நீரூற்றுக்கள்

தரையின் கீழிருக்கும் நீரானது இயற்கையாகத் தரையின் மேல் பாயும்போது அல்லது தேங்கும்போது அதனை நீரூற்று என்கின்றோம். நீரூற்றானது மலையின் சாய்வுகளிலோ அல்லது பள்ளத்தாக்கின் தாழ்பகுதிகளிலோ அல்லது வழமையான நீர்மட்டத்தை விட தாழ்ந்த பகுதிகள் பள்ளமாக்கப்படும்போதோ இயற்கையாக தோன்றுகின்றது. நீரூற்றுக்கள் நீரியல் வட்டத்தில் இடம்பெறுகின்ற செயன்முறைகளுள் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது.





 நீரியல் வட்டச் செயன்முறையானது, புவிமேற்பரப்பில் பல்வேறு வடிவில் பல்வேறு பகுதிகளில் உள்ள நீரானது பல்வேறு செய்னமுறைகளுக்கு உடபட்டு பூமியை வந்தடைந்து மீண்டும் ஒரு வட்டச் செயல்முறையில் இயங்குவதனைக் குறிக்கும். இங்கு பல்வேறு நீர்நிலைகளில் காணப்படும் நீரானது ஆவியாக்கத்திற்கும், தாவர விலங்குகளிலிருந்து ஆவியுயிர்ப்பின் மூலமும் வளிமண்டத்திற்கு நீராவியாகச் சென்று சேர்கின்றது. ஆங்கு சென்ற நீராவி ஒடுங்கி பனிபடுநிலையை அடைந்து முகில்களாக மாற்றம்பெற்று மீண்டும் பூமிக்கு மழையை கொடுக்கின்றது.

ஆவியாக்கம் இடம்பெறும்போது சமுத்திரப் பகுதிகளில் இருந்து 320000 கனகிலோமீற்றர் நீரும், நிலமேற்பரப்பில் இருந்து 60000 கன கிலோமீற்றர் நீரும் ஆவியாகின்றது. மொத்தமாக 380000 கன கிலோமீற்றர் நீர் ஆவியாகி வளிமண்டலத்தை அடைகின்றது. ஆனால் படிவுவீழ்ச்சியாக பூமிக்கு கிடைக்கும்போது சமுத்திரத்தில் 284000 கனகிலோமீற்றர் நீரும், நிலமேற்பரப்பில் 96000 கனகிலோமீற்றர் நீரும் கிடைக்கின்றது. அதாவது நிலமேற்பரப்பில் மேலதிகமாக 36000 கன கிலோமீற்றர் நீர் கிடைக்கின்றது. இவ்வாறு மேலதிக கிடைக்கின்ற நீரானது மீண்டும் சமுத்திரத்தை ஆறுகள் மூலமாக நிலமேற்பரப்பினூடாகவோ, அல்லது தரைக்கீழ் நீராகவோ சென்று அடையும் இச் செயற்பாடு கழுவு நீரோட்டம் எனப்படுகின்றது.

இவ்வாறு கழுவு நீரோட்டம் தரைக்கீழ் நீராக சமுத்திரத்தை அடைவதற்கு எடுக்கும் முயற்சியின்போதே நீரூற்றுக்கள் உருவாகின்றன. தரைக்கீழ் நீர் நேரடியாக சமுத்திரத்தோடு தொடர்படுத்தப்படுவதுடன், சிலவேளைகளில் தரைக்கிழ் நீர் நதிகளுடனும் தொடர்பு பட்டதாக விருக்கும். இந்நிலமையானது குறிப்பிட்ட பிரதேச பாறை, மண் அமைப்பு மற்றும் தரைத்தோற்ற வேறுபாடு போன்ற காரணிகளாலேயே தீhமானிக்கப்படுகின்றது. 
  தரைக்கீழ் நீராக ஓடுகின்ற கழுவுநீரோட்டமானது தன்னுடைய பாதையில் இடையே ஒரு குறைபாடுள்ள மேற்பரப்பு அல்லது நிலம் தென்படும்போது அதனூடாகத் தென்படுவதே நீரூற்றுக்களாகும். தரைக்கீழ் உள்ள நீரை உட்புகவிடாத பாறையமைப்பைக் கொண்ட பாறைத்தளத்தின்  சாய்வின் வழியே நீரானது நதியினை அல்லது சமுத்திரத்தை அடைவதற்கு தரைக்கீழாக பாய்ந்த வரும். அதன்போது மேலே காணப்படும் மெல்லிய மண் படையானது பாய்ந்து வரும்பாதையில் மிகவும் பலவீனமானதாகவோ அல்லது தாழ்வாக அமைந்திருக்கும்போதோ ஊற்றுக்கள் அமைகின்றன. நீரூற்றுக்கள் அதிகமாக சுண்ணக்கல் அல்லது தொலமைட் போனன்றவற்றை பாறையமைப்பாகக் கொண்ட பிரதேசங்களிலே அதிகளவில் உருவாகின்றன.
  உலகில் பல சிறிய ஊற்றுக்கள் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றபோதிலும் ஒசாக் எனப்படமிடத்தில் அமைந்துள்ள மிஸ்சூரி நீரூற்று மிகப்பெரிய நீரூற்றாகக் கருதப்படுகின்றது. உலகில் காணப்படுகின்ற நீரூ;றுக்கள் பல்வேறு பிரமாணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. நீரூற்றுக்கள் வெளியேற்றும் நீரை அடிப்படையாகக் கொண்டு நீரூற்றுக்கள்   1-8 அளவீடுகள்  கொண்டதாக பிரிக்கப்படுகின்றது. மேலும் நீரூற்றுக்களை சாய்வு நீரூற்றுக்கள் , பள்ளநீரூற்றுகள், வெப்பநீரூற்றுகள் எனபிரதானமாக 3 வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
சாய்வு நீரூற்றுக்கள்:-
 பொதுவாக மலைப்பிரதேசங்களின் சாய்வுகளில் அல்லது வழமையான நீர்ப்பீடத்தை விட மேலமைந்த பகுதிகளில் உருவாகின்ற நீரூற்றுக்கள் சாய்வு நீரூற்றுக்களாக குறி;ப்பிடப்படுகின்றன. இவை பெரும்பாலும் மலையடிவாரங்களிலும் அல்லது நதிளை அண்டிய உயர்பகுதிகளிலிருந்து உருவாகி நதியுடன் கலக்கும் நீரூற்றுக்களும் இத்தகைய சாய்வு நீரூற்றுக்களாகும். இலங்கையின் மத்திய மலைநாட்டில் இத்தகைய சாய்வு நீரூற்றுக்களை அதிகளவில் காணலாம். இத்தகைய நீருற்றுக்கள் சாய்வாக அமைந்த அடித்தள பாறைத்தளங்களினூடாக தரைக்கீழ் நீராக ஓடிவருகின்றபோதே தோற்றம் பெறுகின்றன.
வெப்பநீரூற்றுக்கள்:-
   தரைக்கீழ் நீரானது புவியின் உட்பாகத்தில் கொதிக்கும் நிலையிலுள்ள மக்கமா படையின் வெப்பத்தால் வெப்பரூட்டப்படுவதனாலேயே வெப்ப நீரூற்றுக்கள் உருவாக்கம் பெறுகின்றன. புவியிலுள்ள சில துவாரங்கள் ஊடாக வெப்பநீரும், நீராவியும் வெளியேறும் துவாரத்தை கீசர் (புநலளநச) என அழைப்பர். இவை பெரும்பாலும் எரிமலை வலயங்கள் உள்ள பகுதிகளிலேயே அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் சிலவேளைகளில் சாதாரண பகுதிகளிலும் இத்தகைய நீராவியi வெளியேற்றும் மையங்கள் காணப்படலாம்.
  இவ்வாறு நீராவியை வெளியேற்றும் மையப்பகுதிகளில் காணப்படும் தரைக்கீழ் நீரானது வெப்பமூட்டப்பட்டு தரைக்கு மேலெ ஊற்றாக வெளிப்படும்போது அவை வெப்பநீரூற்றுக்கள் எனப்படுகின்றன. பொதுவாக வெப்பமான நீரைக் கொண்ட நீரூற்றுக்கள் வெப்பநீரூற்றுக்கள் எனவும், நீரானது கொதித்து பீறிட்டு பாயும்போது அவை கொதிநீரூற்றுக்கள் எனவும் சிலவேளைகளில் அழைக்கப்படுகின்றது.
   அமெரிக்காவின் வையோமிங் மானிலத்தில் உள்ள மஞ்சள் கல் தேசிய பூங்காவில்  (Yellow Stoone National park) அமைந்துள்ள நீரூற்று வெப்பநீரூற்றுக்கு சிறந்த உதாரணமாகும். இலங்கையில் 225 இற்கும் மேற்பட்ட வெப்பநீரூற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் 120 இற்கும் மேற்பட்டவை மலைநாட்டுப்பகுதிகளில் பரந்துள்ளன. திருமலையில் உள்ள கண்ணியா நீரூற்று பிரசித்தி பெற்ற ஓர் நீரூற்றாகும். மேலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவஙட்டங்களில் உள்ள கப்பூரல்ல, மகாஓயா, கல்லோயா, கிவுலகம பொன்ற பகுதிகளிலும் வெப்பநீரூற்றுக்கள் காணப்படுகின்றன.
பள்ள நீரூற்றுக்கள்:-
   தரையின் கீழுள்ள நீர்மட்டத்திற்குக் கீழ் மேற்பரப்புத் தரை தாழ்ந்து பள்ளமாகும்போது பள்ளவூற்றுக்கள் உருவாகின்றன. பாலைவனப்பகுதிகளில் தரைக்கீழ் நீர்மட்டம்வரை காற்றின் வாரியிறக்கல் செய்பாடு இடம்பெறுகின்றபோது அவை பள்ளநீரூற்றுக்களை உருவாக்குகின்றன. இத்தகைய நீரூற்றுக்கள் பாலைவனப் பசுஞ்சோலை நீரூற்றுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் புத்தூரில் உள்ள நிலாவரை, ஊரேழுவிலுள்ள பொக்கனை என்பன இத்தகைய பள்ள நீரூற்றுக்களாகும்.