Home » » புதிய கிளையை அமைப்பதற்கான பணிகள்

புதிய கிளையை அமைப்பதற்கான பணிகள்

தவசி லேணிங் சிற்றியானது தொடர்ச்சியாக ஒரேயொரு படிப்பகத்திலும் தரம் 9-13 வரையிலான மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்தது. ஆனால் இவ்வருடத்திலிருந்து எமது கல்வி நிலையத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்துக்கொண்டிருக்கும் சிலரின் வெண்டுகோளுக்கிணங்க தரம் 6 -8 வரையிலான மாணவர்களுக்குமான வகுப்புகளைத் ஆரம்பிப்பதற்கான புதிய கிளையினை ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருந்தோம்.

இன்றைய தினம் புதிய கல்விநிலையக் கிளையின் படிப்பகத்தினை அமைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இப்புதிய கிளைப் படிப்பகத்தினை அமைப்பதற்கான நடவடிக்கைகளின்போது கல்வி நிலைய தலைமை ஆசிரியர் அக்சயன் , கல்வி நிலைய கலாசார இணைப்பாளர் சிவாங்கன், பழைய மாணவர் சங்கச் செயலாளர் சுமதரன், தரம் 13  இல் கல்வி கற்கும் மாணவர்களும் கலந்துகொண்டனர். மேலும்  எமது கல்வி நிலைய புதிய கிளை அமைப்பு வேலைகளில் கிராமத்தைச் சேர்ந்த சிலரும் உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









0 comments:

Post a Comment

 
Our Websites : GEOGRAPHY -Tamil Notes | TLC-Official | TLC-Files
Copyright © 2006-2019. THAVASI LEARNING CITY - All Rights Reserved
Website Design by AKSHAYAN
Proudly powered by Blogger