வெப்ப வரவு செலவு - Heat Budget

புவியினுடைய ஞாயிற்றுக்கதிர்வீச்சின் மொத்த கதிhவீசல் எவ்வாறு புவிமேற்பரப்பு, வளிமண்டலம், வான்வெளி என்பவற்றிற்கிடையில் மாற்றத்திற்குள்ளாக்கப்டுகின்றது என்பதனை வெப்பவரவு செலவு விளக்குவதாக அமைகின்றது. வெப்ப வரவு செலவின் கீழ் புவிச்சூழலானது வளிமண்டலம், வான்வெளி, புவிமேற்பரப்பு என மூன்று படைகளாக பிரித்து நோக்கப்படுகின்றது.



 புவியானது பெறுகின்ற மொத்த ஞாயிற்றுக் கதிர்வீச்சு அல்லது வெப்பம் 100 சதவீதம் என எடுத்துக்கொண்டால் இதில் 30 சதவீதமான சக்தி உடனடியாக வான்வெளியை நோக்கி தெறிக்கப்படுகின்றது. இத்தெறிப்பு அல்பீடோ அல்லது இழப்பு என அழைக்கப்படுகின்றது. இத்தெறிப்பின் மூலம் இழக்கப்படும் சக்தி எச்சந்தர்ப்பத்திலும் உறிஞ்சப்படுவதில்லை. இதில் முகில்களினால் 20 சதவீதமும், வளிமண்டலத்தால் 6 சதவீதமும், புவிமேற்பரப்பால் 4 சதவீதமும் தெறித்தலுக்குட்படுகின்றன.

 தெறித்தலுக்குட்படாமல் எஞ்சியிருக்கும் 70 சதவிதமான கதிர்வீச்சு சக்தி பெற்ற வெயில் என அழைக்கப்படுகின்றது.  இந்த பெற்றவெயிலில் புவிமேற்பரப்பால் (தரை, சமுத்திரம்) உறிஞ்சப்படுவதுடன், வளிமண்டலத்தால் 16 சதவீதமும், முகில்களால் 4 சதவீதமும் உறிஞ்சப்படுகின்றது. எனினும் இந்தப் பரம்பலானது மிகவும் பரந்தளவில் நாளுக்கு நாள் வேறுபடுகின்றது.

 புவிமேற்பரப்பினாலும் வளிமண்டலத்தினாலும் மற்றும் முகில்களினாலும் பெற்ற வெயிலானது அதாவது 70 சதவீதமான கதிர்வீச்சானது இறுதியில் வான்வெளிக்கே திரும்புகின்றது.  ஆனாலும் புவிமேற்பரப்பிற்கும், வளிமண்டலத்திற்கும் இடையில் பல பரிமாற்றங்களின் பின்னரே இது நிகழ்கின்றது. இவ்வாறு பெற்றவெயிலிலிருந்து வெளிச்செல்லும் சூரியக் கதிர்வீச்சு நெட்டலைக் கதிர்வீச்சாக வான்வெளிக்கு அனுப்பப்படுகின்றது.
 நெட்டலைக் கதிர்வீச்சாக வான்வெளிக்கு செல்லும் பெற்ற வெயிலில் புவிமேற்பரப்பிலிருந்து 6 சதவீதமும், முகில்களிலிருந்து 26 சதவீதமும், காபனீரொட்சைட், நீராவி போன்றவற்றிலிரந்து 38 சதவீதமும் வெளிச்செல்கின்றது.


[Article By :- Akshayan BA (Hons) special in Geography  - Email:- akshayansm@gmail.com]