரட்சியுடையதும் தாவரப்போர்வை குறைவான பிரதேசங்களிலும் காற்றின் மூலம் அதிகளவில் மண்ணரித்தல் இடம்பெறுகின்றது. பொதுவாக பாலைவனப்பிரதேசங்களில் அதிகளிவில் மண்ணரிப்பு நிகழ்கின்றது.

3)    மண்ணரிப்பினை ஏற்படுத்தும் மானிடக் காரணிகள்:-
•    காடுகளை அழித்தல்:- இன்று அதிகரித்துவரும் சனத்தொகை பெருக்கம் காரணமாக வளங்கள் அதிகளவில் நுகரப்படுகின்ற அதேவேளை குடியிருப்புகளுக்கான நிலங்களின் தேவையும் அதிகரித்து வருகின்றது. குடியிருப்புக்களை அமைத்துக்கொள்வதற்காகவும், விவசாய நடவடிக்கைகளுக்காகவும், வீதி மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. இலங்கையில் அம்பாந்தோட்டையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுவரும் விமானநிலையத்திற்கான நிலத்தில் உள்ள காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரதேசமொன்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றபோது மண்ணரிப்பு ஏற்படுகின்றது.
•    சேனைப் பயிர்ச்செய்கைக்காக காடுகளை அழித்தல்:- சேனைப்பயிர்ச்செய்கை என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் காடுகளை வெட்டி அவற்றை எரித்து சாம்பலாக்கி அதன் மூலம் கிடைக்கின்ற பசளையை பயன்படுத்தி மழை நீரை பயன்படுத்தி பயிர்செய்யப்படுகின்ற ஒரு முறiயாகும். இதன்போது குறிப்பிட்ட பகுதியில் நேரடியாக நிலத்தில் மழைபெய்கின்றபோது தாவரப்போர்வை இன்மையால் மண்  தின்னலுக்குட்படுகின்றது. உதாரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய பிற்போக்கான ஒரு பயிர்ச்செய்கை முறையினால் மண்ணரிப்பு ஏற்படுகின்றது.
•    உயர் பிரதேசங்களில் கட்டடம் அமைத்தல்:- கடல் மட்டத்திலிருந்து உயரமான மேட்டுநிலங்களில் அல்லது மலைச்சாய்வுகளில் கட்டடங்களை அமைப்பதற்றகாக குறிப்பிட்ட நிலம் கட்டட நிர்மாணிப்பிற்கு ஏற்றவாறு தாவரப்போர்வைகள், மற்றும் உயர்ந்த பகுதிகள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்படுகின்றன. இதனால் அதத்கைய உயர்பிரதேசங்களில் இலகுவில் மண் அரித்துச் செல்ல வசதியேற்படுகின்றது.
•    மட்பாதுகாப்பு அணைக்கட்டுக்களை அகற்றுதல்:- வெள்ளப்பெருக்கிற்கு உட்படுகின்ற பகுதிகளில் நதியின் நீரானது வெளிப்பாயாதவாறு பாதூக்கின்ற வெள்ளப்பாதுகாப்பு அணைக்கட்டுகளை சிறப்பாக பராமரிக்காமல் விடுகின்றபோதோ அல்லது அவற்றை அகற்றுகின்றபோதோ நதியினால் மண்ரிப்பு ஏற்பட வழிஏற்படுகின்றது.
•    கீழ்வளரிகள் மற்றும் மூடு தாவரங்களை அகற்றுதல்:- கீழ்வளரிகள் மற்றும் மூடுதாவரங்கள் நீர் மேற்பகுதியினால் ஓடிச்செல்கின்றபோது நீரை மாத்திரம் வடியவிட்டு அடையல்களையோ அல்லது மண்பொருட்களையோ எடுத்துச்செல்லாது பாதுகாக்கக் கூடியவை. இத்தகைய மூடுதாவரங்களை அகற்றுகின்றபோது பிரதேசத்தின் மட்காப்புதிறன் அற்றுபோக மண்ணரிப்பு ஏற்படுகின்றது.
•    மலைச்சரிவுகளில் பாதுகாப்பற்ற பயிர்ச்செய்கை:- மலைச்சரிவுகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது முழுமையாக நிலத்தை பண்படுத்தி பின்னர் பயிர்செய்கை மேற்கொள்ளப்படுகினறது. பயிர் விளைக்கப்படுகின்ற காலத்திற்கிடையில் மரழைவீழ்ச்சி அப்பதனடப்பட்ட நிலத்தில் மேற்கொள்ளப்படுகின்றபோது மண்ணரிப்பு ஏற்படுகின்றது. உதாரணமாக இலங்கையின் நுவரெலியா, வெலிமடை போன்றபிரதேசங்களில் விளிம்பு நிலங்களில்  மரக்கறிப்பயிர்செய்கை இடம்பெறுவதைக் குறிப்பிடலாம்.
•    அளவுக்கதிகமாக மந்தைகளை மேய்த்தல்:- குறிப்பிட்ட தொரு புல்வெளிப்குதியில் அதன் தாங்குதிறனுக்கேற்றவாறு மந்தைகளை மேய்க்கின்றபோது புல்வெளிகளின் மிள்உருவாக்கம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். அளவுக்கதிகமாக மந்தைகளை மேய்க்கின்றபோது முளைத்துவருகின்ற மிகச்சிறிய புற்கள் கூட மந்தைகளால் உண்ணப்பட்டுவிடுகின்றன. இதனால் புல்வெளிகள் அற்றுப்போய் மண்ணரிப்பு ஏற்படுகின்றது.
•    சுரங்க அகழ்வுகள்:- சுரங்க அகழ்வுகின்போது பாரிய கிடங்குகள் அல்லது குழிகள் ஏற்படுகின்றன. இக்குழிகளின் அருகிலுள்;ள பிரதேசங்களிலிருந்து மழைகாலங்களில் குழிகளை நோக்கி மழைநீர் ஓடிவருகின்றபோது. இதனால் அயற்பிரதேசம் மண்ரிப்பிற்கு உள்ளாகின்றது.
•    மண்ணின் தின்னலுக்கு தாக்குப் பிடிக்க முடியாத விவசாய முறைகள். உதாரணமாக பொருத்தமற்ற சாய்வுகளில்  உருளைக்கிழங்கு பயிர்செய்கைகளை மேற்கொள்ளல்.
•    பல்தேசியக் கம்பனிகளின் செயற்பாடுகள்:- இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தின் மலைச்சாய்வுகளில் புகையிலைச் செய்கையினை இலங்கை புகைலைக் கம்பனி மேற்கொள்ளுதல்.


4)    மண்ணரிப்பினால் ஏற்படும் பாதிப்புக்கள்:-
•    குறுங்கால உற்பத்தித் திறனில் ஏற்படும் தாக்கம்:-
     பயிர்விளைவில் ஏற்படும் இழப்பு
     உள்ளீடுகளில் ஏற்படும் இழப்பு
     நீர் இழப்பு
     மேலதிக முகாமைத்துவ நடவடிக்கை
     காலம் தாழ்த்திய விதைப்புக்கள்
•    நீண்ட கால அடிப்படையில் உற்பத்தித் திறனில் பாதிப்பு:-
     மண்ணின் மேற்படை இழக்கப்படல்
   மண்ணின் நீர் கொள்ளளவு திறனில் குறைவு
     மண்ணின் சேதனப் பொருளின் அளவு குறைதல்
•    தாழ்நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு:- தின்னலுக்குட்படும் பருப்பொருட்கள், படிவுகள் நீர் நிலைகளில் படியவிடப்படுவதனால் நீர்மட்டம் உயர்ந்து சிறிது சிறிதாக கால்வாய்களை மேவிப்பாய்கின்றது.
•    மேலதிக நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் தேவைப்படுதல்.
•    நீர்த்தேக்கங்களின் கனவளவு குறைவடைதல்.
•    நீர்சார்ந்த உயிரினங்கள் பாதிக்கப்படும்.

5)    மண்ணரிப்பினை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகள்:-

•    புற்கள் மூடுதாவரம் என்பவற்றை வளர்த்தல்.
•    மட்பாதுகாப்புகு அணைக்கட்டுக்களை கட்டுதல்.
•    மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
•    காடழிப்பு மற்றும் மட்பாதுகாப்பற்ற விவசாய முறைகளை தடை செய்தல்.
•    நில முகாமைத்துவ முறைகளைக் கடைப்பிடித்தல்.
•    SALT (சாய்வு விவசாய நில தொழில்நுட்பம்) முறையைப் பின்பற்றுதல்.
•    கூட்டு முகாமைத்துவ திட்டங்களை ஏற்படுத்தல்.
•    சமஉயரக்கோட்டு அடிப்படையில் உழுதல்.
•    படிக்கட்டு முறைவிவசாயத்தை மேற்கொள்ளல்.
•    நேர்கோட்டுப் பயிர்ச்செய்கை முறை.
•    மந்தைகளை சுழற்சிமுறையாக நிலங்களில் மேயவிடல்.


6)    மட்பாதுகாப்பு முறைகள்:-
•    பொறிமுறை ரீதியான மட்பாதுகாப்பு முறைகள்:-
     கல்படிக்கட்டுக்கள்
     சமவுயர அணைகள்
     நிர்வெளியேற்ற வடிகால்
     இருக்கை வடிவிலான படிக்கட்டுக்கள்
•    விவசாய ரீதியான மட்பாதுகாப்பு முறைகள்:-
     சமவுயரக்கோட்டு விவசாயம்
     மரவேர்க் காப்பு
     உழுது பயிரிடலைக் குறைத்தல்
     மூடுபயிர்களை வளர்த்தல்
•    உயிரில் ரீதியான மட்பாதுகாப்பு முறைகள்:-
     புல் தடுப்புக்கள்
     மரவரிசை வேலி


7)    மண்ணரிப்பை அளவிடும் முறைகள்:-
•    மண்ணரிப்பினை அளவிடுவதற்கும் கணிப்பதற்கும் என பல்வேறு வகையான சமன்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் சில முக்கியமான முறைகள் இங்கு தரப்படுகின்றன.

•    USLE Model (Univrsal Soil Loss Equation)
·        

ஆண்டு சராசரி மண் இழப்பினை அழவிடுவதற்கு 1965 இல் உருவாக்கம் பெற்றதுடன் அது 1978 ஆம் ஆண்டுகளில் Wischmeier, Smith போன்றோரால் முன்வைக்கப்பட்டது.
         
                  A =R x K x LS x C x P

A – ஆண்டு சராசரி மண்இழப்பு
R – மழைவீழ்ச்சி மற்றும் கழுவுநீர் அரிப்புத்திறன் குறிகாட்டி
K – மண் அரிப்புத் தன்மை
LS – சாய்வு நீளம் மற்றும் சாய்வு விகிதம்
C - மூடுகை முகாமைத்துவம்
P – மண்ணரிப்பு கட்டுப்பாட்டு முயற்சிகள்


Fore Example
                    A = R x K x LS x C x P
                    A= 100 x 0.18 x 1.91 x 0.36 x 0.75
                    A= 9.28 tons/acre/year

·         RUSLE model  ( Revised Universal Soil Loss  Equation) -  1997
·         MUSLE model ( Modified Universal Soil Loss  Equation) – 1985


8)    சாய்வு விவசாய நில தொழில்நுட்பத்தை (SALT METHOD) பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் :-
•    சாய்வான விவசாய நிலங்களில் மண்ணைப் பாதுகாப்பதற்கான செலவு குறைந்ததொரு முறையாக விளங்குகின்றது.
•    தற்போது நடைமுறையிலுள்ள உற்பத்தி முறையுடன் உயிரியல் ரீதியான அரித்தல் கட்டுப்பாட்டு முறைகளை ஒன்றிணைக்கும் ஒரு முறையாக உள்ளது.
•    நிலவளங்களின் நிலைபேண் பயன்பாட்டினை இம்முறை பிரதான நோக்காகக் கொண்டிருக்கின்றது.
•    பல்வேறு பிரதேசங்களுக்கு பிரயோகிக்கக் கூடிதாகவுள்ளது.
•    குறைந்த செலவில் இலகுவாக அமைக்க முடியும்.
•    மண் அரித்தலைக் கட்டுப்படத்துகின்றது.
•    மண்ணின் வளத்தை மேம்படுத்துகின்றது.
•    செயற்கை உரங்களின் பாவனையை குறைக்கின்றது.
•    வரண்ட பருவங்களில் விலங்குகளுக்கான உணவினை வழங்குதல்.





[Article By :- Akshayan BA (Hons) special in Geography  - Email:- akshayansm@gmail.com]